தொடர்கள்
கவர் ஸ்டோரி
கரைகிறதா காங்கிரஸ்?!!-விகடகவியார்

20251014194916504.jpeg

1960களில் காங்கிரஸ் ஆளாத மாநிலங்களே இல்லை என்று கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் வியாபித்து இருந்தது.

முதல் காங்கிரஸ் இல்லாத ஆட்சி கேரளாவில் 1960 இல் அமைந்தது.

இதை விரும்பாத அன்றைய பிரதமர் நேரு அரசியல் சட்ட அமைப்பு 356 பிரிவை பயன்படுத்தி கம்யூனிஸ்ட் ஆட்சியை கலைத்தார்.

1967 இல் அண்ணா தலைமையிலான திமுக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது. அப்போது முதல் இன்று வரை தமிழ்நாட்டின் காங்கிரசால் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியவில்லை.

திமுக, அதிமுக என்று இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்கின்றன.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் செல்வ செல்வாக்குடன் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியை ஜோதி பாசு25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்.

இப்போது மேற்குவங்கத்தில் மம்தாவின் கட்சி ஆளும் கட்சி எதிர்க்கட்சியாக பாரதிய ஜனதா. கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் இரண்டும் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது என்று சொல்லலாம்.

காங்கிரஸ் கட்சியின் இறங்குமுகம் ஆரம்பித்தது ராஜீவ் காந்தியின் தலைமைப் பொறுப்பில் துவங்கியது.

நேரு, இந்திரா, என்ற இரண்டு ஆளுமை மிக்க தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை கட்டிக் காத்தார்கள். அவசரநிலைகாலத்தில் எதிர்க்கட்சிகள்அடக்கி ஒடுக்கி கைது செய்தார் இந்திரா .

"இந்திரா எதிர்ப்பவை"நாடெங்கும் வீசுவதாக ஜெயப்பிரகாஷ் நாராயணன் மோராஜ் தேசாய் போன்றவர்கள் சொன்னார்கள். அந்த தேர்தலில் இந்திரா தோல்வி அடைந்தார்.

தென்னிந்தியாவில் காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. இதற்குக் காரணம் இந்திரா காந்தி ஆளுமையும் அவரது வசீகரமும் தான்.

ராஜீவ் காந்தி அனுப்பமில்லாத தலைவர் என்பது அவர் பிரதமராக பதவி ஏற்ற சில மாதங்களிலேயே தெரிந்துவிட்டது.

இந்தியாவின் முதல் குடிமகன் ஜனாதிபதி அவரைப் புறக்கணித்தார்ராஜீவ் காந்தி. தவிர அப்போதே ஆட்சி அதிகாரத்தில் சோனியா தலையிடுகிறார் என்ற பேச்சு வரத் தொடங்கியது. அது கட்சியிலும் தொடர்ந்தது

ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகு சோனியா கட்சித் தலைவர் பொறுப்பில் சிலர் தங்கள் சுயநலத்திற்காக திணித்தார்கள்.

மெல்ல சோனியா காந்திக்கும் இந்த அதிகார போதை பிடித்திருந்தது.

ஆட்சிக்கட்டிலில் அமராவிட்டாலும் மன்மோகன் என்ற பொம்மையை இயக்கும் சூப்பர் பிரதமராக தான் சோனியா காந்தி இருந்தார்.

ராகுல் காந்தி ஏற்கனவே பதவி சுகத்தில்இருந்தவர்கள் வழிவிட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதை மூத்த தலைவர்கள் அவரை செயல்படுத்த அனுமதிக்கவில்லை.

ராகுல் காந்தி கட்சியில் ஈடுபாடு என்பது ஏதோ கடமைக்காக இருந்தது.கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களின் தொடர்பு எல்லையில் இருந்து தள்ளியே இருந்தார் ராகுல் காந்தி.

இவை எல்லாமே பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக அமைந்தது.

பாரதிய ஜனதாவின் காய் நகர்த்தல் அவசரப்படாமல் நிதானமாக இருந்தது.

ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பாஜக மேல் சொல்லும் குற்றச்சாட்டுகள் இதுதான்.

பாஜக மத சார்புள்ள கட்சி ,ஆர் எஸ் எஸ் அந்த கட்சியை இயக்குகிறது என்பதுதான். இதெல்லாம் பாஜக என்றுமே மறுத்ததில்லை. அவர்கள் கட்சியை வளப்படுத்துவது கட்சியின் கட்டமைப்பு என்று போய்க்கொண்டே இருந்தார்கள் .1

967 ஜனசங்க கட்சிக்கு பாராளுமன்றத்தில் 35 இடங்கள் வாஜ்பாய் தான் பாராளுமன்ற குழு தலைவர்.

ஜனசன் மற்றும் பாரதிய ஜனதாவின் வளர்ச்சி என்பது ஏதோ திடீரென்று ஏற்பட்டதல்ல. அவர்கள் வளர்ச்சி படிப்படியாக இருந்தது. இன்றைக்கு கிட்டத்தட்ட பல மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சி செய்வதற்கு காரணம் அவர்களின் கட்டமைப்பு தான்.

குடும்ப அரசியலை அவர்கள் ஏற்பதில்லை. அவர்கள் வெளிப்படை தன்மையுடன் இதுதான் எங்கள் கொள்கை என்று சொல்லி ஆட்சியைப் பிடித்தார்கள்.

இது பீகார் தேர்தலுக்கும் பொருந்தும்.

பீகார் தேர்தல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு ராகுல் காந்தியின் செல்வாக்கு என்ன என்பதைகிட்டத்தட்ட வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது ..பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

2015ல் காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டு 27 இடங்களில் வெற்றி பெற்றது.

2020இல் 70 தொகுதிகளில் போட்டி போட்டு 19 இடங்களில் வெற்றி பெற்றது.

2025 தேர்தலில் 61 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. தற்போது 6 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளது.

பீகாரில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தும் காங்கிரஸின் செல்வாக்கு இதுதான் .

காங்கிரஸ் கட்சியின் இந்த பின்னடைவுக்கு காரணம் கூட்டணியில் சரியான புரிதல் இல்லை 10இடங்களில் காங்கிரஸ் கட்சியும் தேஜஸ்வி யாதவ் கட்சியும் எதிர்த்து எதிர்த்து வேட்பாளர்கள் நிறுத்தின.

வாரிசு அரசியல் தொடர்ந்து ஒரே குடும்பத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தொண்டர்களை புறக்கணிப்பது சரியான தலைமை இல்லாதது வலுவான பாஜக இதெல்லாம் காங்கிரஸ் கட்சி கரைய முக்கிய காரணம்.