தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20250618203147172.jpeg

காமராஜர் குறித்து வீண் விவாதம் வேண்டாம் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்.

அதாவது தலைவர் வந்து பழசை எல்லாம் கிளறாதீர்கள் என்று சொல்றாரு !!

2026-இல் கூட்டணி ஆட்சி அமையும் காங்கிரசைச் சேர்ந்த இரண்டு பேர் அமைச்சர் ஆவார்கள் திருச்சி வேலுச்சாமி.

தலைவரை கூட்டணி கட்சிக்கு கூட தூங்க விட மாட்டாங்க போல தெரியுது ?

திமுக கூட்டணியில் இல்லை என்றாலும் பாஜகவை எதிர்ப்பேன் திருமாவளவன் திட்டவட்டம்.

தலைவர் ஏதோ ரூட் மாறுவார் போல தெரியுது !!

சட்ட விரோத விற்பனையால் 25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது, நடவடிக்கை எடுக்க கோரி லாரி உரிமையாளர்கள் கோரிக்கை.

டாஸ்மாக் மூடிட்டு மணல் விஷயத்த ஒழுங்கா கவனிச்சாலே போதும் போல தெரியுதே !!

வரும் தேர்தலில் எடப்பாடிக்கு நிரந்தரமாக குட்பை சொல்வார்கள் முதல்வர் ஸ்டாலின்.

மருமகன் சொல்லி இருப்பாரோ ?

ஊழலுக்காக அசாம் முதல்வரை மக்கள் சிறைக்கு அனுப்புவார்கள் ராகுல் காந்தி ஆவேசம்.

பால்டிக்சில் இருக்காராம் !!

கூட்டணியில் எனது முடிவே இறுதியானது எடப்பாடி பழனிச்சாமி.

ரொம்ப தைரியமா பேசுறாரு !!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 21-இல் தொடக்கம்.

அப்ப வெளிநடப்பும் தொடங்கும் !!

காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக எடப்பாடி பழனிச்சாமி.

ஆனா முதல்வர் ஜெயிலுக்கு போனது எந்த கட்சியினு கேப்பாங்களே !!

புதிய பாஸ்போர்ட் வேண்டும் சீமான்.

அமெரிக்கால போய் ஏதாவது போராட்டம் நடத்த போறாரோ ?

மக்களைத் தேடி இனிமேல் அதிகாரிகள் வருவார்கள் முதல்வர்.

ஓட்டுக்கு பணம் இனிமே அவங்க தான் தருவாங்களோ !!