கரூர் சம்பவம் ஒரு நபர் ஆணையம் நியமனம்.
அதே டைலர் அதே வாடகை !!
காலி மதுபாட்டில்களை சேமிக்க 1500 குடோன்களை வாடகைக்கு எடுக்க திட்டம்
இதே அக்கறையே அந்த நெல் சேமிப்பதற்காக குடோன் அமைப்பதில் காட்டினால் நல்லது மழையில பாழாப்போகுது !!
இது போன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது கமிஷன் விசாரணையில் உண்மை தெரியும்.
நீங்க நேரில் போய் ஆய்வு செய்ததில் எந்த உண்மையும் தெரியல போல தெரியுது !!
விஜய்க்கு அனுபவம் இல்லாததே காரணம் எடப்பாடி பழனிச்சாமி.
ஆமா உங்களுக்கு எல்லாம் இதுல சர்வீஸ் கொஞ்சம் ஜாஸ்தி தான் !!
விஜய் எப்படி ஒரு தலைவராக இருக்க முடியும் நயினார் நாகேந்திரன்.
அதானே அது அங்க கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு தெரியலையே தலைவரே !!
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் நடந்த துயர சம்பவம் தொல்.திருமாவளவன்.
ஈயம் பூசினா மாதிரியும் இருக்கணும்.... மாதிரி தான் எப்பவும் நம்ம தலைவர் கருத்து இருக்கும் !!
கூட்ட நெரிசலில் இறந்த 40 பேரின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை.
தலைவரே சொல்றதுதான் சொல்றீங்க ரவுண்டா ஒரு கோடி சொல்லுங்க !!
மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் திமுகவினர் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது முதல்வர் ஸ்டாலிடம் காங்கிரஸ் எம்பிக்கள் புகார்
எந்த மக்கள் ? எந்த நல திட்டம் ? என்று தெளிவா சொல்லல !!
அதிமுக பாஜக கொஞ்சமும் பொருந்தாத கூட்டணி விஜய் விமர்சனம்.
தளபதி அது அவங்க பிரச்சனை உங்க பிரச்சனை வண்டி வண்டியா இருக்கு அத பாருங்க !!
பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் கொள்கையில் மாற மாட்டோம் அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து.
ஆமாமா உங்க கொள்கை கொஞ்சம் காஸ்ட்லி தான் !!
நாட்டை கொள்ளை அடிக்கிறது காங்கிரஸ் பிரதமர் விமர்சனம்.
பிரதமரே ஆட்சியில் அவங்க இல்லையே "
தென் அமெரிக்கா நாடுகளுக்கு ராகுல் காந்தி பயணம்.
இந்த இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே எது பற்றியும் கவலைப்படாத ஒரே தலைவர் நம் அண்ணன் தான் !!
விடுதலை சிறுத்தை கட்சி தனித்து இயங்கும் வலிமையுடன் உள்ளது தொல்.திருமாவளவன்.
தொகுதி கூடுதலா வேண்டுமாம் !!
Leave a comment
Upload