திரிஷா
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் பங்கேற்ற புகைப்படங்களை நடிகை திரிஷா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். .கருப்பு நிற ஆடையில் கண்களை கவரும் படங்களை பார்த்த ரசிகர்கள் வலைதளத்தில் ஹார்டின் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கிஸ்
சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் ப்ரீத்தி ஜோடி நடிக்கும் படம் கிஸ். காதல் ஜோடிகள் கிஸ் அடிப்பதை பார்த்து ஹீரோ அவர்களின் வருங்காலத்தை தெரிந்து கொள்வாராம். இதுதான் படத்தின் கதை.
காயடு லோஹர்
"எனக்கு மேக்கப் எல்லாம் தேவையில்லை. இயற்கையான அழகிலேயே ரசிகர்கள் மனங்களை கவர முடியும்" என்கிறார் நடிகை காயடு லோஹர்.
கல்யாணம் ஆயிடுச்சு
இயக்குனர் ராமின் பறந்து போ படத்தில் சிவாவின் ஜோடியாக கிரேஸ் அண்டனி நடித்தார். தற்போது தனது பேஸ்புக்கில், இன்ஸ்டாகிராமில் இவர் சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். மெல்லிய சங்கிலியை அவர் அணிந்திருக்க உடன் இருக்கும் ஆண் அதை ரசிப்பதாக இருக்கிறது ஒரு புகைப்படம். கூடவே "சத்தங்கள் இல்லை, விளக்குகள் இல்லை, கூட்டம் இல்லை, இறுதியாக, அதனை நாங்கள் நடத்தி விட்டோம் "என்ற வரிகளுடன் ' ஜஸ்ட் மேரிட்' என்று பதிவு செய்திருக்கிறார். ஆனால் அவரை மணந்த அதிர்ஷ்டசாலி புகைப்படம் வெளியிடவில்லை.
தோசா கிங்
சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால் ஜீவஜோதி வாழ்க்கையை மையமாக வைத்து தோசா கிங் என்ற படத்தை த.செ.ஞானவேல் இயக்கப் போகிறார் என்ற பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது.
அதுல்யா ரவி
காந்தக் கண்ணழகி அதுல்யா ரவி அவர் நடித்துள்ள டீசல் பட ரிலீஸ் காக காத்திருக்கிறார்.
யாஷிகா ஆனந்த்
தமிழில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இவள் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வலைதளத்தில் பதிவிடுவார். ஏற்கனவே நாய் தொல்லை பற்றி சர்ச்சை ஆகும் இந்த நேரத்தில் செல்ல நாய்களுக்கு பால் கொடுப்பது கொஞ்சுவது என்ற படங்களை வெளியிட்டு கடுப்பு ஏற்றி கொண்டிருக்கிறார் யாஷிகா.
ஸ்ரீ லீலா
அந்தக் கண்களுக்காகவே காலம் முழுவதும் அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று ஸ்ரீ லீலாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டை பார்த்து நெட்டிசன்கள் ஜொள்ளுவிட ஆரம்பித்திருக்கிறார்கள்.
கௌரி கிஷன்
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 96 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர் நடிகை கௌரி கிஷன் தொடர்ந்து விஜயின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் படத்திலும் நடித்தார். இப்போது தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் காட்டும் கௌரி தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
நாகர்ஜுனா
அமிதாப்பச்சன் சொத்து மதிப்பு 3200 கோடி, ரித்திக் ரோஷன் சொத்து மதிப்பு 3100 கோடி, ஆனால் நாகர்ஜுனாவின் சொத்து மதிப்பு 3500 கோடி. நடிகர்களில் அதிக சொத்து வைத்திருப்பவர் இவர்தானம்.
ரச்சிதா ராம்
கூலி படம் மூலம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்த ரச்சிதா ராம் ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ் ஜோடியாக நடிக்க இருக்கிறாராம்.
அதிதி சங்கர்
ஈரம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கும் புதிய படத்தில் அதிதி சங்கர் கதாநாயகி.
Leave a comment
Upload