தொடர்கள்
கொடுரம்
" டிரம்ப்பின் முட்டாள் தன முடிவால் தவிக்கும் திருப்பூர் " - ஸ்வேதா அப்புதாஸ்

20250729232206343.jpeg

உலக அரங்கில் திருப்பூர் ஜவுளி என்றால் ஏகப்பட்ட மவுசு தான் .

20250728221851461.jpg

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50% சதவிகிதம் இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிக்க அது 27 ஆம் தேதி காலை அமுலுக்கு வர திருப்பூரில் ஏற்றுமதி செய்யப்பட ரெடியாக இருந்த ரூ .4 ஆயிரம் கோடி ஆயத்த பின்னலாடை முடங்கியுள்ளது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது .

திருப்பூரில் தயாராகும் ரெடிமேட் பின்னலாடைகள் 30 முதல் 35 சதவிகிதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிறது .

20250728222141329.jpg

இதை நம்பி ஆடை ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் அவர்களிடம் பணிபுரியும் ஏராளமான வேலையாட்களின் எதிர் காலம் மிக பெரிய கேள்விக்குறியாகியுள்ளது .

ஏற்றுமதியாளர் ரவீந்தரனை தொடர்பு கொண்டு பேசினோம் ,

20250728222211567.jpg

" என்னுடைய ஆடைகளின் உற்பத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் எனக்கு பெரிய பாதிப்பு இல்லாமல் போனாலும் எங்களுடைய சக உற்பத்தியார்களின் ஆடைகளின் ஏற்றுமதி அந்நாட்டின் 50 சதவிகித இறக்குமதி வரியால் மிக பெரிய கேள்வி குறியுடன் தேக்கத்தில் இருக்கிறது .

அமெரிக்காவில் நம் ஆயத்த பின்னலாடைகள் வாங்குவோர் ஏராளமானோர் அதிலும் கோடை காலம் ,பின் கிறிஸ்துமஸ் சீசனுக்கு

நம் திருப்பூர் ஆடைகளின் சேல்ஸ் அமோகம் .

அதனால் தான் ஆகஸ்ட் , செப்டம்பர் மாதங்களில் ஏற்றுமதி செய்யும் ஆடைகள் அமெரிக்கா சென்று வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் , நவம்பர் மாதத்தில் செல்ல கிறிஸ்துமஸ் , நியூ இயர் என்று பர்ச்சேஸ் படு பிஸியாக இருக்கும் இந்த வருடம் திருப்பூர் ஆடைகள் கிடைக்காமல் தவிக்கப்போகிறார்கள் அமெரிக்க மற்றும் அங்கு வாழும் இந்தியர்கள் .

இதற்கு காரணம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் .

20250728222245641.jpg

இப்பொழுது நமக்கு பெரிய நஷ்டம் என்றால் அமெரிக்கர்களுக்கும் நஷ்டம் தான் .

அமெரிக்க அதிபருக்கும் நம் பிரதமருக்கும் ஏற்பட்ட ஈகோ பிரச்சனையில் சிக்கி தவிப்பது நம் பாவப்பட்ட உற்பத்தியாளர்களும் ஊழியர்களும் தான் .

20250728222327507.jpg

ஒரு விஷயம் நம் ஏற்றுமதி ஆடைகள் உற்பத்தி செய்யும் இந்த மாதங்களில் தான் தீபாவளி பண்டிகை நமக்கு வருகிறது.

அப்பொழுது உற்பத்தி அதிகமாக மில்களில் தினமும் மூன்று ஷிப்ட்டுகள் மற்றும் இரவு ஷிப்ட்டுகள் என்று படு பிசியாக இருக்கும் .

ஊழியர்களுக்கு வருமானமும் அதிகரிக்கும் தீபாவளி போனஸ் என்று களைகட்டும் இந்த வருடம் எல்லாவற்றிற்கும் கேள்வி குறி ஏற்பட்டுள்ளது இதற்கு காரணம் ட்ரம்ப்

தற்போது ட்ரம்ப் நம் நாட்டின் மீது தொடுத்து இருப்பது பொருளாதார போர் என்பது குறிப்பிடத்தக்கது .

