சென்னை பொருத்தவரை சென்னை வாசிகளுக்கு மழைக்காலம் ஒரு போதாத காலம் தான். அவர்கள் அன்றாட வாழ்க்கை அன்றைய தினம் கேள்விக்குறிதான். ஆனால் அமைச்சர்கள் சென்னையில் மழை நீர் வடிகாலுக்காக இவ்வளவு கோடி செலவு செய்து இருக்கிறோம். வெள்ளமே வந்தாலும் சென்னைக்கு பிரச்சனை இல்லை என்று வீர வசனம் பேசுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் மின்கம்பி அறுந்து விழுந்து ஐந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எல்லாம் மழை நீர் தேங்கி இருந்தது தான் காரணம். ஒருநாள் மழைக்கே சென்னையில் மழை வடிய வழி இல்லாமல் தண்ணீர் தேங்கும் அவலம் தொடர்கதையாக இருக்கிறது. மாநகராட்சி மேயர் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குதுவதை அகற்ற கூடுதலாக தண்ணீர் வடிகால் மின் பம்புகள் வாங்கி இருக்கிறோம் என்று பெருமை பேசுகிறார். திராவிட மாடல் அரசு எப்போதுமே நிரந்தர தீர்வுக்கு யோசிக்க மாட்டார்களோ என்னவோ ?
கடந்த பல ஆண்டுகளாக சென்னை மக்கள், மழைநீர் தேக்கத்தால் பெரும் கஷ்டத்தை அனுபவித்து இது தொடர் கதையாக இருக்கிறது. ஆனால் மழை நீர் வடிகால் பணிக்காக கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கிறோம் என்கிறார்கள் ஆளும் கட்சியினர். ஆனால் அந்தப் பணி முறையாக நிறைவேற்றப்படவில்லை என்பதைத்தான் சென்னை மாநகராட்சி சாலைகள் சுரங்கப்பாதைகள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இப்போது மழை நீர் பிரச்சினையுடன் மின் கேபிள் அபாயமும் சேர்ந்திருக்கிறது. இது மக்கள் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை. நிரந்தர தீர்வுக்கு வழியே கிடையாதா ?
Leave a comment
Upload