
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தான் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
பெரிய ஐயாவை டென்ஷன் பண்றதே டெல்லிக்கு வேலையா போச்சு.
5.22 கோடி எஸ் ஐ ஆர் படிவங்கள் தமிழ்நாட்டில் ஆன்லைனில் பதிவேற்றம்.
ஆளுங்கட்சி கூட்டணி எதிர்ப்பு அப்படின்னு சொன்னாங்க எல்லாமே பொய்யா கோபால் !!
நான் கண் திறந்து பார்த்த சூரியன் இது தான் கமல்ஹாசன்.
கொஞ்சம் கூட கூசாமல் பொய் பேசுற உலக மகா கலைஞன் நீங்கதான்.
அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் எம்பி மாணிக்தாகூர்.
உங்க கட்சி அதுக்கும் ரொம்ப மோசம் முதல அதை கவனிங் !!
திமுகவும் அதிமுகவும் இணைந்தே பயணிக்கின்றன .செங்கோட்டையன்.
ஜெயலலிதா படத்த பாக்கெட்டில் வைத்துக்கொண்டே தைரியமா பேசுறீங்க !!
எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை பெங்களூரில் சித்தா ராமையா டி.கே.சிவகுமார் கூட்டாக பேட்டி.
டெல்லியில் இருந்து அப்படி தான் சொல்ல சொல்லி இருக்காங்க போல தெரியுது.
புயலால் கனமழை எச்சரிக்கை மக்களுக்கு உதவ தயாராக இருக்க வேண்டும் திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்.
ஆமாம் ப்பா இன்னும் மூணு நாலு மாசம் தேர்தல் வருது !!
உதயம் வரும் உதயநிதியும் வருவார் கமலஹாசன்.
இன்பம் வரும் இன்பநதி வருவார் அந்த டயலாக் விட்டீங்க !!
தமிழ்நாட்டில் காங்கிரஸ் உயிர்ப்புடன் இருக்கிறது காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கருத்து.
ஆமா டாக்டர் திமுக தயவில் !!
குழந்தைகளும் விஜய்க்கு வாக்களிக்க சொல்லும் நிலை உள்ளது செங்கோட்டையன்.
பனையூர்ல ஏதாவது போதிமரம் இருக்கா !!
செங்கோட்டையனின் அனுபவம் தமிழக வெற்றி கழகத்திற்கு உறுதுணையாக இருக்கும் விஜய் நம்பிக்கை.
அண்ணன் எந்த அனுபவத்தை சொல்றான்னு தெரியலையே !!
விஜயின் பேச்சில் பக்குவமோ முதிர்ச்சியோ இல்லை முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி. .
அனுபவம் பேசுகிறது
மக்களின் வாக்குகளை காப்பாற்ற வேண்டும் பிறந்தநாள் விழாவில் உதயநிதி அறிவுரை.
அதுக்கு நீங்க தேர்தல் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் !!
எஸ் ஐ ஆர் பணிகளில் திமுகவினர் தில்லுமுல்லு எடப்பாடி பழனிச்சாமி. .
இந்தியாவிலேயே இதை ஆதரிச்ச ஒரே தலைவர் நீங்கதான் அதை மறந்துடாதீங்க !!
செங்கோட்டையன் வெளியேறியது அதிமுகவுக்கு பின்னடைவு திருமாவளவன்.
ஆதவ் அர்ஜுனா உங்க கட்சியில் வெளியேறிய போது உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு மாதிரி தானே தலைவரே !!
இந்திய பொருளாதாரத்தை ஆய்வு செய்தால் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுகிறது செல்வப் பெருந்தகை.
நம்ம கட்சி நிலைமை அதை விட மோசம் அதை கவனிங்க முதல்ல.

Leave a comment
Upload