ருக்மணி வசந்த்

காந்தாரா சாப்டர் 1 படத்தில் ருக்மணி வசந்த் கனகவதி என்ற கதாபாத்திரத்தில் மிடுக்கான தோற்றம், வசீகரிக்கும் அழகென இந்திய சினிமாவை தன் பக்கம் திருப்பி இருக்கிறார் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். இப்போது நடிகை கனகவதி பாத்திரத்திற்கு தான் எப்படி மாறினோம் என்பதை வீடியோ மற்றும் போட்டோக்கள் மூலம் சமூக வலைதளத்தில் விளக்கி இருக்கிறார்.
அஜுத் டாட் -டூ

கேரளா,பாலக்காடு அருகேயுள்ள பெருவெம்பு, ஊட்டு குளங்கரை பகவதி அம்மன் கோவிலில் அஜித் தனது குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்தினரோடு தரிசனம் செய்த படங்கள் இணையத்தில் வைரல்.அஜீத் தனது மார்பின் வலது புறத்தில் 'டாட்டூ' செய்திருக்கும் பகவதி அம்மனின் படமும் பெரிய அளவில் வைரல் ஆகியிருக்கிறது.
அரசன்
சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்துக்குள் முடிந்து விடுமாம். வரும் தமிழ் புத்தாண்டுக்கு இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது தயாரிப்பு நிறுவனம். சூர்யாவின் கருப்பு படமும் தமிழ் புத்தாண்டுக்கு தான் ரிலீஸ் சூர்யாவா? சிம்புவா ஜெயிக்கப் போவது யார் என்பதுதான் இப்போதைக்கு சஸ்பென்ஸ்.
100 கோடி

பிரதீப் ரங்கநாதன் நடித்த "லவ் டுடே", "டிராகன் ", "டியூட்" என்று தொடர்ந்து மூன்று படங்களும் வசூலில் நூறு கோடி என்று ஹாட்ரிக் சாதனை செய்திருக்கிறார். நடிகர் ஆனாலும் அடக்கத்துடன் "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை" என்கிறார்.
பிரியாமணி

ஜனநாயகம் படத்தில் பிரியாமணியும் நடித்திருக்கிறார். படம் பற்றி கருத்து கேட்டால்" படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்" என்கிறார் நடிகை.
நயன்தாரா

நயன்தாராவின் கவனம் இப்போது டோலிவுட் பக்கம் திரும்பி இருக்கிறது. பாலையாவின் புதிய படத்தில் நயன்தாரா தான் அவருக்கு ஜோடி.
ரவீனா

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 46-வது படத்தில் அவருக்கு ஜோடி மமீதா பைஜு.இப்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ரவீனா டன்டன் இணைந்திருக்கிறார்.
ராஷ்மிகா

"எட்டு மணி நேரம் வேலை என்பது சினிமாவிலும் கடைப்பிடிக்க வேண்டும்" என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
ரஜினிகாந்த்

கமல் நடித்த படத்தில் அறிமுகமானோம். கமலுடன் இணைந்து நடித்துவிட்டு சினிமாவுக்கு குட் பை சொல்லிவிடலாம் என்று ரஜினிகாந்த் முடிவு எடுத்து இருப்பதாக தற்சமயம் ஒரு பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது.
மாளவிகா மோகனன்

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் மாளவிகா தொடர்ச்சியாக இன்ஸ்ட்டாவில் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு ரசிகர்களை கலக்கி வருகிறார்.
மணிரத்தினம்

முழுக்க முழுக்க புது முகங்களை கொண்டு ஒரு படத்தை இயக்க இருக்கிறார் மணிரத்தினம்..
மமீதா பைஜூ

விஜய், சூர்யா, தனுஷ் படங்களின் நடித்து வரும் மமீதா பைஜூ பிரதீப் ரங்கநாதனுடன் அவர் நடித்து வெளிவந்த 'டியூட்' படத்துக்கு அவர் சம்பளமாக 15 கோடி வாங்கினார் என்று சமூக வலைத்தளத்தில் யாரோ கொளுத்தி போடா "நான் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆர்வமாக இருப்பதில்லை இது முழுக்க முழுக்க பொய் என்று மறுத்து இருக்கிறார் நடிகை.

Leave a comment
Upload