தொடர்கள்
அழகு
எங்க கொலு ஊருல பெரிய கொலு தான் – பால்கி

2025903132504781.jpg

ஆமாங்க, அப்படித்தான் மும்பையிலேயே பெரிய கொலு எங்க கொலு தான் என்று மும்பையிலிருக்கும் சண்முகானந்தா சபாவில் அமைந்திருக்கும் கொலு தான் என்று ஒரு வீடியோ உலா வந்த வண்ணமிருந்தது.

2025903132546325.jpg

நவராத்திரி ரவிக்கைத் துணி மாறி மாறி மாறி வந்து கொண்டே இருந்தது வெவ்வேறு திசைகளிலிருந்து, உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் ஏன் வெளி நாட்டிலிருந்தும் வாட்சப்பில் வந்து நிறைந்தன.

2025903132739477.jpg

நல்ல செய்தி தானே… நம்ம ஊரில் நடக்குது, அழைப்பு பல திசைகளிலிருந்தும் வருது.

ஒரு நடை போயிட்டுத் தான் வருவோமே.

அதற்கு முன், நீங்களும் அந்த வீடியோவைப் (பார்த்திருப்பீர்கள்!!! அட இதுவா? எனக்கும் வாட்சப்பில் வந்ததே என்று சொல்வீர்களே!!!) பார்த்துவிடுங்கள் முதல் முறையும் இன்னொரு முறையுமாக.

சண்முகானந்தா சபாவைப் பத்தி தெரியாதா என்ன? எதைச் செய்தாலும் புதுமையாக செய்வார்கள். பண்பாடு மாறாது. அதற்காக நன்றாய் மெனெக்கெடுவார்கள். அந்த முயற்சியில் கடைசி புள்ளி வரை இணைப்பார்கள்.

சுதந்திர தின, குடியரசு தின நாட்டுப்பற்று நிகழ்ச்சிகளாகட்டும், கலைஞர்களின் பிறந்த நாளாகட்டும் – உதாரணத்திற்கு எம் எஸ் சுப்புலக்ஷ்மி பிறந்த நாளாகட்டும், நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளைவாளின் பிறந்த நாளாகட்டும், பாலிவுட்டின் பின்னணி பாடகர் முகமது ரஃபியின் பிறந்த நாளாகட்டும், பார்த்து பார்த்து சம்பந்தப்பட்டவர்கள் முதலாக விஷயங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு மரியாதை செய்துவிடுவார்கள். இவர்கள் கொண்டாடும் விதமே தனி தான். இல்லத் திருமண விழா தோற்றுவிடும் போங்கள். சமீபத்தில் அவர்கள் நாடு முழுவதிலிருந்தும் இலங்கை உட்பட நாதஸ்வரக் கலைஞர்களை வரவழைத்து மரியாதை செய்து கொண்டாடி கொண்டாடி மகிழ்ந்ததை யாரால் மறக்க முடியும். மறுக்க முடியும். இதோ அந்த கொண்டாட்டங்களின் வர்ணனை தெரிவிக்கும் நம்து விகட கவியில் வந்த கட்டுரையின் லிங்க் :-

https://www.vikatakavi.in/magazines/440/14965/naadhaswara-concert-celebrations-in-mumbai.php

அப்படி இருக்கையில் நமது பாரதத்தின் நவராத்திரியைக் கொண்டாடும் விதமாக வளர்ந்துவரும் இசைக் கலைஞர்களின் கச்சேரிகள் ஒவ்வொரு நாளும் ஒரு புறம் ஏற்பாடு செய்திருப்பினும், இந்த விழாவின் சிறப்பாகிய அதுவும் தென்னகத்திலே பிரசித்தமான கொலுவை விட்டு விடுவார்களா என்ன!!!!

பிரமாதமாகத் தான் இருக்கும் என ஒரு எதிர்பார்ப்புடன் தான் அங்கு சென்றேன் சக தர்மிணியோடு.

2025903134407969.jpg

எதிர்பார்ப்பையும் மிஞ்சிவிட்டது அங்கு கண்ட காட்சிகள், கிடைத்த உணர்வு பூர்வ கொண்டாட்ட அனுபவங்கள்

சையானில் இருக்கும் சண்முகானந்தா சபாவின் முதல் மாடியில் நுழைகிறோம்.

