நயினார் நாகேந்திரன்
சமீபத்தில் மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அச்சு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாரே என்ன சொன்னார் ?
அதிமுக தலைமையில்தான் கூட்டணி எடப்பாடி தான் முதல்வர் என்று என்னை நூறு முறை சொல்ல சொல்லி இருக்கிறார். நான் இப்போது வணக்கத்திற்கு பதில் இதைத்தான் சொல்கிறேன். இது இல்லாமல் தினந்தோறும் எடப்பாடி அண்ணனை தொடர்பு கொண்டு அவரிடமும் இதை சொல்ல சொல்லி இருக்கிறார் அமித் ஷா ஜி அப்படியே தினந்தோறும் நான் சொல்லி வருகிறேன். எனவே எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.
சரி திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னீர்களே அது எந்த கட்சி?
ஒரு கட்சியாக கட்சியாக இருந்தால் சொல்லலாம் எல்லா கட்சியும் தான் பேசிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கூட்டணி கட்சிகள் டார்ச்சர் தாங்க முடியாமல் பேசாமல் உங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவா என்று தம்பி உதயநிதி ஸ்டாலின் என்னிடம் பேசினார். நீங்கள் மோடி அமித்ஷாவுடன் பேசுங்கள் இது சம்பந்தமாக முடிவதற்கு அதிகாரம் என்னிடம் இல்லை என்று சொல்லி இருக்கிறேன்.
ஆனால் அண்ணாமலை கடுமையாக திமுக விமர்சனம் செய்கிறாரே?
அது அவருக்கு கொடுத்த அசைன்மென்ட் அந்த வேலையை அவர் பார்க்கிறார்
அன்புமணி ராமதாஸ்
நான் தான் நிரந்தர தலைவர் என்று டாக்டர் ராமதாஸ் சொல்லிவிட்டாரே?
அது உண்மைதான் குடும்ப அட்டையில் அவர்தான் குடும்பத் தலைவர் என்று போட்டு இருக்கிறது அவர் அந்த தலைவர் பதவி தான் சொல்கிறார். பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் பாட்டாளியே இல்லை அப்புறம் எப்படி பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக இருக்க முடியும். பொதுக்குழு செயற்குழு தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா ஆகியோர் என்னை தலைவராக ஏற்கனவே ஏற்றுக் கொண்டு விட்டார்கள் நான் தான் தலைவர் நான் தான் கட்சி. இனிமேல் என்னை வெறும் அன்பு மணியாக அழையுங்கள் எனக்கும் ராமதாசுக்கும் இந்த சம்பந்தமும் இல்லை. தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை ராமதாஸ்
கர்நாடக மாம்பழங்களை ஆந்திராவில் தடை செய்து விட்டார்களாமே?
மாம்பழத்திற்கு இப்போது கட்டம் சரியில்லை. இதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் இது பசுமைத்தாயகம் தலைவி சொல்லி இருக்கிறார். விரைவில் அது நடக்கும்
குடும்ப அரசியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
குடும்பம் என்றால் அரசியல் இருக்க தான் செய்யும் எனக்கு இட்லி பிடிக்கும் என் மகளுக்கு பூரி பிடிக்கும் குடும்ப அரசியலுக்கு இதை விட வேறு உதாரணம் உங்களுக்கு தேவையா? !
சரி நீங்க எந்த கட்சியுடன் கூட்டணி?
2026 இல் யார் என்னை முதல்வராக ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி. அதே சமயம் ராஜ்யசபா உறுப்பினர் மத்திய அமைச்சர் போன்ற தொகுதி உடன்பாடுகளுக்கும் எனக்கு சம்மதம் தான்.
Leave a comment
Upload