டாக்டர் ராமதாஸ் அன்புமணி மோதல் உச்சத்தில் இருக்கும் இந்த நிலையில் அன்புமணி எடப்பாடியை தொடர்பு கொண்டு "35 தொகுதி ஒரு ராஜ்யசபா சீட் தேர்தல் செலவு என்று நீங்கள் ஒப்புக் கொண்டால் நான் உங்களுடன் கூட்டணிக்கு வர தயார் என்று சொல்ல கட்சி உங்களிடம் இருக்கிறதா ஐயாவிடம் இருக்கிறதா என்பதே இப்போது கேள்விக்குறியாக இருக்கிறது. முதலில் நீங்கள் இருவரும் ஒன்று சேருங்கள் அப்புறம் பேசலாம் என்று சொல்லிவிட்டார். இதனிடையே தனது சகோதரர் மகன் திருமண அழைப்பிதழ் தர தைலாபுரம் சென்ற முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் அதிமுகவுடன் கூட்டணிக்கு தயார். ஆனால் எடப்பாடியை நான் நேரில்சந்திக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
இப்போது இந்த தகவலும் எடப்பாடிக்கு போய் சேர்ந்து இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு எடப்பாடி பேசுவது போல இல்லை என்கிறார்கள் அவர்கள் தரப்பு.
Leave a comment
Upload