தொடர்கள்
விகடகவியார்
முடிசூட ரெடி- விகடகவியார்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடினார்.

முதல்வர் முத்தம் கொடுத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னார்.

எனது பிறந்தநாளுக்கு ஏழை மக்களுக்கும் முதியோர்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் சென்று நல உதவி செய்யுங்கள் என்று துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தி மு க வின் எதிர்கால தலைவர் உதயநிதி தான் என்று மூத்த தலைவர்கள், கூட்டணி தலைவர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள் அனைவருக்கும் தெரிந்தது என்பதை இந்த பிறந்தநாள் தெளிவுபட சொல்லிவிட்டது.

பிறந்தநாள் அன்று முரசொலியில் கிட்டத்தட்ட 175 பக்கம் உதயநிதி பிறந்தநாள் வாழ்த்து விளம்பரம்.

தமிழ் ஆங்கில நாளிதழ் தொலைக்காட்சிகளில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து விளம்பரம்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்"இளைய அரசருக்கு முடி சூட்டு விழா நடத்திக் கொண்டிருப்பதாக கருத்து தெரிவித்தார்.

உதயநிதிக்கான விளம்பரங்களில் பெரும்பாலும் "திமுகவின் எதிர்காலமே "என்ற வாசகங்கள் தான் முக்கியமாக இருந்தன.

எனக்கு அடுத்து உதயநிதி தான் வெளிப்படையாகவே பாராட்டி புகழ்ந்து கருத்து தெரிவித்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

கட்சியின் ஆய்வுக் கூட்டங்களில் உதயநிதி தொடர்ந்து கலந்து கொள்கிறார்.

கூட்டங்களில் கட்சிக்காரர்களுக்கு அறிவுரை கொஞ்சம் கண்டிப்பான உத்தரவு என்ற அளவில் அந்த ஆய்வுக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.

சட்டமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில் நாம் வெற்றி வாய்ப்பு இழக்கிறோமோ அந்தத் தொகுதியின் கட்சி நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்பதை கண்டிப்பாக சொல்கிறார்.

கட்சியில் முதலமைச்சர் முன்னிலைப்படுத்துவது போல் ஆட்சி அதிகாரத்திலும் அவரது கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

திமுகவின் மூத்த தலைவர்களும் உதயநிதி துதிப்பாடிகள் ஆகி விட்டார்கள் .

சென்னையில் நடைபெற்ற திமுகவின் அறிவுத் திருவிழாவில் பேசிய திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் "கருணாநிதி' ,ஸ்டாலினை விட உதயநிதி சிறப்பாக செயல்படுகிறார் என்று அவரை ராஜேந்திர சோழனுடன் ஒப்பிட்டார் துரைமுருகன்.

மூத்த அமைச்சர்கள் கே. என்.நேரு ,ஏவா வேலு போன்றவர்கள் உதயநிதியை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

திமுக உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டை நோக்கி மெல்ல நகர்கிறது என்பதை அதிகாரிகள் ஆளுங்க கட்சியினர் தெரிந்து கொண்டு ,அவரை ஏற்றுக் கொள்ளவும் தங்களை தயார்படுத்திக் கொண்டு விட்டார்கள்.

'இருளுக்குப் பின் விடியல் வரும் ..உதயம் வரும் உதயநிதியும் வருவார் அப்போது பாராட்டு விழா பெரிசாக இருக்கும் 'என்று சொல்லி அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் என்பதை வெளிப்படையாகவே சொல்லி தனது விசுவாசத்தை காட்டினார் உலகநாயகன்.

சென்ற பாராளுமன்ற தேர்தலில் இளைஞர் அணிக்கு கணிசமான வேட்பாளர் வேண்டும் என்று திமுக தலைவருக்கு நெருக்கடி தந்தார். ஈரோடு தொகுதியில் இளைஞர் அணி சேர்ந்த பிரகாஷ்க்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது

இந்த முறை ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு வேட்பாளர்கள் இளைஞர் அணியை சேர்ந்தவராக இருப்பார்கள் என்பதை கிட்டத்தட்ட உறுதிப்பட சொல்கிறது இளைஞர் அணி தரப்பு.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர் அணியில் இருந்து வேட்பாளர் பட்டியல் கூட தயார் என்கிறார்கள்.

இளைஞர் அணி வேட்பாளர்கள் வெற்றி என்பது மாவட்ட செயலாளர் தலைமையிலான நிர்வாகிகளின் ஒத்துழைப்பை பொறுத்து இருக்கும்.

இளைஞர் அணி செயல்பாடு பரமசிவன் கழுத்தில் பாம்பாகத்தான் இப்போதைக்கு இருக்கிறது.

திமுக வின் அடுத்த முதல்வர் வேட்பாளர் உதயநிதி முடிசூட ரெடி என்பதே (எல்லோரும் எதிர்பார்த்த) லேட்டஸ்ட் செய்தி!