தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260010062931288.jpg

அதிமுக பாமக கூட்டணி உறுதியானது.

அது இருக்கட்டும் மாம்பழசின்னம் உண்ட அத சொல்லுங்க?

அமித்ஷா, அவதூறு ஷாவாக மாறிவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

எல்லாம் இங்க கத்துக்கிட்டதுதான் !!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றவே ஒன்று சேர்ந்துள்ளோம் அன்புமணி ராமதாஸ்.

பெரியவர் கிட்ட இருந்து காப்பாற்றவும் அத மறந்துட்டீங்களே சொல்றதுக்கு சின்னையா !!

வாக்காளர் பட்டியலில் திருத்த எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்.

நீக்கறதுக்கும் தான் அதை சொல்ல மறந்துட்டீங்க.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதில் உறுதியாக உள்ளோம்! கே எஸ் அழகிரி திட்டவட்டம்.

அவங்களும் தரமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்காங்களே !!

புதிய கட்சி தொடங்குகிறார் காடுவெட்டி குரு மகள்.

யாருக்கு ஆதரவா யாருக்கு எதிர்ப்பா அதை சொல்லல?

கூட்டணியை முடிவெடுக்கும் அதிகாரம் தினகரனுக்கு பொதுக்குழுவில் தீர்மானம்.

ஆனா உங்களை சேர்க்கிற முடிவு அவங்க கிட்ட தான் இருக்கு !!

மோடி தலைமையில் அணிவகுப்போம் என்று அமித்ஷா சொல்வதை அதிமுக ஏற்க்கிறதா? செல்வப் பெருந்தகை கேள்வி.

உங்களுக்கு பிரச்சனை இல்லை! நீங்க இன்பநிதி தலைமையை ஏற்க தயாராகிட்டீங்க .

தீபம் ஏற்ற அனுமதி தீர்ப்பு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் அமைச்சர் ரகுபதி தகவல்.

ஒரு நாள் தீபம் ஏற்றினால் அதோடு முடிந்திருக்கும். இப்ப கோர்ட்டில் பெரிய வக்கீல் செலவு அப்படின்னு கோடி கணக்கில் ரொம்ப நல்லா அரசாங்கம். !!

ரோட்டு ஷோக்கு மூணு மணி நேரம் மட்டுமே அனுமதி தமிழக அரசு அறிவிப்பு.

சும்மா இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருப்பீங்க! நடக்கிறத பேசுங்க! !

புதியவர்கள் வரலாம் வேடம் கட்டலாம் .வெறும் அட்டைக் காற்று அடித்தால் காணாமல் போய்விடுவார்கள் உதயநிதி ஸ்டாலின்.

எங்க அந்த புதியவர் என்று நான் விஜய் தான் சொல்றேன்என்று தைரியமா சொல்லுங்க பாக்கலாம்? !!

உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

எல்லார் கனவையும் நிறைவேற்றுவீங்களா ?

செங்கோட்டையன் காலாவதியான மாத்திரை முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்.

காலாவதியான மாத்திரை தான் இவ்வளவு நாள் வைத்து கொண்டாடுனீங்களா? !!