தொடர்கள்
சோகம்
" கரூர் விஜய் தேர்தல் விசிட் " - ஸ்வேதா அப்புதாஸ் .

2025903120352938.jpg

20250830230233187.jpg

சினிமாவில் நுழைந்தவர் இயக்குனர் சந்திரசேகர் அவரின் மகன் ஜோசேப் விஜய் அப்பாவின் பாணியில் நடிக்க துவங்கி அரசியலை மையமாக வைத்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

விஜயின் ரசிகர்களின் ஆவலை மனதில் வைத்து அரசியலில் குதத்தார் .

தமிழக வெற்றி கழகத்தை 2024 ஆம் வருடம் பிப்ரவரி 2 ஆம் நாள் துவங்கி ஒரு வருடத்திற்குள் தமிழக இளம் உள்ளங்களின் மனதை கவர்ந்து ரசிகர்கள் இவரை மொய்க்க துவங்கிவிட்டனர் ..

20250830230313742.jpg

ஈஷா யோகா ஜக்கி வாசுதேவ் ஸ்டைலில் நீண்ட ரேம்ப் அமைத்து அதில் நடந்து வந்து ரசிகர்களை சந்தித்து ஈர்த்த விஜய்யை பார்க்க ரசிகர்களின் கூட்டம் மொய்த்தது .

உடன் பௌன்சர்கள் படையுடன் தோன்றும் விஜய் முழுக்க முழுக்க சினிமா பாணியில் அரசியல் களத்தில் குதித்தார்.

20250830230340463.jpg

ஆகஸ்ட் 20 ஆம் தேதி 2025 அன்று இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடக்க 100 மீட்டர் புதிய கொடி கம்பம் சாய்ந்தது ஒரு கேட்ட சகுனமாக பலர் பேசினாலும் அதை விஜய் மற்றும் சகாக்கள் பொருட்படுத்தவில்லை

2026 ஆண்டு, மே மாதம் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிருத்தி அரசியல் கட்சிகள் தங்களின் பிரச்சாரத்தை முன் கூட்டியே துவங்கிவிட்டனர்.

பிரமாண்ட பிரத்தியேக பஸ்சில் பிரச்சார பவனியை துவங்கி விஜய் சனிக்கிழமைத்தோறும் பிரமாண்ட ரோட் ஷோ பிரச்சாரம் நடத்தி வர ரசிகர்களின் கூட்டம் மொய்க்க காவல் துறை திணறுவதை பார்க்க முடிந்தது .

20250830230445640.jpg

செப்டம்பர் 27 ஆம் தேதி சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளுவர் பிரச்சார நிகழ்வுகளை திட்டமிட்டு அதை தவிர்த்து நாமக்கல் , கரூர் பிரச்சார விசிட் என்ற அறிவிப்பு வர ரசிகர்கள் விஜய்யை பார்க்க துடித்துள்ளனர் .

நாமக்கல்லுக்கு காலை வரவேண்டிய விஜய் வரவில்லை கூட்டம் கூடி காத்து கிடந்தனர் .

பகல் 12 மணிக்கு கரூருக்கு வரவேண்டிய விஜய் அங்கும் வந்த பாடில்லை .

அதிகாலையில் இருந்தே ஆண்கள் , பெண்கள் குழந்தைகள் என்று உணவு தண்ணீர் இன்றி காத்து கிடந்தனர் .

நாமக்கல்லில் காத்து கிடந்த ரசிகர்கள் பலர் மயங்கி விழுந்துள்ளனர் .

கரூர் வேலுசாமிபுரத்தில் விஜயின் வருகைக்காக காத்து கிடந்தனர் ரசிகர்கள் கூட்டம் .

விஜயின் வருகை தாமதமாக கூட்டம் கட்டுக்கடங்காமல் போவதை உணர முடிந்தாலும் தாகம் , பசி மயக்கத்தில் இருந்தவர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளனர் .

சிலர் மயங்கி விழுந்துள்ளனர் .

இரவு 7 மணிக்கு விஜயின் பஸ் வர தங்களின் தலைவரை பார்க்க துடித்துள்ளனர் .

20250830230530319.jpg

விஜயின் பஸ் கூட்டத்தில் ஊர்ந்து வர ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு செல்ல விஜய் பஸ்சின் மேல் வந்து பேசுவதற்குள் பலர் மயங்கி விழுந்துள்ளனர் .

