பிஹார் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் இந்த நவம்பரில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தன.
தேர்தல் முடிவுகள் இன்று, 14.11.2025 வெளியானது.
தேசிய ஜனநாயக முன்னணி
243 தொகுதிகளில் போட்டியிட்ட தேசிய ஜனநாயக முன்னணி, 203 தொகுதிகளில் வெற்றியில் நிற்கிறது.
இந்த கூட்டணியில் உள்ள பாரதீய ஜனதா 101 தொகுதிகளில் போட்டியிட்டு 90 தொகுதிகளில் வெற்றி கண்டுள்ளது.
தேசிய நானாயக முன்னணி வெற்றியைக் கொண்டாடும் விதமாக டெல்லியில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சி அலுவலக வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் கட்சியினர் கூடினர். மோடி துண்டை தலைக்கு மீது சுழற்றியவாறே வந்தது அங்கு ஆரவாரத்தை மிகைப்படுத்தியது.
பிரஷாந்த் கிஷோர்

நிதீஷ் குமார் 25 தொகுதிகளில் ஜெயயித்தால் நான் அரசியல் சந்நியாசம் வாங்கிக்கொள்கிறேன் என்றார் ஜன் சூராஜ் கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர். நின்ற 101 தொகுதிகளில் நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் 85ல் வெற்றி கண்டுள்ளது.
கூடவே, அவரது கட்சி ஆரம்பித்து முதல் தேர்தல் களத்தில் பூஜ்யத்தை அள்ளியது கோல்டன் டக் என்கிறார்கள். அவரது கட்சி நின்ற மொத்த இடங்களான 243 தொகுதிகளில் 238 போட்டியிட்டது.
வோட் சோரி எடுபடவில்லை. ராகுல் காந்தியைத் தவிர்த்து வேறு யாரும் அந்த பிரச்சினையைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.
தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) எதிர்ப்பு பிசு பிசுத்துப்போனது. எந்த கட்சியும் அதை ஒரு பெரும் ஆயுதமாக எடுத்து சுழட்டவில்லை என்பது தான் உண்மை.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெறும் 25 ல் மட்டுமே வென்றுள்ளது.
அந்த கட்சியின் தலைவர் தேஜஸ்வீ யாதவ் எப்படியோ கடைசி சுற்றுகளில் முன்னிலை அடைந்து வெற்றியும் பெற்றுவிட்டார்.

அஸாசுதீன் ஓவைசி, ராஷ்ட்ரீய ஜனதாவின் தேஜஸ்வீயை, “ மஹாகட்பந்தன் கூட்டில் காங்கிரஸ் இருந்ததே தவறு. அவர்களால் வெற்றி பெறுவது இயலாதது மட்டுமில்லை, அதனால் வாக்குகள் பிரிக்கப்பட்டது. அதுவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாகவே போய்விட்டது”.

இண்டி கூட்டணியில் காங்கிரஸ் ஒரு தலைவலி தான் என்று சாடியிருக்கிறார்
இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 19 தொகுதிகளிலிருந்தும் 6ஐக்கூட தக்க வைத்துக்கொள்ளத் தவித்துக்கொண்டிருந்தது. இத்தனைக்கும் அது போட்டியிட்டது 61 தொகுதிகள். ராகுல் இந்த தேர்தலில் காலம் கடந்து பிரசசாரத்திற்கு வந்தது என்பதும் ஒரு காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இததனைக்கும் வோட்டர் அதிகார யாத்ரா வேறு சென்று வந்தார். ஏனோ எதுவுமே எடுபடவில்லை.

கடந்த 16 நாளில் 23 மாவட்டங்களில் 13,000 கி மீ சுற்றியிருக்கிறார். பொது தேர்தல் வாக்குறுதி என்ற ஒன்று மஹாகட்பந்தனில் ஏற்படவில்லை.

அவர். அது ஒரு ஒட்டுண்ணி கட்சி என்றே மோடியும் கூறினார்.
இதற்கு காங்கிரஸ்.” ஜன் சூராஜ் கட்சியும் ஓவைசியும் தான் எங்களது வோட்டைப் பிளந்துள்ளனர்” என்கிறது பதிலுக்கு.
தேர்தல் முடிவுகளைப் பற்றி ராஹுல் காந்தி வெளிநாட்டிலிருந்தவாறே, குறிப்பிடுகையில், : அரசியல் நிர்ணய சட்டம், ஜனநாயகம் ஆகியவற்றுக்காக தொடர்ந்து போராடுவேன்” என்றார்.

காங்கிரஸ் பற்றிய கருத்துக்கள் இனி வரும் ஐந்து முக்கிய மாநில தேர்தல்களில் நிச்சயம் பிரதிபலிக்க வாய்ப்புண்டு. ஏனெனில், ராஹுல் காந்தி தலமையில் காங்கிரஸ் தொடர்ந்து 95 முறையாக தோல்வியையே சந்தித்துள்ளது என புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

இந்த தேர்தலில் தேசீய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட வெற்றிக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த கால திறமையான ஆட்சியா அல்லது இண்டி கூட்டணியின் ஏனோ தானோ கூட்டு முயற்சியா என்றால் இரண்டுமே என்று கூறினாலும், இரண்டாவதே என்பது அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.
19 தொகுதிகளை வென்ற சிராக் பாஸ்வான் அடுத்த துணை முதலமைச்சராக வாய்ப்புண்டு எனத் தெரிகிறது.



Leave a comment
Upload