
பிரதமர் நரேந்திர மோடி கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தில், இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் மட்டும் ஆங்கிலேய அரசினால் தயாரிக்கப்பட்ட மிகப் பழமையான ஒரு ரூபாய் நாணய வடிவில் அமைந்துள்ளது. அதன் நடுவே ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், ஒரு புலியின் உருவம் வண்ணத்தில் இடம்பெற்றுள்ளது. தற்போது பிரதமர் மோடியின் கைக்கடிகாரம் அனைத்து தரப்பினரிடையே வைரலாகப் பரவியுள்ளது.
சுமார் ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான அந்த ரோமன் பாக்பிராண்ட் கைக்கடிகாரத்தை, ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. இது, 43 மிமீ அளவில் துருப்பிடிக்காத எஃகினால் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரு ரூபாய் நாணயம் ஆங்கிலேய ஆட்சியின்கீழ் அச்சிடப்பட்ட கடசி நாணயம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஒரு ரூபாய் நாணயம், கடந்த 1946 மற்றும் 1947-ம் ஆண்டுக்கு இடையில் மட்டுமே அச்சிடப்பட்டது.
இதுகுறித்து ஜெய்ப்பூரை சேர்ந்த தனியார் நிறுவன நிர்வாகிகள் கூறுகையில், ‘‘சுதேசி உணர்வு எழுச்சி பெற்று வரும் இந்நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, எங்கள் நிறுவனத்தின் கைக்கடிகாரத்தை அணிந்திருப்பது அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!’’ என்று தகவல் தெரிவித்தனர்.

Leave a comment
Upload