தொடர்கள்
விகடகவியார்
திக் திக் ..திருப்ப (ங்கள்) ரங்குன்றம் - விகடகவியார்

20251106080442884.jpg

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ள பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

பிள்ளையார் கோவிலில் தீபத்தை ஏற்றாமல் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் எனக்கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் வழக்கு தொடர்ந்தார்.

சிக்கந்தர் தர்காவில் இருந்து 15 மீட்டர் தொலைவில் இருக்கும் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்பதுதான் இவரது கோரிக்கை.

மனுவை விசாரித்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து உத்தரவிட்டார்.

திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் நூறாண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்றிய இடத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்றியது .

உடனடியாக நீதிமன்ற அவமதிப்பது வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சி ஐ எஸ் எப் பாதுகாப்பு படையுடன் மனுதாரர் உட்பட பத்து பேர் தர்காவுக்கு அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

திருப்பரங்குன்றம் மலையை சுற்றி ஏராளமான இந்து முன்னணியினர் பாஜகவினர் குவிந்து பதட்டமான சூழ்நிலை உருவாகியதால் மதுரை காவல்துறை ஆணையர் அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவை அமுல் செய்தார்.

காவல்துறை இதை சுட்டிக்காட்டி தீபம் ஏற்ற அனுமதி மறுத்தனர்.

நீதிபதி பத்து பேர் என்று எண்ணிக்கை குறிப்பிட்டு இருந்தாலும் நூற்றுக்கணக்கான பேர் இந்த தர்கா தூணில் தீபம் ஏற்றுவதை பார்க்க குவிந்திருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் போலீசுக்கும் அங்கிருந்த இந்து முன்னணி ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு நடந்தது இரண்டு போலீஸ்காரருக்கு காயம் ஏற்பட்டது. தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற காவல்துறை அனுமதிக்கவில்லை.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ வஸ்தாவிடம் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை மறுநாள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் ராமகிருஷ்ணன் ஆகியோர் முதல் மனுவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வார்கள் என்ற உறுதி மொழியும் தரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு நேரடியாக நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மீது மதப் பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் அவர் தீர்ப்பு இருப்பதாக குற்றம் சுமத்தியது.

நீதிபதிகள் தமிழகத்தின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தார்கள்.

தனி நீதிபதியின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலேயே சி ஐ எஸ் எஃப் உள்ளே கொண்டுவரப்பட்டது.

இதில் எந்த விதி மீறலும் இருப்பதாக தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தி இருக்க வேண்டும். மாநில அரசு தனது கடமையை செய்ய தவறியதால் தான் தனி நீதிபதி மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்குத் தொடர்ந்துள்ளது என்று நீதிபதிகள் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்கள்.

அரசின் மேல்முறையீடு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் விசாரிக்க தொடங்கினார்.

அப்போது தமிழக அரசு தீபம் ஏற்றும் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பிறகு நீதிமன்ற அவமதிப்புவழக்கை விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டது .எனது உத்தரவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன்.

அப்போதும் விடாப்பிடியாக அரசு தரப்பு இது உணர்வு பூர்வமான விஷயம் என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் நான்கு வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும். சட்டப்படி உரிய பதிலளிப்போம் என்று வாதம் செய்தது.

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் கோயிலின் செயல் அலுவலர் உடனடியாக காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும்.

நீதிமன்றத்தின் மதிப்பு புரிய வேண்டும் என்பதற்காக நான் இதை செய்கிறேன் என்றார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் மாநகர காவல் ஆணையர் காணொளி மூலம் ஆஜராகும் நீதிபதி உத்தரவு விட்டார்.

20251106080918588.jpg

அப்போது நீதிபதி அவர்களிடம் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று கேட்டார்.

கூட்டம் அதிகமாகி பிரச்சனை ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த பேரிக்கார்ட் அமைத்தது போன்றவற்றை விளக்கிய காவல்துறை ஆணையர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கூடாது என எந்த உள்நோக்கமும் இல்லை.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார். அப்போது நீதிபதி 144 உத்தரவை நான் ரத்து செய்து உத்திரவிடுகிறேன்.

உடனடியாக மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.

மனுதாரர் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் .

காவல் ஆணையர் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும். உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கை நாளை காலை பத்தரை மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

பாஜக தலைவர் நயினா நாகேந்திரன் மூத்த தலைவர் எச்.ராஜா உள்பட பல பாஜக தொண்டர்கள் தலைவர்கள் அந்த மலையை சுற்றி கூடினார்கள்.

நீதிபதி பத்து பேருக்கு தான் அனுமதி தந்தார். ஆனால் அந்த கூடி இருந்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள்.

தமிழக அரசு தர்காவுக்கு அருகே உள்ள தூணில் தீபம் ஏற்றக்கூடாது அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

இது அவசர அவசரமாக அறிவாலயத்தில் திமுக அமைச்சர் ரகுபதி மற்றும் ஆர்.எஸ் பாரதி பேட்டி உறுதிப்படுத்தியது.

