தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

தன்யா ரவிச்சந்திரன்

நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி தன்யா ரவிச்சந்திரன் தமிழில் சில பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அருண் விஜய் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். தன்னுடைய காதல் பற்றி இன்ஸ்டாகிராமில் தனது காதலருக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு முத்தம் ஒரு வாக்குறுதிக்கு தான் ஒவ்வொரு பிரேமும் வழி வகுக்கிறது எப்போதும் என் கவுதம் ஜார்ஜ் என்று பதிவு செய்திருக்கிறார். கவுதம் ஜார்ஜ் ஒளிப்பதிவாளர்.

ஜீவா

20250618194126920.jpeg

ஜீவாவின் 46-வது படத்தில் அவருக்கு ஜோடியாக ரபியா கட்டூன் நடிக்கிறார். ஜீவா நடித்த பிளாக் படத்தை இயக்கிய கே ஜி பாலசுப்ரமணியம் இந்த படத்தை இயக்குகிறார்.

கியரா அத்வானி

20250618194329369.jpeg

நடிகை கியரா சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியருக்கு இந்த மாதம் 15-ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது.

பிரியாமணி

20250618195029815.jpeg

பிரியாமணி நடித்த திகுட் வைஃப்இணைய தொடர் தற்சமயம் ஓ டி டி தளத்தில் வெளியாகி உள்ளது. அவரது நடிப்பு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டுகளை பெற்று வருகிறது.

அனுஸ்ரீ

20250618195551763.jpeg

பஹத் பாசிலின் டயமண்ட் நெக்லஸ் படத்தில் அறிமுகமானவர் அனுஸ்ரீ. அதன் தொடர்ச்சியாக மோகன்லால் மம்முட்டி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தன் திருமணம் செய்து கொள்ள தயார், ஆனால் வீட்டோடு மாப்பிள்ளையாக அவர் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார் அனுஸ்ரீ.

மோதல்

20250618200448788.jpeg

நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா நடிக்கும் படம் தி கேர்ள் ஃப்ரெண்ட் ..விக்ரம் பிரபு அனுஷ்கா நடிக்கும் படம் ஹாடி .இந்த இரண்டு படங்களுமே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படம். செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த படங்கள் ரிலீஸ் ஆகிறது. அனுஷ்கா ரஷ்மிகா மோதலுக்கு தயாராகிறார் என்ற பேச்சு தற்சமயம் வரத் தொடங்கி இருக்கிறது.

சாய் பல்லவி

20250618200903654.jpeg

சாய் பல்லவி நடிக்கும் ராமாயணம் படத்தின் பட்ஜெட் 4000 கோடி என்கிறார்கள்.

விஷால்

20250618201054165.jpeg

சூப்பர் குட் பிலிம்ஸ் இன் 99-வது படத்தில் விஷால் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி துஷாரா விஜயன்.

சுட சுட

ஜேசன் சஞ்சய்

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார். தானே இயக்கி தானே தயாரிக்கும் திட்டமும் உண்டாம்.

மோதல்

நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா நடிக்கும் படம் தி கேர்ள் ஃப்ரெண்ட் ..விக்ரம் பிரபு அனுஷ்கா நடிக்கும் படம் ஹாடி .இந்த இரண்டு படங்களுமே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படம். செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த படங்கள் ரிலீஸ் ஆகிறது. அனுஷ்கா ரஷ்மிகா மோதலுக்கு தயாராகிறார் என்ற பேச்சு தற்சமயம் வரத் தொடங்கி இருக்கிறது.

ஒன்பதாவது படம்

கவின் நடிக்கும் ஒன்பதாவது படத்துக்கு இந்த வாரம் பூஜை போடப்பட்டது. பிரபல கனா காணும் காலங்கள் தொடரின் இயக்குனர் கென் ராய்சன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் கவின் ஜோடி பிரியங்கா மோகன்.