தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்
மதுரை மாநாட்டிலும் திரும்பவும் திமுக பாஜக மீது வசை பாடல் தானே?
ஆமா இப்ப அவங்க ரெண்டு பேர் தானே ஆளுங்கட்சி அவங்கள ஆட்சியில் இருந்து இறக்கினால் தானே நான் முதல்வராக முடியும் பிரதமர் ஆக முடியும் அவங்கள பத்தி தானே பேசணும்?
ஆனா இந்த ரெண்டு கட்சியும் உங்கள கண்டுக்கற மாதிரி தெரியலையே?
எனக்கு பதில் சொல்ல முடியாம அவங்க பயந்து போயிட்டாங்க அதான் உண்மை.
இந்த தகவல் உங்களுக்கு யார் சொன்னது?
எனது அறிவு ஜீவி குழு சொன்ன தகவல் தான் இது அவங்களுக்கு எல்லா விவரமும் தெரியும் எல்லோரிடமும் தொடர்பில் இருக்காங்க அவங்க கிட்ட தான் கூட்டணி பற்றி கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை ,காங்கிரஸ் எல்லாம் பேசுது.
ஏன் நீங்க அவங்க கிட்ட பேச மாட்டீங்களா?
முதல் கட்ட பேச்சு வார்த்தை அவங்களுடன் அவங்க எல்லாம் பேசி முடிவு பண்ணிட்டா தொகுதி உடன்பாடு பற்றி என்கிட்ட பேசுவாங்க.
முதற்கட்ட பேச்சுவார்த்தையில் என்ன சொல்வீங்க?
திமுக ஆட்சியில் அராஜகம் சட்டம் ஒழுங்கு சரியில்லை மக்கள் நம்பிக்கை ஸ்டாலின் இழந்து விட்டார். மோடி கட்சி மதவாத கட்சி இப்படி எல்லாம் அறிக்கை வெளியிட்ட பிறகு கூட்டணி உறுதியாகி விடும். அதன் பிறகு தொகுதி பங்கீடு பற்றி பேசுவோம்.
ஆட்சியில் பங்கு உண்டுதானே?
கண்டிப்பாக உண்டு கூட்டணி கட்சிகளுக்கு துணை அமைச்சர் இணை அமைச்சர் இணை துணை அமைச்சர் இப்படி நிறைய பதவிகள் கை வசம் உண்டு.
Leave a comment
Upload