தொடர்கள்
விகடகவியார்
விஜய்யிடம் ராகுல் காந்தி கேட்ட கேள்வி

2025902114242465.jpg

கரூர் சம்பவத்தை தொடர்ந்து ராகுல் காந்தி முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசி தனது அனுதாபத்தை தெரிவித்தார். ராகுல் காந்தி விஜயையும் தொடர்பு கொண்டு பேசினார். விஜயுடன் கிட்டத்தட்ட 15 நிமிடம் பேசியிருக்கிறார் ராகுல் காந்தி. என்ன நடந்தது என்பதை ராகுல் காந்தியிடம் விலாவாரியாக விஜய் சொல்லி இருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட ராகுல் காந்தி இது ஏதாவது சதி வேலை என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா யார் மீது உங்களுக்கு சந்தேகம் என்று கேட்டிருக்கிறார் ராகுல் காந்தி. இந்தக் கேள்வி விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், விஜய் யார் மீதும் புகார் சொல்லாமல் நாங்கள் இதை பற்றி விசாரிக்கிறோம் என்ற விஜய் பட்டும்படாமல் சில தகவல்களை சொல்லி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலை கரூருக்கு அனுப்பி அனுதாபம் சொல்லச் சொன்னதோடு இறந்தவர்கள் குடும்பத்துக்கு இரண்டரை லட்சம் ரூபாய் பண உதவியும் செய்ய வைத்திருக்கிறார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியை போல் அமித்ஷாவும் விஜய்யுடன் பேச விருப்பப்பட்டார். விஜய் பேச மறுத்து விட்டார் என்கிறார்கள்.