
இந்திய அளவில் மக்களின் அதிகபட்ச ‘லைக்’, ‘ஃபாலோ’, ‘காமெண்ட்’டுகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு ஆண்டும் பேஸ்புக் நிறுவனம் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 2017-ம் ஆண்டின் சிறந்த சமூகவலைதள பக்கமாக கேரள சுற்றுலாத் துறையை பேஸ்புக் நிறுவனம் தேர்வு செய்தது. இந்த கேரள சுற்றுலாத் துறையின் பக்கத்தை கடந்த ஆண்டு பேஸ்புக் வலைதளப் பக்கதில் சுமார் 150 லட்சம் பேர் பார்த்து ரசித்து ‘லைக்’ போட்டுள்ளனர்.
இதற்காக கேரள சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அம்மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதற்கடுத்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் குஜராத் மாநில சுற்றுலாத்துறைகள் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. புதுடெல்லி பேஸ்புக் அலுவலகத்தில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற விழாவில் கேரள சுற்றுலாத்துறை இயக்குநர் பாலகிரண் முதலிடத்துக்கான விருது பெற்றார்.
இதேபோல், முகநூல் வலைதளப் பக்கத்தில் மிகத் தீவிரமாக செயல்படும் பிரபல திரைப்பட விஐபிக்கள் பட்டியலில், மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அதிக ஃபாலோயர்களை பெற்று முதலிடம் பிடித்து விருது பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக சல்மான்கான் மற்றும் ஷாரூக்கான் இடம் பிடித்துள்ளனர்.
- ஶ்ரீ

Leave a comment
Upload