
கரூர் சம்பவத்துக்கு பிறகு சைலன்ட் மோடில் இருந்த விஜய் கடந்த சில நாட்களாக ஆக்டிவாக இருக்கிறார். இறந்து போன குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக வழக்கப்படி அவர்களை பனையூருக்கு அழைத்து வந்து கண்ணீர் மல்க காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்கிறது தமிழக வெற்றி கழக தரப்பு. இந்த நிகழ்ச்சிக்கு உள்ளே என்ன நடந்தது என்பது பத்திரிகையாளர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த சந்திப்பு எல்லாம் முடிந்து விவசாயிகளை வஞ்சித்து விட்டது உரிய நேரத்தில் நெல் மூட்டைகளை தமிழக அரசு கொள்முதல் செய்யாமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவார்கள் என்றெல்லாம் அறிக்கையில் குறிப்பிட்ட நடிகர் விஜய் வழக்கப்படி அடுத்து எங்கள் ஆட்சி விவசாயிகள் துயர் துடைப்போம் என்ற வார்த்தைகள் எல்லாம் இல்லை.
இப்போதைக்கு விஜயின் அடுத்த மூவெல்லாம் நிதானமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. எப்போதும் நிருபர்களை சந்திக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு பதில்கட்சியின் இணை பொதுச் நிர்மல் குமார் நிருபர்களை சந்தித்தார்.கூட்டணி பற்றி 30 நாட்களுக்கு முன்பு இருந்த நிலைப்பாடு தான் இப்போதும். நீங்களாகவே கற்பனையாக ஏதோ சொல்லி விவாதம் செய்து கொண்டிருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று பதில் சொன்னார். அதாவது கூட்டணிக்கான பிள்ளையார் சுழி இது எடப்பாடி தனது கூட்டத்தில் தென்பட்ட தமிழக வெற்றி கழக கொடியை காண்பித்து ஒரு பொதுக் கூட்டத்தில் குஷியாக பேசினார். அதற்கு நிர்மல் குமார் அது அவர் கருத்து எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லிவிட்டார்.
கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சிலரையும் குற்றவாளிகளாக சிபிஐ சேர்த்திருக்கிறது. அவர்களிடம் சிபிஐ விசாரணையும் செய்து வருகிறது. இப்போதைக்கு கொள்கை எதிரி என்று பாஜகவை விமர்சனம் செய்த விஜய் தொடர்ந்து அப்படியே செய்வாரா என்ற சந்தேகம் வரத் தொடங்கி இருக்கிறது. இப்போதைக்கு அவரது திமுக எதிர்ப்பு மட்டுமே தொடர்கிறது.
நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்த இருக்கிறார் விஜய். நிர்வாகிகள் பட்டியலை சிறிய மாறுதலுடன் வெளியிட்டு இருக்கிறார் விஜய். அதில் இயக்குனர் சந்திரசேகர் பரிந்துரையில் சிலருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
மெல்ல சந்திரசேகர் விஜய் ஆலோசகராக உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறார். சிபிஐ விசாரணை டெல்லி விஷயம் போன்றவற்றை ஆதவ் அர்ஜுனாவிடம் ஒப்படைத்து இருக்கிறார். வாக்காளர் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து திமுக அரசியல் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு விஜய் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் விஜய் தரப்பு கலந்து கொள்ளுமா என்பது இன்றுவரை சஸ்பென்ஸ்.
அப்படி கலந்து கொண்டால் அது பாஜக எதிர்ப்பு தொடரும் என்பதாக விஜயின் முடிவு கவனிக்கப்படும். அதேசமயம் பாஜக கூட்டணியில் விஜய் சேருவதற்கான அழுத்தம் பல முனைகளில் இருந்து விஜய்க்கு வந்து கொண்டிருக்கிறது. நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் தொடர்ந்து விஜயின் தொடர்பு எல்லையில் இருக்கிறார்.

Leave a comment
Upload