கத்தோலிக்க மதத்தில் மிக முக்கியமான வழிபாடு என்பது ஜெபமாலை ஜெபிப்பது .

ஐம்பத்திமூன்று அழகிய மணிகளை விரல்களில் சுழற்றி ஜெபிக்கும் ஜெபமாலை ஒரு அற்புத ஜெபம் என்கின்றனர் .
ஏசு கற்பித்த 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே ' என்ற ஜெபத்தில் துவங்கி பத்து மணிகள் மரியாளுக்கு காபிரியேல் வான தூதர் மரியாளை சந்தித்து ஏசு மரியாளின் கருவில் உருவாகியுள்ளார் என்று அறிவித்த ,
" அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர் பெற்றவரே உம்முடைய திருவயிற்றின் கன்னியாகிய ஏசுவும் ஆசி பெற்றவரே " என்ற அறிவிப்பை ஜெபிப்பது தான் ஜெபமாலை வழிபாடு .
ஜெபமாலை ஜெபிப்பதை வலியுறுத்தியதே அன்னை மரியாள் என்பது ஆச்சிரியமான ஒன்று !.

1917 ஆம் ஆண்டு போர்ச்சுகீல் நாட்டில் பாத்திமா கிராமத்திற்க்கு அருகில் மூன்று மேய்ப்பர் குழந்தைகளான லூசியா சாண்டோஸ் , பிரான்சிஸ்கோ மார்ட்டோ மற்றும் ஜெசிந்தா மார்ட்டோ வுக்கு காட்சியளித்த மரியாள் ஜெபமாலை ஜெபிக்க வேண்டுமென்றும் பாவ மன்னிப்பு பெற வேண்டுமென்று கூறியுள்ளார் .

மே மாதம் 13 ஆம் நாள் துவங்கி தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை குழந்தைகளுக்கு காட்சி கொடுத்துள்ளார் மரியா .
தான் 'ஜெபமாலை லேடி ' என்று கூறியுள்ளார் .

1917 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி மரியாள் காட்சி கொடுத்த அதே இடத்தில் மூன்று குழந்தைகளின் கூறியதை கேட்டு எழுபதாயிரம் மக்கள் குடியிருக்க பலத்த மழை பெய்ய அதை பொருட்படுத்தாமல் மரியாளை காண காத்திருந்திருக்கிறார்கள் .அப்பொழுது சூரியனின் அதிசியம் நிகழ்ந்துள்ளது.
.
பலத்த மழை நின்று மேகங்கள் உடைந்து சூரியன் வானத்தில் சுழன்று நிறங்கள் மாறி சூரியன் நடனம் போல ஆடியுள்ளது .

கொட்டி தீர்த்த மழையால் அந்த பகுதி வெள்ளமாக காட்சியளிக்க சூரியனின் நடனத்தால் நொடி பொழுதில் காய்ந்து போனதாம் .
முதல் உலகப்போர் விரைவில் முடிவுக்கு வரும் இறை பக்தியில்லாத ரஷ்யவிற்காக
ஜெபமாலை ஜெபியுங்கள் என்று மரியாள் கூறியது உண்மையானது .
சிறுமி லூசியா "வானத்தில் இருந்து ஒரு அழகிய பெண் வெள்ளை உடையணிந்து சூரியனை போல பளிச் என்று தோன்றி "தினமும் ஜெபமாலை ஜெபிக்க உலகத்தில் அமைதி மற்றும் போர் முடிவுக்கு வரும் " என்று கூறியுள்ளார் .
தொடர்ந்து மூன்று குழந்தைகளுக்கு ஆறு மாதங்களில் அதே 13 ஆம் தேதி தோன்றியுள்ளார் மரியாள் .
அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி பலத்த மழைக்கு பின் சூரியன் அதிசியம் நடந்த பின் மரியாள் தோன்றி ஒரு சிறிய ஆலயம் கட்டவேண்டும் என்று கூறி ஜெபமாலை ஜெபிக்க கூறியுள்ளார்.

அன்றிலிருந்து ஜெபமாலை வழிபாடு தொடர மரியாளின் ஏராளமான அற்புதங்கள் தொடர்கின்றன .
ஜெசிந்தா மற்றும் பிரான்சிஸ்கோ நீண்ட உடல் நல குறைவால் இறந்து போனார்கள் .
2017 மே 13 ஆம் நாள் அன்னை மரியாளின் பாத்திமா காட்சியின் நூறாவது ஆண்டு விழா அன்று போப் பிரான்சிஸ் ஜெசிந்தா மற்றும் பிரான்சிஸ்கோவை புனிதர்களாக உயர்த்தினார் .

