கத்தோலிக்க மதத்தின் புதிய போப் பதினான்காம் லியோ கடந்த ஞாயிற்று கிழமை செப்டம்பர் 7 ஆம் தேதி வத்திக்கானில் புதிய இரண்டு இளைஞர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் .
புதிய போப் கடந்த மே மாதத்தில் பதவியேற்று புனிதர் பட்டம் வழங்குவது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது .
உலகமே வியக்கவைக்கும் அளவுக்கு 15 வயது கார்லோ அக்குடிஸ் மற்றும் 24 வயது பியர் ஜார்ஜியோ பிரசாதி ஆகியோருக்கு புனிதர் பட்டம் வழங்க பட்டது .
இதுவரை பத்தாயிரத்திற்கு மேற்பட்ட புனிதர்கள் இருக்க இந்த மில்லினியத்தில் முதல் இளையஞர்களுக்கு புனிதர் பட்டம் வழங்க முடிவு செய்து அருளாளர் பட்டத்தை முன்னாள் போப் பிரான்சிஸ் வழங்கினார் .
அவர் தான் புனிதர் பட்டத்தை வழங்குவதாக இருந்ததாம் அவர் உடல்நலக்குறைவால் இறந்து விட அந்த அற்புத வாய்ப்பு புதிய போப் லியோ கரத்திற்கு கிடைத்தது என்கின்றனர் வத்திக்கான் வட்டாரங்கள்.
புனிதராகும் தகுதியை ஒருவர் எப்படி பெறுகிறார் என்றால் அவர் செய்த சேவைகள் தன் வாழ்க்கையை இறைவனுக்கு பலியாக கொடுப்பது .
அன்னை தெரசா எப்படி தெருவில் கிடந்த குஷ்டரோகி நோயாளிகளை அரவணைத்து தன் இல்லத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார் அவரின் சேவைக்கு புனிதர் பட்டம் வழங்க பட்டது .
இந்த இளைஞர்களுக்கு எப்படி புனிதர் பட்டம் வழங்கினார்கள் என்ற கேள்வி உலகம் முழுவதும் சிந்திக்க வைத்த ஒன்று .
அதில் 15 வயதில் இளம் புனிதர் கார்லோ அக்யூட்டிஸ் அனைவராலும் ஈர்க்கப்பட்டுள்ளார் .
கார்லோ அக்யூட்டிஸ் 1991 ஆம் ஆண்டு மே 3 தேதி லண்டனில் பிறந்தார் .
பின்னர் அவரின் பெற்றோர் இத்தாலி நாட்டு மிலானில் செட்டில் ஆக கரோல் அங்கேயே வளர்ந்தார் .
பள்ளியிலும் சரி வெளியிலும் ஒழுக்கமான சிறுவனாக வளர்ந்தவர் .
கடவுள் நம்பிக்கை இல்லாத பெற்றோர் முன் இவரின் அபார கடவுள் நம்பிக்கை அவர்களை ஆலயத்திற்கு அழைத்து வந்தது .
ஆலயத்திற்கு சென்று திருப்பலியில் கலந்து கொண்டு நற்கருணை மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார் .
தினமும் ஜெபமாலை செய்வதை தவிர்த்ததில்லையாம் .
அன்னை மரியாள் மேல் அளவுக்கு அதிகமான பாசத்தை வளர்த்துள்ளார் இந்த இளைஞர் .
இளம் வயதில் பெரும்பாலும் இணையதளத்தில் விளையாடி
கொண்டிருக்கும் இளம் உள்ளங்களின் மத்தியில் கார்லோ சிறு வயதில் கணினி மொழிகளான Java மற்றும் C++யில் புலமை பெற்றவராக திகழ்ந்துள்ளார் .
மிலன் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தில் கணினி கோடிங் பாட புத்தகங்களை படித்து பல நுணுக்கங்களை கற்று குறியீட்டு திறன்களை பல நடைமுறை நோக்கங்களுக்கா பயன்படுத்தியுள்ளார் .
அவரது தந்தைக்காக புள்ளிவிவர திட்டங்களை உருவாக்கியுள்ளார் .
ஆலயங்களில் இணைய வசதி இல்லாத காலம் அவரின் பங்கு குரு கேட்டுக்கொண்டதற்கு இணங்க பங்கு பள்ளிக்கும் இணையதளத்தை உருவாக்கி கொடுத்துள்ளார் .
அதுமட்டுமல்லாமல் தன் கணினி திறன்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து உலகில் நடந்த அத்தனை நற்கருணை புதுமைகளையும் டாக்குமெண்ட் செய்து ஒரு இணையதளத்தை தான் இறப்பதற்கு முன்பாக வெற்றிகரமாக செய்து முடித்தார் .
