தொடர்கள்
அழகு
மும்பை கண்பதி 2025 - பால்கி

20250812210825133.jpgமும்பையில் கண்பதிக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்.

அடாது மழை பெய்தாலும் விடாது நாங்கள் கண்பதி கொண்டாடுவோம் என்று மும்பைக்கர்கள்.

சதுர்த்தியில் ஆகமன் ஆன கணபதி சதுர்த்தசியில் விடைபெறும் விசர்ஜன் தினம் அன்று. மழையோ விட்ட பாடில்லை. சல சல வென வருணன் நகரையே தழுவிக்கொண்டிருந்தான். அவன் அவன் காரியம் செய்ய, கண்பதி பக்தர்களோ தன் பக்தியில் அந்த மழை தடை செய்ய விடவில்லை.

ஆனால், அதோ..அந்த மழையில் கண்பதியை நனைந்துவிடாது அவருக்கு ரெய்ன் கோட் அணிவித்தது போலே நிறமற்ற பிளாஸ்டிக் ஷீட்டினால் மறைத்து இருந்தனர்.

கை தள்ளுவண்டியில் பதினோறு நாளும் ஆராதித்தக்கப்பட்ட கணபதி சிலையை ஒரு ஆனந்த கூத்தோடு ஊர்வலமாய் எடுத்துக் கொண்டு சென்றுகொண்டிருந்தனர். இது தான் நகரெங்கும் அன்றைய கடைசி தின நிகழ்வு. நகரம் முழுவதும் பதினோறு நாளாக ஆட்சி செய்து சிறியதும் பெரியதுமான சிலைகள் கடல், குளம் மற்றும் நீர் நிலைகளை நோக்கி சென்று கொண்டிருந்தன. நகரமே ஒரே ஆனந்த இயக்கத்தில் இருந்தது.

அனைவரின் நாவிலும் கணபதி பப்பா மோர்யா! புட்ச்சா வர்ஷா லௌகர் யா(ஆடுத்த வருஷம் சீக்கிரமே வா )!! என்ற கோஷமே அநிச்ச செயலானது.