தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20250812234031994.jpeg

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி நிரந்தரமாக நீடித்தால் தான் எங்களுக்கு நல்லது உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

திமுக கூட்டணி கட்சி பூரா எடப்பாடி பற்றியே கவலைப்படுதே ?

சீன எல்லை வழியாக இந்தியாவுக்கு ரூபாய் 800 கோடி தங்கம் கடத்தல். அமலாக்கத்துறை தகவல்.

சீனா இந்தியா உறவு மேம்பட வேண்டும் என்று சொன்னது இதற்கு தானா ?

அண்ணாமலை போன்று கூட்டணியை நயினார் நாகேந்திரனுக்கு கையாள தெரியவில்லை டிடிவி தினகரன்.

அண்ணாமலையை மீண்டும் தலைவராக போட சிபாரிசு செய்கிறாரோ என்னவோ !!

எனது வெளிநாட்டு பயணம் மிகப்பெரிய வெற்றி ஸ்டாலின்.

அப்போ அந்த எடப்பாடி கேட்ட அந்த வெள்ளை அறிக்கை தந்து விட வேண்டியதுதானே !!

வைகோ ஒரு தலைவராக தோற்று விட்டார் மல்லை சத்யா.

ஆனால் அவர் மகன் ஜெயிச்சுவிட்டாரே !!

தமிழகத்தில் பாஜகவை வழிநடத்தும் நயினார் நாகேந்திரன் தான் எங்களது தலைவர் அண்ணாமலை.

இதுல எதுவும் உள்குத்து இல்லையே ?

தமிழகத்தில் 45 மாதங்களில் 6700 கொலைகள் .எச்..ராஜா குற்றச்சாட்டு.

டிஜிபி போன வருஷம் 6752 இந்த ஆண்டு 52 குறைந்துவிட்டது என்று அறிக்கை விட போகிறார் பாருங்க !!

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், டூவீலர் விலை குறைப்பு பட்டியலை மோடியின் படத்துடன் விற்பனை கூடங்களில் ஒட்ட வேண்டும். மத்திய அரசு.

ஸ்டிக்கர் அரசியல் டெல்லி வரை போயிடுச்சு !!

ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பிரான்ஸ் அதிபருடன் மோடி ஆலோசனை.

போச்சுடா இவரும் நோபல் பரிசுக்கு ட்ரை பண்றாங்களோ !!

பாஜக கூட்டணி நிகழ்வுகள் சலிப்பை ஏற்படுத்துகிறது அண்ணாமலை

பரபரப்பா ஏதாவது செய்யணும்னு பார்க்கிறாரு !!

செங்கோட்டையனை பாஜகவினர் சந்திக்க மாட்டார்கள் .கே.பி.ராமலிங்கம்.

ஆமா எடப்பாடி கோவிச்சு பாரு !!

டெல்லியில் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு.

ஆன்மீகப் பயணம் தான் சொன்னாரு , அமித்ஷா பயணமா மாறிடுச்சு ?