" தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று மிக பெருமையாக அழைக்கப்படும் கோவை மாநகரம் மிக விரைவில் பெருநகராக மாற துடித்து கொண்டிருப்பது அதன் அதிவேக வளர்ச்சியில் தென் படுகிறது .

எழுபது எண்பதுகளில் ஒரு பெரிய கிராமமாக இருந்த கோவை நாளுக்கு நாள் மிக பெரிய வளர்ச்சியை எட்டியது .
வடகோவை மேம்பாலம் கட்டப்பட்டபோது பிரமிப்பாக பார்த்தார்கள் கோவை வாசிகள் .
பின்னர் உப்பிலிபாளையம் மேம்பாலம் கட்டப்பட்டபோது தங்கள் நகரம் மிக பெரிய வளர்ச்சியை அடைந்துவிட்டது என்று பெருமையாக மார்தட்டி கொண்டனர் .

காந்திபுரம் மேம்பாலம் , ஒண்டிப்புதூர் மேம்பாலம் , பெரியநாயக்கன் பாளையம் மேம்பாலம் , திருச்சி சாலை மேம்பாலம் , கணபதி மேம்பாலம் , 100 அடி உயர் மேம்பாலம் , உக்கடம் மேம்பாலம் , கவுண்டன்பாளையம் மேம்பாலம் , துடியலூர் மேம்பாலம் ,தற்போது புதியதாக முதல்வர் திறந்து வைத்த அவிநாசி ஜி டி நாயுடு மேம்பாலம் என்று பத்து மேம்பாலங்கள் கோவையை பிரமிக்க வைத்துள்ளது .

அதே போல கோவை ரேஸ் கோர்ஸ் பகுதிக்கு சென்றால் கோவை பணக்கார வாசிகளின் கம்பிர நடை பகுதியை பார்த்தால் எதோ லண்டனில் இருப்பது போல தோன்றுகிறது .
ஆர் .எஸ் .புரம் , சாய்பாபா காலனி செல்வந்தர்களின் குடியிருப்பு பகுதி .
துடியலூர் தற்போது தனி கோவை நகரமாக மாறியுள்ளது .
நீலகிரி படுகர் சமுதாய மக்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து துடியலூர் வரை செட்டில் ஆகி புதிய குடியிருப்புகளை உருவாக்கிவிட்டனர் .
இப்படி ஏகப்பட்ட முன்னேற்றங்களை அரசும் மாநகராட்சியும் செய்து கொண்டிருக்க
கோவைக்கு என்று ஒரே மத்திய பேருந்து நிலையம் காந்திபுரத்தில் இருந்த காலம் மாறி உக்கடத்தில் ஒரு பேருந்து நிலையம் , சிங்காநல்லுரில் ஒன்று கட்டப்பட்டு .பயணிகள் கூட்ட நெரிசலை பிரித்தனர் .

மேட்டுப்பாளையம் சாலையில் மேட்டுப்பாளையம், ஊட்டி , சத்தி , மைசூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிற்கும் மிக பிரமாண்டமான புதிய பேருந்து நிலையம் 700 லட்சம் செலவில் ஒரு விமான நிலையம் போல கட்டப்பட்டு 15-6-2010 ஆம் ஆண்டு அன்றைய துணை முதல்வர் மு .கா .ஸ்டாலின் கரத்தால் திறந்து வைக்கப்பட்டது .
நவீனமாகவும் அனைத்து வசதிகளுடன் ஒரு சூப்பர் பேருந்து நிலையமாக காட்சியளித்தது .

ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த பேருந்து நிலையத்தை வாவ் என்று பார்த்தார்கள் .
கடந்த வாரம் எதேச்சையாக இந்த ஆச்சிரிய பேருந்து நிலையத்திற்கு சென்றோம் .
பிரமாண்ட புதிய பேருந்து நிலையத்தை பார்த்த நமக்கு தலை சுற்றிவிட்டது .

மொத்த பேருந்து நிலையமும் உருக்குலைந்து காட்சியளிக்கிறது .
பேருந்து கூரை பகுதி உடைந்து சிதிலமடைந்து தொங்கி கொண்டிருக்கிறது .
ஆங்காங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது .
ஒரு டாய்லெட் கூட உபயோகிக்கும் நிலையில் இல்லை .
பயணிகள் அவசரத்திற்கு எங்கு போவார்கள் என்பது கேள்வி குறி .

கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி கொண்டிருப்பது பயணிகளுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு .
கொசுக்கள் இங்கு பயணிகளை மொய்த்து கொண்டுருக்கிறது .
இங்கு வந்து போகும் பயணிகளுக்கு டெங்கு பிக்கப் ஆவது உறுதி .
குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை , பயணிகள் காத்திருப்பு அறை என்று அனைத்தும் மிகவும் மோசமாக உடைந்து கோரமாக காட்சியளிக்கிறது .
எங்கு பார்த்தாலும் அழுக்கு படிந்து குப்பையாக திகழ்கிறது இந்த பேருந்து நிலையம் .
குடிநீர் வசதி செய்யப்பட்டும் தற்போது ஒரு சொட்டு குடிநீர் கூட இங்கு இல்லை.
பெரிய வண்ண மீன்கள் தொட்டி நுழைவு வாயிலில் அழகிய கண்ணாடி பவுண்டைன் .

டெரசில் பெரிய பார்க்கிங் வசதி மற்றும் ஹோட்டல் , அழகிய செடிகள் , பூக்கள் என்று சூப்பராக இருந்த பேருந்து நிலையம் இன்று உருக்குலைந்து காணப்படுவது வேதனையளிக்கிறது .
இந்த பேருந்து நிலையம் கோவை மாநகராட்சி பராமரிப்பில் இருப்பதாக தான் தெரிகிறது .
மாநகராட்சி இந்த பேருந்து நிலையத்தையே மறந்து விட்டதாம் .
கோவை மாநகராட்சியின் ஆணையாளராக இருந்த நிரஞ்சன் மார்டி காந்திபுரம் பஸ் நிலயங்களை தினமும் இரவு சுத்தம்செய்து கழுவுவது வழக்கமாக இருந்தது ..
ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தான் பயணிக்கின்றனர் அவர்கள் முகம்சுளித்து செல்வதை பார்க்கமுடிக்கறது .
மாவட்ட நிர்வாகம் கூட இந்த பேருந்து நிலையத்தை கண்டு கொள்ளவில்லை என்பது வேதனையான ஒன்று .
நம் தமிழக அரசு இந்த பேருந்து நிலையத்தை சற்று எட்டி பார்த்தால் நல்லது .

Leave a comment
Upload