
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி 1973-ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது . ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி பல வரலாறுகளைப் படைத்திருக்கிறது. தோல்வியை சந்திக்காத அணி அது என்று சொல்லலாம். 2017 -இல் உலகக்கோப்பை அரை இறுதியில் இந்தியாவிடம் தோற்றது . அதன்பிறகு அடுத்து 15 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடிய எல்லா நாடுகளையும் தோற்கடித்து சாதனை படைத்தது ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி. இப்போது மீண்டும் இந்தியாவிடம் தோற்று இருக்கிறது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமை இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு சேரும்.

ஆஸ்திரேலியா இன்னொரு வரலாறையும் எதிர்கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்கள் வரை தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எந்த அணியையும் 300 ரன்கள் கடக்க விட்டதில்லை. அந்த சாதனையையும் முறியடித்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணிதான். மூன்று முறை இந்திய மகளிர் அணி 300 ரன்கள் தாண்டி சாதனை செய்திருக்கிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான இருதரப்பு ஒருநாள் போட்டியில் டெல்லியில் 369 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. நேற்று அரை இறுதியில் 338 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றது.

(ஜெமிமா ரோட்ரிக்ஸ்)
ஆஸ்திரேலியா அணி இதுவரை 388 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறது. அதில் 310 போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்று இருக்கிறது. இந்த ஆண்டு 13 போட்டிகளில் விளையாடியது, 11 போட்டிகளில் வெற்றி பெற்றது இரண்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது. அந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றது. கடைசிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணம் ஷெஃபாலி, ஹர்மன்ப்ரீத்கவுர், தீப்தி, ஜெமிமா, ரிச்சா, அமன்ஜோத் கவுர் மிக சிறப்பான பேட்டிங் யூனிட் அமைந்தது வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது அதிரடி ஆட்டம் மூலம் உலகெங்கும் உள்ள ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்த வரலாற்று மிக்க சதம் இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. ஆட்டம் இழக்காமல் அவர் அடித்த 127 ரன்கள் தான் இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.இந்த ஆல் ரவுண்டர் 2023-இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகி ஒரு நாள் போட்டி டி 20 ஓவர் எல்லா போட்டிகளிலும் முத்திரை பதித்திருக்கிறார். 25 வயது ஜெமிமா சிறந்த ஹாக்கி விளையாட்டு வீரரும் கூட .
பாரம்பரியமிக்க ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இல்லாத ஒரு இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கிறது. இந்தியா தென்னாப்பிரிக்கா இரண்டுக்குமே இது ஒரு வரலாற்று சாதனையாக தான் இருக்கும்.
ஆண்கள் கிரிக்கெட்டுக்கு சமமாக இப்போது மகளிர் கிரிக்கெட்டும் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
இதுவும் ஒரு சாதனைதான்.
ஆஸ்திரேலியாவில் ஆண்கள் கிரிக்கெட் இழக்கும் மானத்தை தூக்கி நிறுத்துகிறது இந்திய மகளிர் அணி.

Leave a comment
Upload