2014 நீதிமன்றம் இதே வழக்கில் தர்காக்கு அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்து அவர்கள் மனுவை தள்ளுபடி செய்தது. அப்போது ஆட்சி செய்தது ஜெயலலிதா தான். ஜெயலலிதா ஆட்சியிலும் நீதிமன்றத்தில் தர்காவுக்கு அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என்று தான் வாதம் செய்து இருக்கிறார்கள். அதை ஏற்றுக் கொண்டுதான் நீதிபதி தூணில் தீபம் ஏற்றஅனுமதி மறுத்து மனுவை தள்ளுபடி செய்து விட்டார். நாங்கள் 2014 நீதிமன்ற ஆணையை பின்பற்றி தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். இது தவிர இரண்டு பேர் அமர்வு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்திருக்கிறோம். நாங்கள் எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை. நாங்கள் நீதிபதியையும் நீதிமன்றத்தை மதிக்கிறோம் .மதப் பிரிவினைவாத சக்திகளும் அடிமை கைக்கூலிகளும் எவ்வளவு முயன்றாலும் முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கும் வரை தமிழ்நாட்டின் அமைதி சீர்குலைக்க முடியாது. மதங்களைக் கடந்து உறவுகளாய் வாழ்ந்து வரும் தமிழ்நாட்டு மக்களிடம் உங்களின் தகிடுதத்தம் எதுவும் எடுபடாது எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று சொல்லிய அமைச்சர் ரகுபதி அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மையார் தான் அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் வாதம் செய்து இருக்கிறார். இது தெரியாமல் எடப்பாடி பாஜகவின் அடிமையாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் என்று எடப்பாடியும் சாடினார் அமைச்சர் ரகுபதி.

20251106080848979.jpg நீதிபதி ஜி. ஆர். சாமிநாதனை கடுமையாக விமர்சனம் செய்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோ ஆகியோரின் கருத்துக்களை திமுக கண்டிக்கவில்லை. ஒருவேளை திமுகவை திருப்திப்படுத்துவதற்காக தான் இந்த தலைவர்கள் நீதிபதியை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்களோ என்னவோ தெரியவில்லை .

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது ரிட்மனுதாரர்கள் சார்பில் ஆஜான வழக்கறிஞர் எம்ஆர் வெங்கடேஷ் தனிப்பட்ட ஜாதி அடிப்படையில் ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் "நீதித்துறையை இழிவு படுத்த முடியாது. நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம். நாங்கள் ஓரளவு தான் பொறுத்துக் கொள்ள முடியும். அதையும் மீறினால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நீதிமன்றங்களும் நீதிபதிகள் வெளிப்படையாக பதில் அளிக்க முடியாது என்பதற்காக அதை பயன்படுத்தி தொடர்ந்து தூண்டி விடுவதையோ விமர்சிப்பதியோ ஏற்க முடியாது.

நீதிமன்றத்தின் பொறுமையை சோதித்து நீதித்துறை அமைப்பை கொச்சைப்படுத்த வேண்டாம். நீதிமன்றம் அனைவருக்கும் ஆன கடைசிப் புகலிடம் "என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சிப்பவர்களை கடுமையாக எச்சரித்தார்கள்

திமுக நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த மறுத்ததன் மூலம் ஒரு மோசமான முன் உதாரணத்தை அவர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள். இது நாளை அவர்களுக்கே எதிராகவும் ஒரு சமயம் போகக்கூடும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

20251106080820915.jpeg

தீபத்தூண் அல்ல அது பிரிட்டிஷார் போட்ட எல்லைகல் என்கிறார் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி.

உடனே திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக்க பாஜகவும் ஆர் எஸ் எஸ் எம் முயற்சி செய்கிறது என்று சாடி இருக்கிறார். .இப்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.

ஜி ஆர் சுவாமிநாதனை இம்பீச்சுமெண்ட் செய்ய வேண்டும். அதற்கான தீர்மானம் கொண்டுவர நாங்கள் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம் என்று திருச்சி சிவா எம் பி கருத்து தெரிவித்திருக்கிறார் ஒரு வாதத்துக்காக அப்படி கொண்டு வந்தால் கூட அந்த தீர்மானம் நிச்சயம் வெற்றி பெறாது.

இப்போதைக்கு பாஜக பெரும்பான்மை உள்ள கட்சி. ஜி ஆர் சுவாமிநாதன் இரண்டு நாள் பரப்பரப்பு செய்தியாக இருப்பார் அவ்வளவுதான்.

நீதிபதிகளின் மீதான தாக்குதலை உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதும் உண்மை.இந்த விஷயத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை இரண்டு பக்தர்களை அனுப்பவில்லை என்று வெறுமனே கண்டித்து அத்தோடு இந்தப் பிரச்சினையை விட்டுவிட்டார் எடப்பாடி.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நயினார் நாகேந்திரனுடன் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு அவரை கைது செய்யும் போது ராஜன் செல்லப்பா எஸ்கேப்.

பாஜக கொள்கை எதிரி என்று என்று சொன்ன ஜோசப் விஜய் இன்று வரை எதுவும் கருத்து சொல்லாமல் கப்சிப்.

இன்னொரு கோணத்தில், வெள்ள நிவாரண பணத்தை சரியாக பயன்படுத்தாமல், தண்ணீர் தேசமாக்கி விட்டு, அதை திசை திருப்பவே திருப்பரங்குன்றத்தை கையில் எடுத்ததாகவும் நெட்டிசன்கள் போட்டு தாக்கி கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் முருகனின் திருவிளையாடல் தான்.

முருகன் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான்.