
கடந்த ஏப்ரலில் சென்னை திருச்சி மற்றும் கோவையில் அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
நேரு அமைச்சராக உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியாளர்கள் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றினார்கள்.
அதன் அடிப்படையில் அமைச்சரின் இலாகாவில் பணியாளர்கள் தேர்வு செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து அதன் நகலை எங்களுக்கு அனுப்புங்கள் என்று, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி இருக்கிறது.
அந்தக் கடிதத்தில் அமலாக்கத்துறை ரவிச்சந்திரன் மற்றும் அவர்கள் உறவினர்கள் வீட்டில் வங்கி கடன் மோசடி தொடர்பாக நாங்கள் சோதனை நடத்திய போது அமைச்சர் நேருவின் துறையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேர்வு செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன.
பணியாளர் மற்றும் அதிகாரிகள் நியமனத்திற்கு அவர்களின் பதவியை பொறுத்து நபர் ஒருவருக்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை நாங்கள் பறிமுதல் செய்திருக்கிறோம். இந்த ஊழல் தொடர்பாக 232 பக்கங்கள் கொண்டா விரிவான அறிக்கை உங்களுக்கு அனுப்பி இருக்கிறோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறது அமலாக்கத்துறை. இது குறித்து விசாரித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதன் நகல் அமலாக்கத்துறைக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் எங்களால் பணப்பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் அந்த கடிதத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த செய்தி வெளிவந்ததும் அமைச்சர் நேரு வழக்கப்படி இது திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற அரசியல் உள்நோக்கத்துடன் பல ஆண்டுகளுக்கு முந்திய வங்கி வழக்கு ஒன்றை தூசி தட்டி எடுத்து அது பெரிதாக்கும் முயற்சியில் மத்திய அரசின் அமலாக்கத்தை தோற்றுப் போனது. அதன் மற்றொரு முயற்சி தான் இது. எனது துறையில் காலியிடங்களை நிரப்புவதற்கான பணியை அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக தான் செய்வோம். விண்ணப்பங்கள் பரிசீலனை அதைத்தொடர்ந்து இதற்கான தேர்வுகள் நடத்தியது பணியாளர்கள் பட்டியல் இறுதி செய்தது எல்லாமே அண்ணா பல்கலைக்கழகம் தான். இது என் தலையீடு எதுவும் இல்லை இதை நான் சட்டபூர்வமாக எதிர்கொள்வேன் என்று அறிக்கை வெளியிட்டார் அமைச்சர் நேரு.
கோட்டை வட்டாரத்தில் இது பற்றி விசாரித்த போது நேரு இன்னொரு செந்தில் பாலாஜி ஆகிவிட்டார். இந்த வழக்கிலிருந்து அவ்வளவு சுலபமாக அவர் தப்பிக்க முடியாது. அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு நடத்தியது என்பது உண்மை, நியமன ஆணை யாருக்கு அனுப்ப வேண்டும் என்பதை நேரு தான் முடிவு செய்தார். அமலாக்கத்துரை சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை என்கிறார்கள். இப்போது ஆளுனரிடம் அமைச்சர் நேருவை பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் மனு தர இருக்கிறது.ஆளுநரை பொறுத்தவரை இதற்காகத்தான் அவர் 'வெயிட்டிங் '. எனவே நேருக்கு ஆபத்து என்பது மட்டும் உண்மை.

Leave a comment
Upload