©Maria Fernanda Rojas Ortiz/Facebook© IBTimes
மரியா ஃபெர்ணாண்டா ரோஜாஸ் ஆர்டிஸ்.
இளம் நர்ஸ். மருத்துவமனையிலிருந்து விமான சேவைக்கு மாறிய முதல் நாள். முதல் நாளே இப்படி ஒரு விதி இருப்பது தெரியாமல் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த செவிலியர் மரியா.
ஜூலை 14ஆம் தேதி லண்டனில் நடந்த விமான விபத்து..... நெதர்லாந்தை சேர்ந்த Zeusch விமான நிறுவனம் இயக்கிய Beechcraft B200 Super King Air மருத்துவ விமானம், லண்டன் சவுத்தெண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டவுடன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்தது. இந்த விபத்தில் இருந்த நான்கு பேரும் உயிரிழந்தனர்.
அவசர மருத்துவ உதவி, மருத்துவம் சார்ந்த உறுப்புகள் எடுத்து செல்வது என இந்த விமானம் பல விதங்களில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.
விமானத்தில் விமான பணியாளர்களான டச்சு நாட்டைச் சேர்ந்த இரண்டு பைலட்டுகள், ஜெர்மனியைச் சேர்ந்த செவிலியர் மரியா மற்றும் ஒரு மருத்துவ நிபுணர் பயணித்திருக்கின்றனர்.
ஒருவரும் தப்பவில்லை.
சவுத்தெண்ட்டில் நடைபெற்ற இந்த விபத்தை கண்டவர்கள், விமானம் புறப்பட்டவுடன் சுழன்று, கீழே விழுந்ததாகவும். விழும் தருணத்தில் விமானம் ஒரு பெரிய வெடிச் சத்தத்தோடு, தீக்கிரையானதாகவும் கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அறிவியல் முன்னேற்றங்கள் எவ்வளவு கண்டிருந்தாலும், விமான விபத்துகள் நிகழாமல் தடுக்கும் யுக்திகளை கண்டறியும் தளத்தை விரிவு படுத்த வேண்டும்.
விமான துறைக்கு இந்த வருடம் சோதனைக் காலம் போலும்.
Leave a comment
Upload