2025903133522957.jpg

மிருதங்கம் ஹார்மோனியம் சகிதம் கூடவே ஹார்மோனிய வாசிப்பாளர் புல்லாங்குழலில் சபையின் காற்றை இசை மயமாக்கிக் கொண்டிருந்தார். வாய்ப்பாட்டில் மூன்று பெண்மணிகள் அம்பிகையை அழைத்து ஆர்பரித்துக்கொண்டிருந்தனர்.

இசையோடு வரவேற்ற விதம், அங்கு இருக்கும் வரை இசையில் லயித்த வண்ணம் கொலு பொம்மைகளை பார்க்கும் வசதி பாராட்டப்பட வேண்டியதுதான்.

என்ட்ரியே கிராண்டாக இருந்தது.

ஒரு தீம் எடுத்துக் கொண்டு. பொம்மைகளை நேர்த்தியாக அமைத்திருந்த விதம் நிச்சயம் உள்ளூர் வாசிகளை நன்கு கவர்ந்திருக்கும்.

2025903133622160.jpg

அஷ்டலக்ஷ்மி, தசாவதாரம், பார்க்கடல் கடைதல், கோயிலில் சுவாமி வாகனங்களில் புறப்பாடு, சுவாமி ஊர்வலம், கிருஷ்ணாவதாரம் மற்றும் அவரது லீலைகள். வள்ளி கல்யாணம், மீனாக்ஷி கல்யாணம், ராஜா தர்பார், ஆழ்வார்கள், சித்தர்கள், கனகதாரா ஸ்தோத்திரத்திற்கு பொன் மழை, கல்யாண சீன், சீமந்த சீன், கிராமத்து சீன், மல்யுத்த சீன், புஷ்பக விமானத்தில் ராமரும் சீதையும் அயோத்திக்கு வருகை புரிதல் போன்று நிறைய தீமேடிக்காக அடுக்கப்பட்ட வண்ண வண்ண பொம்மைகள் பார்வையாளர்களை மயக்கின.

படிகள் என்னமோ ஐந்து தான் ஆனால் அதன் அளவவை நீங்கள் பார்க்க வேண்டும் என்று சபாவின் மகளிர் அணியின் லதா கணேஷும், லக்ஷ்மி ராமஸ்வாமியும் ஒரு சேர கூறினர்.

2025903133740666.jpg

ஆமாங்க அடி நீளம் 30.

2025903133829110.jpg

“தமிழ்நாட்டிலிருந்தான் அனைத்து கொலு பொம்மைகளையும் தருவித்தோம். இந்த கொலுவில் சுமார் 700க்கும் மேற்பட்ட பொம்மைகளை உபயோகித்திருக்கின்றோம்” என்றார் லதா கணேஷ்.

இவ்வளவு அழகான கொலு செய்திருக்கிறீர்கள், யாரின் பங்கு அதிகம் என்று கேட்டது தான் தாமதம், “அனைத்து முயற்சிகளுக்கும் டீம் டீம் தான். டீம் வொர்க் தான்” என்றே ஒருமித்த குரலில் கூறுகிறார்கள் அவ்விருவரும்.

“இந்த கொலுவை முழுமையாக அமைத்திட ஒரு வாரம் பிடித்தது” என்று கூறும் லக்ஷ்மி, தொடர்ந்து,” கடந்த இருபது வருடங்களாக சபாவில் நவராத்திரி கொலு வைத்து வருகிறோம். கடந்த வருடம் முதல் பெரிய அளவில் வைக்கத் தொடங்கி இருக்கிறோம். இந்த வருடம் இது வரையில் நாங்கள் வைத்த கொலுவில் பெரியதாகும். பாருங்களேன் நீங்களே என்று முடிக்கிறார் பெருமிதமாக.

மகளிர் அணி சபாக்கு ஒரு பெரிய சொத்து தான்.

எங்க கொலுதான்

எங்க ஊரிலே

பெரிய கொலு தான்.