இதை நம் பிரதமர் எப்படி கையாள போகிறார் என்பதும் தெரியவில்லை" .என்கிறார் வருத்தத்துடன் ரவீந்திரன் .

திருப்பூர் ஏற்றுமதி ஆடைகளின் பிரிட்டிங் உரிமையாளர் ராஜ்குமார் கூறும்போது ,

20250728222403425.jpg

" எங்க மாவட்டமே மிகவும் கவலையாக இருக்கிறது .

படு பிசியாக தயார்செய்யப்பட்ட ரெடிமேட் கார்மெண்ட்ஸ் ஏற்றுமதிக்காக காத்திருக்க 27 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 50 சதவிகிதம் இந்திய இறக்குமதி பொருள்களுக்கு அறிவித்த வரியால் இடிந்து போய் நிற்கிறோம் .

20250728222709797.jpg

16% வரி என்று துவங்கி 25% வரி உயர்த்தி தற்போது 50% வரி உயர்வு பேர் இடியாக விழுந்துள்ளது மேலும் இந்த வரி 60% என்று உயரும் என்பதில் சந்தேகமில்லை .

2025072822245229.jpg

அமெரிக்காவில் இந்திய இறக்குமதி பொருள்களுக்கு குறிப்பாக ஆயத்த பின்னலாடைகளுக்கு கூடுதல் வரியேற்றம் அபராதமாக விதித்துள்ளது அபத்தமானது .

இந்த ஆபத்தான வரி உயர்வால் திருப்பூரில் சுமார் 18000 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் பாதிக்க பட்டு டீ கடை முதல் அனைத்து தொழிலும் பாதிக்க பட்டு பல லட்சம் பணியாளர்களின் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது .

தீபாவளியை முன்னிட்டு ஆயத்த ஆடைகள் படு மும்முரமாக ரெடியானது ஏற்றுமதிக்கு இந்த மாதத்தில் அமெரிக்கவிற்கு அனுப்பிவைத்தால் அங்கு கிறிஸ்துமஸ் திருவிழாவிற்க்கு ஆடைகள் வாங்க வசதியாக இருக்கும் .

அந்த அமோக வியாபாரத்தில் நம் ஊரில் தீபாவளியை உட்ச்சாகமாக கொண்டாடுவார்கள் எங்கள் பணியாளர்கள் .

இந்த வருடம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 50% வரி மற்றும் அபராதம் என்று அறிவிப்பு உற்பத்தியாளர்கள் பணியாளர்களின் என்று பல லச்சத்திற்கு மேல் வேலை இழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது .

இந்தியாவின் பரிதாப நிலைமையை இந்திய அரசு டிரம்புக்கு தெரியப்படுத்துவது கட்டாயம் ".என்கிறார் .

தற்போது அமெரிக்க வர்த்தகர்கள் வரி குறைவான வங்கதேசம் , வியட்நாம் , மற்றும் ஸ்ரீலங்கா வுடன் வர்த்தக விசாரணையை துவங்கியுள்ளதாம் .

இந்தியா ஆடைகள், இறால், ரத்தினங்கள் மற்றும் நகைகள் போன்ற பொருட்களை அமெரிக்காவுக்கு பெரிய அளவில் ஏற்றுமதி செய்துவருகிறது . அதேசமயம் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கியதை பொறுத்துக்கொள்ளாத அமெரிக்கா 25% கூடுதல் வரி உட்பட விதிக்கப்பட்ட அதிக இறக்குமதி வரிகள் விதித்து இந்திய பொருட்களுக்கு தடை விதித்ததற்கு இணையானது என வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் .2025072822254040.jpg

திருப்பூரில் உற்பத்தியாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி ட்ரம்பின் படத்தை ஏக்கத்துடனும், ஆத்திரத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் .

20250730063316148.jpeg