ருக்மணி வசந்த்

எனக்குப் பிடித்த 10 விஷயங்கள் என்று பட்டியலிட்டு இருக்கிறார் ருக்மணி வசந்த் அது இதுதான் புத்தகங்கள், வண்ணமயமான உணவு, பூக்கள், சூரிய அஸ்தமனம், கடல், காற்றில் ஆடும் இலைகள், குதிரை சவாரி, ,வேலை, ஐஸ் கிரீம், இயற்கையோடு இணைந்த நடை பயணம் என்கிறார்.
ராஷ்மிகா மந்தனா

இப்போதெல்லாம் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது ராஷ்மிகா ரிச்சாக வலம் வருகிறார். 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வாட்ச் மற்றும் இரண்டு கோடி மதிப்புள்ள வைரல் நெக்லஸ் அவர் கழுத்தை அலங்கரித்து இருக்கிறது.
சமந்தா

கோவை ஈஷா மையத்தில் சமந்தா திருமணம் நடந்தது.
துஷாரா விஜயன்

மலையாளத்தில் அறிமுகமாகிறார் துஷாரா விஜயன்.
பிரியங்கா சோப்ரா

வாரணாசி படத்தில் பிரியங்கா சோப்ராவின் சம்பளம் 30 கோடி இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இப்போதைக்கு இவர்தானம்.
கீர்த்தி சுரேஷ்

"நம் நாட்டில் பொதுவாக பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது. அமெரிக்கா, துபாயில் இருப்பது போல் கடுமையான சட்டங்கள் நம் நாட்டிலும் அமல்படுத்த வேண்டும்" என்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சிவகார்த்திகேயன்

விஜய் வீடு அருகே ஒரு பிரம்மாண்டமான மாளிகை கட்டி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
அஞ்சலி

"ஜெய் கூட எனக்கு எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்லைன்னு எத்தனை வாட்டி சொன்னாலும் யாரும் நம்பல ..இப்ப நான் இருக்குன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க .சில விஷயங்களை நாம் சொல்லி புரிய வைக்க முடியாது. காலம் தான் அதுக்கு புள்ளி வைக்கும்" என்கிறார் நடிகை அஞ்சலி.
மம்முட்டி

அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தில் மம்முட்டி நடிக்க இருக்கிறார். இதற்கு சம்பளமாக இரட்டை இலக்கத்தில் கோடியில் சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.

Leave a comment
Upload