தொடர்கள்
அரசியல்
அமெரிக்காவில் குழப்பம்

20250618210501986.jpg

உலகின் மிகப்பெரிய வல்லரசு என்று பெருமை பேசிக் கொண்டிருந்த அமெரிக்காவின் இமேஜ் மெல்ல டேமேஜ் ஆகி கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக உலக நாடுகள் நிறைய பேசுகிறது. அமெரிக்காவிலும் அவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. 79 வயதான ட்ரம்ப் தான் அமெரிக்க அதிபர்களில் அதிக வயதானவர். அமெரிக்காவை தலைசிறந்த நாடாக ஆக்குவேன் என்று பிரச்சாரம் செய்து தான் ஓட்டு கேட்டார். இந்த தேர்தலில் அவருக்கு உறுதுணையாக இருந்து தீவிர பிரச்சாரம் செய்தவர் உலகப் பணக்காரர்களில் ஒருவரான TESLA கார் நிறுவன உரிமையாளர் எலன் மாஸ்க்.டிரம்ப் வெற்றிக்கு இவர் தான் முக்கிய காரணம் என்று கூட அமெரிக்கப் பத்திரிக்கைகள் அப்போது எழுதின. ஆனால் பதவியேற்ற சில வாரங்களிலேயே ட்ரம்ப் எலன் மாஸ்க் உறவு கருத்து மோதலாக மாறியது. ட்ரம்பின் சில நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்தார் எலன் மாஸ்க். ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்றதும் எலன் மாஸ்க்குக்கு என்று ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு செயல்திறன் மேம்பாட்டு துறை என்று பெயர் வைத்து அந்தத் துறைக்கு அவரை ஆலோசகராக நியமித்தார் ட்ரம்ப். ஆனால் வரிச்சலுகை மசோதா குடியேற்ற மசோதா இவற்றையெல்லாம் எதிர்த்த எலன் மாஸ்க் இது அமெரிக்காவுக்கு சரிப்பட்டு வராது. கடன் சுமையை அதிகரிக்கும் என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் பொது மேடையிலேயே இருவருக்கும் லடாய் ஏற்பட தொடங்கியது. எனவே அவர் ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து எலன் மாஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் புதிய கட்சி தொடங்குவது பற்றி மக்களிடம் கருத்து கேட்டார். அவருக்கு ஆதரவாக மக்கள் நிறைய பேர் கருத்து சொன்னார்கள். அடுத்த கட்ட நடவடிக்கையாக ஜூலை நான்காம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்தன்று ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிக்கு எதிராக மாற்றாக அமெரிக்கா என்ற ஒரு கட்சியை தொடங்கலாமா என்று கருத்து கேட்டார். அதாவது கிட்டத்தட்ட இதை வாக்கெடுப்பு மாதிரி நடத்தினார் எலன் மாஸ்க். இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்ட 12 லட்சத்து 48 ஆயிரம் பேரில் 65.4% பேர் அமெரிக்க கட்சி துவங்க ஆதரவு தெரிவித்து வாக்களித்தார்கள். இதைத்தொடர்ந்து அடுத்த நாளே அமெரிக்க கட்சி என்று தன் கட்சி பெயரை அறிவித்தார் எலன் மாஸ்க்.

கட்சி தொடங்கியதும் தனது கட்சியின் பிரதான கொள்கை நவீன தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பது. அரசின் பட்ஜெட் விழிப்புணர்வுடன் இருக்கும். இன்றைய காலத்துக்கும் சூழலுக்கு ஏற்றபடி எங்கள் கட்சி செயல்பாடு இருக்கும் என்று அறிவித்தார். அமெரிக்காவைப் பொறுத்தவரை இரண்டு கட்சி தான். அதாவது குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி இந்த இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தனர். இப்போதும் அப்படித்தான். இப்போது மூன்றாவது ஒரு கட்சியை அமெரிக்க மக்களின் உணர்வை தூண்டுவது போல் அமெரிக்கா கட்சி என்று அமெரிக்கா பெயரிலேயே கட்சி தொடங்கி இருக்கிறார் எலன் மாஸ்க். தென்னாப்பிரிக்காவில் பிறந்தவரான எலன் மாஸ்க் தனது 21-வது வயதில் படிப்பதற்காக அமெரிக்காவுக்கு வந்தார். 2002 -ஆம் ஆண்டில் தான் அவருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்தது. அமெரிக்காவில் பிறந்தவர் இல்லை என்பதால் அவர் அமெரிக்க அதிபராவதற்கு வாய்ப்பில்லை. யாராவது தனது ஆதரவாளர் ஒருவரை அமெரிக்க அதிபராக்கி அவரை ரிமோட் கண்ட்ரோலில் எலன் மாஸ்க் இயக்குவார். இரண்டு பழைய கட்சிகள் மீதும் அமெரிக்க மக்களுக்கு வெறுப்பு. எனவே என் கட்சிக்கு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறார். என்ன நடக்குமோ யார் கண்டார்கள் பார்ப்போம்.