
தொடர் மழையால் முளைத்து வீணான நெல்மணிகளை காக்க தவறியது ஏன் ? திமுக ஆட்சியை கண்டித்து விஜய் அறிக்கை.
மீண்டும் அரசியலுக்கு வந்துட்டாராம் !!
தந்தை விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன் டாக்டர் ராமதாஸ் மகள் பேட்டி.
நீங்களாவது அப்பா பேச்சை கேளுங்க !!
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை வரவேற்கிறது அதிமுக. முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை.
ஆமா திமுக எதிர்த்தா நீங்க ஆதரவு தெரிவித்து தான் ஆகணும் !!
திமுக ஆட்சிக்கு வரும் என பொதுமக்கள் கூறுகின்றார்கள். ஓபிஎஸ் கருத்து.
அண்ணன் வேற ஏதோ ரூட் போட்டு இருக்காரு போல தெரியுது !!
என் பேச்சை முழுமையாக வெளியிட அரசுக்கு பயம், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் குற்றச்சாட்டு.
ஆக சட்டசபையில் நீங்கள் தொகுதி பிரச்சனையை பற்றி ஏதும் பேசவில்லை என்று தெரியுது !!
பீகாரைப் போல தமிழகத்தில் வாக்குத்திருட்டு நடக்கும் .திருமாவளவன்.
அண்ணனுக்கு நம்ம ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கிறோம் என்பதே அடிக்கடி மறந்து போகுது !!
சென்னை கன மழைக்கு ரப்பர் படகுகளுடன் தீயணைப்பு வீரர்கள் முகாம்.
எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கும் என்று சொன்னது இந்த படகுகளை தானா !!
திமுகவும் காங்கிரசும் ஒரே சிந்தனையில் பயணிக்கின்றன முதல்வர் ஸ்டாலின்.
தலைவர் எந்த கோஷ்டியை சொல்றாருன்னு தெரியலையே !!
அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி என்பதெல்லாம் வன்முறை வார்த்தைகள் அல்ல திருமாவளவன் விளக்கம்.
தலைவர் எப்பவுமே புதுசா யோசிப்பாரு !!
மழையை வைத்து அரசியல் அறுவடைக்கு முயற்சிக்கிறார் எடப்பாடி, ஸ்டாலின் குற்றச்சாட்டு.
அரசியல் பண்ணாம அவியலா பண்ணுவாங்க ? இது ஏற்கனவே நீங்க சொன்ன டயலாக் !!
வாக்காளர் திருத்தப் பணியில் பாஜக தொண்டர்கள் ஈடுபட வேண்டும் நயினார் வேண்டுகோள்.
தலைவரே அதெல்லாம் எலக்சன் கமிஷன் பார்த்துக்கும் கவலைப்படாதீங்க ! அவங்க நம்ப ஆளு தான் !!
ஏரி திறப்பு பற்றி கேட்டால் குற்றமா? செல்வப் பெருந்தகை கேள்வி.
கூட்டணி தர்மத்தில் கேள்வி கேட்பது குற்றம் என்கிறது ஆளுங்கட்சி, தலைவருக்கு இது கூட தெரியல ?
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் நிதீஷ் குமாரை கடத்திச் சென்று விட்டனர் பீகார் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வியாதவ் கருத்து.
உங்க கூட்டணியில் கூட குழப்பம் னு சொல்றாங்க ?
இந்தியாவிற்கே வழிகாட்டும் இடத்தில் திமுக இருக்கிறது வைகோ.
எது எப்படியோ ? உங்க வழி தெளிவா இருக்கு !!
நெல் கொள்முதலில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது. எடப்பாடி பழனிச்சாமி.
அதுக்கு பதில் தான் மது விற்பனையில் சாதிச்சிட்டாங்களே !!

Leave a comment
Upload