இந்தியாவில் கேரளாவில் 2001 ஆம் ஆண்டு நடந்த நற்கருணை புதுமையும் அந்த வெப்சைட்டில் இடம்பெற்றுள்ளது .
இவருடைய பெற்றோர் ஆண்ட்ரியா அக்யூட்டிஸ் மற்றும் அன்டோனியா சல்சனோ இத்தாலியாவில் உள்ள பணக்கார குடும்பங்களில் ஒருவராக வாழ்ந்துள்ளனர் .
பல இடங்களில் நடந்த நற்கருணை புதுமைகளான 187 யை பட்டியலிட்டு ஆவணமாக்கி பதிவு செய்து வணக்கம் செலுத்தி வந்துள்ளார் கார்லோ .
தற்போது இவர் கணினி நிரலாளர்கள் மற்றும் இணையத்தின் புரவலர் துறவி என்று அழைக்கிறார்கள் .
அன்னை மரியாளிடம் அதிக பக்தி பற்று கொண்டவராக திகழ்ந்துள்ளார் .
பெற்றோர் கொடுக்கும் பணத்தில் மலர்கள் வாங்கி அன்னைக்கு சூட்டுவது அவரின் வாடிக்கை .
தன் 11 வயதில் லூர்து நகருக்கும் தான் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு பாத்திமாவிற்கு பயணம் செய்து அன்னை மரியாளின் முன் ஜெபமாலை ஜெபித்து வந்துள்ளார் இந்த சிறுவன் .
கார்லோவின் குடும்ப பராமரிப்பாளராக இந்திய நாட்டின் குஜராத்தை சேர்ந்த ராஜேஷ் மொயூர் என்ற இளைஞர் பணிபுரிந்தார் .
கார்லோவுடன் நெருங்கிய நண்பராக இருந்து அவருடன் ஜெபமாலை ஜெபித்து திருப்பலியில் கலந்து கொண்டு 1999 ஆம் ஆண்டு ஞானஸ்தானம் பெற்றார் .எட்டு வயது கார்லோ அவருக்கு சைனீஸ் விருந்து கொடுத்துள்ளார் .
கால்பந்து விளையாடுவதை விரும்பி விளையாடினாலும் நண்பர்களுடன் இணைவதற்க்கு வழிவகுத்து கொண்டார் .
கார்லோவுக்கு மிருகங்கள் மேல் ஆசை அதிலும் நாய்கள் மேல் கொள்ளை ஆசை .
வளர்ப்பு நாய்களை படம்பிடித்து தன் அமெச்சூர் குறும் படங்களில் தனது நாய்கள் மற்றும் பூனைகளை முக்கிய வேடங்களில் நடிக்க வைத்துள்ளார் .
கார்லோ 9 வயதில் போகிமேன், ஸ்பைடர் மென் விளையாடியுள்ளார் ஆனால் அதில் அடிமையானதில்லை என்கிறார் இவரின் அம்மா .
கார்லோவின் தாத்தா பாட்டிக்கு டூரினில் ஒரு முதல் தர சமையல்காரர் இருந்தார் அவர் உணவு தயாரிக்கும் போது தயாரிப்பு யுக்திகளை கற்று கொண்டுள்ளார் அந்த சிறு வயதில் .
சிறு வயதிலே இவர் ஒரு சாக்ஸோபோன் கலைஞர்!.
இப்படிப்பட்ட ஸ்மார்ட்டான இளைஞர் டி ஷர்ட் , ஜீன்ஸ் ஷூ அணிந்து தோளில் லெப் டாப் பேக் உடன் சிக் என்று மிடுக்காக ஒடி ஆடி நடந்த இளைஞர் கார்லோவுக்கு 2006ஆம் ஆண்டு திடீர் என்று லுகேமியா என்ற இரத்த புற்றுநோயால் பாதிக்க பட்டு துன்புற அப்பொழுதும் திருப்பலி ,நற்கருணை வணக்கம் , ஜெபமாலை ஜெபிக்க மறக்கவில்லை .
சிகிச்சை அளித்த மருத்துவர் வலி வேதனை இருக்கிறதா ? என்று கேட்க , " என் வலி பெரிதல்ல எத்தனையோ பேர் மிக பெரிய வலிகளில் துன்புறுவதை விட இது ஒன்றுமில்லை" என்று கூறியுள்ளார் .
2006 ஆம் ஆண்டு 12 ஆம் தேதி தன் 15 வயதில் இறைவனடி சேர்ந்தார் .