20250830230600215.jpg

ஒரு குழந்தை காணவில்லை என்று பெண் கத்த அதை விஜய் கேட்டு தேட சொல்லி பேச அதற்குள் மிக பெரிய அசம்பாவிதம் நடந்தேறிக்கொண்டிருந்தது .

பல உயிர்கள் பறிபோய்விட்டன பலரின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்க அந்த தகவல் புஸ்ஸி ஆனந்த் விஜயிடம் கூற .

பிரச்சனையை உணர்ந்து தண்ணீர் பாட்டிலை தன் வாகனத்தில் இருந்து வீச கூட்ட நெரிசல் பலரை நசுக்கிவிட்டது .

ஏராளமானோர் கூட்டத்தில் சிக்கி நசுங்கி பலர் ஆம்புலன்சுகளில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட வேலுசாமிபுரம் போர்க்களமாக மாற விஜய் உடனடியாக அங்கிருந்து வெளியேறி காரில் திருச்சிக்கு சென்று அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை செல்ல .

ஏர்போர்ட்டில் பத்திரிகையாளர்கள் " "முப்பது பேர் இறந்துவிட்டனர் நின்று

பதில் சொல்லுங்க சார்" என்று கேட்க எந்த பதிலும் சொல்லாமல் சென்று விட்டார் .

அரைமணிநேரத்தில் கரூர் மிக பெரிய சோகத்தில் மூழ்கியது முப்பது பேர் இறந்துவிட்டனர் என்ற செய்தி காட்டு தீ போல பரவி இந்தியாவை உலுக்கிப்போட்டது .

முதல்வர் கரூர் எம் .எல் .ஏ செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு போய் பார்க்க சொன்னார் . மருத்துவமனை சென்ற செந்தில் பாலாஜி அதிர்ச்சியில் உறைந்துபோனார் .

2025083023103892.jpg

தஞ்சாவூரில் இருந்த கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கரூர் விரைந்து மருத்துவமனை சென்று குழந்தைகளின் உடல்களை பார்த்து பதறி போய் கதறி அழுதுவிட்டார் .

20250830231108251.jpg

அதிகாலை 3 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்து கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி உறவுகளுக்கு ஆறுதல் கூறினார்.

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து விரைவில் இந்த கோர சம்பவத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார் .

20250830231139576.jpg

அடுத்த நாளே நீதிபதி கரூர் வந்து தன் விசாரணையை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது .

விஜயின் பரப்புரை நடைபெற்ற வேலுசாமிபுரத்தில் குவியலாக செருப்புகள் உடமைகள் சிதறி குவிந்து கிடந்தன .

2025083023122260.jpg

மொத்தம் 41 உயிர்கள் பறிபோயின .

எம்மூர் என்ற கிராமத்தில் சக்திவேல் என்பவரின் மனைவி மற்றும் 14 வயது மகள் இந்த நெரிசலில் சிக்கி இறந்து விட்டனர் .இவரின் மூத்த மகள் கடந்த வருடம் இறந்து விட தற்போது இவர் அனாதையாக நிற்கிறார் .

டிசம்பரில் திருமணம் செய்ய இருந்த ஜோடி பரிதாபமாக இறந்த சோகம் .

இப்படி பிஞ்சு குழந்தைகள் பரிதாபமாக இறக்க குழந்தையின் உடலை தாய் கட்டி அணைத்து கிடப்பதை பார்த்து பதறிவிட்டார் அ தி மு க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் .

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பாதிக்கபட்ட மக்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.

20250830232012844.jpg

கரூரில் அத்தனை பிஞ்சுகள் கூட்ட நெரிசலில் சிக்கி இறக்க விஜய் மிஸ்ஸிங் என்பது வருத்தமான விஷயம் என்கின்றனர் .

இனியும் இப்படிப்பட்ட அரசியல் கூட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வருமா ? .

ஏன் அரசியல் கட்சிகள் தொலைக்காட்சி வழியாக தங்களின் பிரச்சாரத்தை மேற்கொள்ள யோசிக்கலாமே .

20250830231315740.jpg

ரசிகர்கள் ஏன் உணவு தண்ணீர் இல்லாமல் குழந்தைகளையும் கூட்டி சென்றது சரியா ? என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள் வேதனையுடன்.

சினிமா மோகம் இன்று பல உயிர்களை பலி வாங்கியது.