தொடர்கள்
வலையங்கம்
தமிழ்நாட்டிலும் தொடங்கட்டும்

2026000917382787.jpeg
உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பள்ளிகளில் மாணவர்கள் நாளிதழ் வாசிப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இது வரவேற்க கூடிய ஒரு நல்ல ஆரம்பமான முடிவு. மாணவர்களின் பொது அறிவுவளர்ச்சிக்கு இது மிகவும் ஆக்கப்பூர்வமான திட்டமாக நிச்சயம் இருக்கும்.
70களில் பள்ளிகளில் காலை மாணவர்கள் கூடும் பிரார்த்தனை வகுப்புகளில் மாணவர்கள் தலைப்புச் செய்திகள் படிக்கும் வழக்கம் இருந்தது. கரும்பலைகளில் தலைப்புச் செய்திகள் எழுதி வைக்கும் பழக்கமும் இருந்தது. காலப்போக்கில் இவையெல்லாம் காணாமல் போயின.
தமிழ்நாட்டில் கல்வியில் முன்னணி மாநிலம் என்று பெருமை பேசும் தமிழக அரசு இந்த திட்டத்தை உடனே அறிமுகம் செய்ய வேண்டும். மாணவர்களின் பொது அறிவு அப்படி சொல்லிக் கொள்ளும்படி இல்லை இந்த கசப்பான உண்மை இந்த அரசுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.எனவே வாசிக்கும் பழக்கமே மெல்ல குறைந்து வரும் இந்த காலத்தில் தமிழகப் பள்ளிகளில் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் கட்டாயம் என்ற சட்டத்தை உடனே இயற்றி அதை செயல்படுத்தி கண்காணிக்கவும் வேண்டும். மாணவர் எதிர்காலத்தில் இந்த அரசு உண்மையில் அக்கறை செலுத்துகிறது என்ற வார்த்தையை இந்த வாசிப்பு உண்மையாக்கும்