
இதற்கு முன்பும் பல முறை தில்லியில் குண்டு வெடித்துள்ளது.
ஆனால் கடந்த பல வருடங்களாக எந்த தீவிரவாத செயல்களும் காணாத நிலையில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு.
வலைதளத்தில் எழுதியிருப்பது போல எத்தனை கோல் காப்பாற்றப்பட்டது என்பது கால்பந்தில் கணக்கு வைத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் தவற விட்ட கோல்கள் தான் தோல்வியை காட்டும்.
நமது புலனாய்வு துறையும், இராணுவமும், எத்தனை தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்திருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியவருவதில்லை.
ஆனால் இது போன்ற ஒரு குண்டு வெடிப்பு நாட்டின் தலையாய செய்தியாகிறது.
இது வரை 13 பேர் இறந்திருக்கிறார்கள். 20 பேருக்கு மேல் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
என்ன தான் வேண்டும் இந்த தீவிரவாத இயக்கங்களுக்கு.???
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவ நடவடிக்கை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் தனது 11 ராணுவ விமானங்களை இழந்தது அதனை பழி தீர்க்கும் விதமாக வருகிற ஜனவரி 26 அன்று செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சி போது 3000 கிலோ வெடி மருந்து காரில் கொண்டு செல்லப்பட்டு அது 250 வெடி குண்டாக தயாரிக்கப்படும் என்று தீவிரவாதிகள் தரப்பில் பிளான் செய்யப்பட்டது அதன்படி படித்த மருத்துவர்கள், அந்த குறிப்பிட்ட இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு மத வெறி மூளைச்சலவை செய்யப்பட்டு அவர்களின் வறுமையை பயன்படுத்தி இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது இந்தியாவுக்கு அமெரிக்காவுடன் நல்ல உறவு இல்லை என்பதால் பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்புகள் இந்தியா மீது தாக்குதல் தொடுத்த திட்டம் தான் தற்போது வெளியாகி உள்ளது.
ஹூண்டாய் காரில் இருந்த உமர் நபி இறந்திருக்கிறான். அவனது தாயாரின் டி.என்.ஏ மூலமாக அவன் தான் என்று கண்டறிந்துள்ளனர்.
புலனாய்வு துறைகள் முழூ வேகத்தில் இதை விசாரித்து வருகின்றனர். விரைவில் ஆணிவேர் வரை சென்று இதற்கு காரணமானவர்களை கருவறுப்போம் என்று மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
நடவடிக்கைகள் எப்படி பாயும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a comment
Upload