லூசியா கார்மெலிட் கன்னியாஸ்திரியாக வாழ்ந்து 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் நாள் 97 வயதில் ஜெபமாலை ஜெபித்த வண்ணம் இறைவனடி சேர்ந்தார் .
அக்டோபர் மாதம் ஜெபமாலை மாதமாக உலகமுழுவதும் சிறப்பிக்க படுகிறது .
ஜெபமாலை அன்னையின் திருவிழா அக்டோபர் 7 ஆம் தேதி சிறப்பிக்க படுகிறது .
1571 ஆம் வருடம் துருக்கி படையெடுப்பிலிருந்து ஐரோப்பிய கிறிஸ்தவ மண்டலத்தை பாதுகாத்த கடற்படை வெற்றியின் நினைவாக ஜெபமாலை அன்னையின் திருவிழா சிறப்பிக்க படுகிறது .
ஓட்டோமான் பேரரசு 900 ஆண்டுகள் ஐரோப்பியவை ஆக்ரமித்து கொண்டிருந்தது கிறிஸ்தவ நிலங்களை கையக படுத்தி மத்திய தரைக்கடலில் கடல் போர் அச்சறுத்தின .
போப் ஐந்தாம் பயஸ் ஜெபமாலை ஜெபிக்க எல்லோரிடமும் வலியுறுத்தினார் .
ஜெனோவா , ஸ்பெயின் மற்றும் போப் நாடுகள் உள்ளிட்ட கத்தோலிக்க கூட்டணியான புனித லீக்கை ஒன்றிணைத்து ஜெபமாலை துணையுடன் கடற்படைகள் அக்டோபர் 7 ஆம் நாள் கிரேக்கத்தின் மேற்கு கடற்கரைக்கு அருகில் துருக்கியர்களை எதிர்த்து கரத்தில் ஜெபமாலை ஏந்தி ஜெபித்து முன்னேற 200 கப்பல்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது .
ஜெபமாலை துணையுடன் 300 துருக்கிய கப்பல்கள் கைப்பற்றப்பட்டது 13 கப்பல்களை தவிர இந்த போர் வெற்றி ஜெபமாலை உதவியால் தான் என்று போப் அறிவித்து இந்த அக்டோபர் 7 ஆம் தேதி அன்னை மரியாளுக்கு நன்றி செலுத்தும் நாளாக அர்ப்பணித்தார் .
பின்னர் போப் 13 ஆம் கிரெகோரி இந்த நாளை ஜெபமாலை அன்னையின் விழாவாக மாற்றினார் .
உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் ஜெபமாலை மாதமாக சிறப்பிக்க பட்டு வருகிறது .
அதே போல 1858 ஆம் வருடம் பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் பிப்ரவரி 11 ஆம் நாள் ஆடுமேய்க்கும் பெர்னாடெட் என்ற சிறுமிக்கு காட்சி கொடுத்து ஜெபமாலை ஜெபிக்க கூறியுள்ளார் மரியாள் .
அதன் பின் 18 முறை அந்த சிறுமிக்கு காட்சி கொடுத்து ஜெபமாலை ஜெபிக்க கூறியுள்ளார் மரியா .

கோவை கருமத்தம்பட்டி ஜெபமாலை மாதா பேராலய விழாவும் அக்டோபர் 7 ஆம் தேதி சிறப்பிக்க படுகிறது .

கடந்த சனிக்கிழமை நீலகிரியின் முதல் கத்தோலிக்க ஆலயமான ஊட்டி தூய மோட்சராகிணி ஆலயத்தில் காலை 6 மணிக்கு வாழும் ஜெபமாலை குழுவினர் துவங்கி மாலை 5 30 வரை ஆயிரம் மணி தொடர் ஜெபமாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தினமும் ஜெபமாலை ஜெபிக்கும் போது ஒவ்வொரு மணியில் அருள் நிறைந்த மரியே என்று சொல்லும்போது மரியாளின் கரம் நம்மை பற்றிக்கொள்வதை உணர்கிறோம் என்கின்றனர் .
எல்லா மாதா கோயில் பங்குகளில் ஒரு மாதமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் மாதாவின் சுரூபத்துடன் குழுவாக சென்று ஜெபமாலை ஜெபித்து வந்தது ஒரு திருவிழா கோலம் தான் .

கடந்த 12 ஆம் தேதி ஜெபமாலை அன்னையின் மாதத்தை சிறப்பிக்க அபுதாபி செயின்ட் .ஜோசப் பேராலயத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மரியாளின் சுரூபங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு ஜெபமாலை ஜெபிக்கப்பட்டது .
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளில் உள்ள அன்னை மரியாளின் சுரூபங்கள் இடம்பெற்றிருந்தன .

அக்டோபர் 25 ஆம் தேதி கேரளா ஆலப்புழாவில் உள்ள கிருபாசனம் அன்னை மரியாளின் ஜூபிலி மிஷன் ஆலயத்தில் இருந்து ஒரு லட்சம் அன்னையின் பக்தர்கள் ஒன்று திரண்டு எட்டு மணிநேரம் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு மாபெரும் ஜெபமாலை யாத்திரையை மேற்கொண்டு உலக சமாதானத்திற்கு ஜெபமாலை ஜெபித்து சென்று ஆர்த்துங்கல் புனித ஆண்ட்ரு பசிலிகா பேராலயத்தை அடைந்து சிறப்பு திருப்பலி நடந்தது உலகத்தின் பார்வையில் பிரதிபலித்துள்ளது .

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் தினமும் ஜெபமாலையுடன் கடந்து செல்வது அற்புதமான ஒன்று தான் .

Leave a comment
Upload