அவரின் உடல் இத்தாலியில் உள்ள அசிசி என்ற இடத்தில் செயின்ட் மேரி மேஜர் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு பின் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவரின் உடல் அழியவில்லை என்று உறுதி செய்து கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது .
கார்லோவுக்கு அவரின் இறப்புக்கு பின் பிறந்த இரட்டையர்களான மைக்கேல் மற்றும் தெரசா .
இவரின் புனிதர் பட்டமளிப்பு அன்று போப் திருப்பலியில் முதல் வாசகத்தை வாசித்தவர் கார்லோவின் தம்பி .
ஒரு புனிதராக உயர்த்தப்படுபவர் இரண்டு அற்புதங்களை நிறைவேறியிருக்க வேண்டும் அதை வத்திக்கான் அங்கீகரிக்க வேண்டும் .
கார்லோ இறந்து நான்கு வருடங்களில் 2010 ஆம் ஆண்டு ஒரு பிரேசில் சிறுவன் மேத்தியூ லினஸ் கணைய பிரச்சனையால் அவதியுற்று உண்ணவும் , குடிக்கவும் முடியாமல் அடிக்கடி வாந்தி எடுத்து துன்புற கார்லோவின் மீது பக்தி ஏற்பட்டு திருப்பலியில் அவரின் ஷர்ட்டின் ஒரு பகுதியை தொட்டு ஜெபிக்க உடனடியாக முழுவதுமாக குணம்பெற்று ஆச்சிரியத்தில் முழ்கினார்கள் .
அதே போல 2014 ஆம் ஆண்டு கோஸ்டா ரிக்கா நாட்டை சேர்ந்த 21 வயது வலேரியா என்ற இளம் பெண் சைக்கிளில் செல்லும்போது விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு சிக்கலான நிலைமைக்கு சென்று மூள்ளை சாவு ஏற்பட்டு சாகும் தருவாயில் அவரின் தாயார் அசிசி நகருக்கு சென்று கார்லோவின் கல்லறையில் தனது மகளுக்காக வேண்டினார்கள் அந்நேரம் அவருடைய மகள் மூச்சிவிட்டு பூர்ணசுகம் அடைந்தார் .
தற்போது கார்லோ அக்யூட்டிஸ் ஒரு இளம் புனிதர் .
இவர் 1991 ஆம் வருடம் ஞானஸ்தானம் பெற்றது லண்டன் தூய டோலாரோசா ஆலயத்தில் வழங்க பட்டது .
கடந்த ஞாயிற்று கிழமை வத்திக்கானில் புனிதர் பட்டம் வழங்கும் அதே நேரத்தில் தூய டோலா ரோசா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது .
அந்த திருப்பலியில் மரிய ஸ்வேதா விகடகவி சார்பாக கலந்த கொண்டார் .
செயிண்ட் இன் ஜீன்ஸ் என்ற போர்ட் ஆலய வாயிலில் வரவேற்றது. கார்லோ அக்யூட்டிஸ் திரு உருவ சுரூபம் பவனியாக எடுத்து வரப்பட்டு பீடத்தில் வைக்கப்பட்டது .
அவருக்கு ஞானஸ்தானம் கொடுக்கப்பட்ட தொட்டி , அவரின் ஷூ , ஸ்பைடர்மென் உடை , வீடியோ கேம் ரிமோட் , லேப்டாப் , சாக்ஸோபோன்
அவரின் பள்ளி ,புட் பால் தோழர்களுடன் இருக்கும் படம் என்று அனைத்தையும் பார்த்து மெய்சிலிர்த்து விட்டோம் அவரின் 15 வருட வாழ்க்கையே புனிதமானது தான் என்பது புரிந்தது நமக்கு".
தங்களின் குழந்தைகள் புனிதர் பட்டம் பெறுவதை எந்த பெற்றோரும் பார்ப்பது அரிது .
அதே சமயம் இரண்டு தாய்மார்கள் தங்களின் புதல்வி மற்றும் புதல்வர் புனிதர் படத்தை பெறுவதை பார்த்த அதிர்ஷ்டசாலிகள் .
புனித மரிய கொரட்டியின் அம்மா அசுந்தா கரோலின் மற்றும் 75 வருடத்திற்கு பின் தற்போது புனிதர் கார்லோ அக்யூட்டிசின் அம்மா அன்டோனியோ சல்சானா .
ஊட்டி செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் 7 ஆம் தேதி கார்லோ வின் திருவுருவ சுரூப பவனி பங்கு குரு பெனடிக்ட் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .
இன்றைய இளைஞர்களுக்கு புனித கார்லோ அக்யூட்டிஸ் ஒரு பெரிய வழிகாட்டி என்று சொன்னால் மிகையாகாது .
Leave a comment
Upload