தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260030154556383.jpg

கூட்டணி குறித்து எதுவும் பேசாதீர்' திமுகவினருக்கு திடீர் உத்தரவு.

ஆமா, தலைவரே எதுவும் பேச மாட்டேன்னு கம்முனு இருக்கும்போது நீங்க மட்டும் எப்படி பேசலாம் ?

கூட்டணி குறித்து 15 நாட்களில் முடிவு. புதிய தமிழகம் கிருஷ்ணசாமி புதிய கெடு.

லெட்டர் பேடு கட்சிகள் சந்தர்ப்பத்தை சரியா பயன்படுத்திக்கிறாங்கோ !!

யுஜிசி விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது - முதலமைச்சர் ஸ்டாலின்.

நீங்க வரவேற்கிறீங்க ஆனா, உச்சநீதிமன்றம் தடை போட்டுருச்சு !!

தங்கம் விலை பார்த்து ஆதங்கப்படும் பெண்கள்.

சந்தோஷப்படும் ஆண்கள் !!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முஸ்லிம் லீக் மாநாட்டில் பாராட்டு.

இருக்காதா பின்ன சலுகைகள் தான் வாரி வழங்கி இருக்கிறாரே !!

நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபட வேண்டும் பிரதமர் மோடி பேச்சு.

முதல்ல பார்லிமென்ட்டை ஒழுங்கா நடக்க விடட்டும் !!

டிடிவி தினகரன் நினைத்தால் இணைப்பு விரைவில் சாத்தியம் ஓபிஎஸ் பேட்டி.

எடப்பாடி தான் முடிஞ்சு போன விஷயம்ன்னு சொல்லி பைல் க்ளோஸ் பண்ணிட்டாரே !!

விஜய் தனியாக இருந்தால் மதிப்பு கிடையாது தமிழிசை சௌந்தரராஜன்.

பாவம் நீங்களும் முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கீங்க ஆனா, ஒன்னும் நடக்கல !!

கூடுதல் தொகுதி கேட்பது தேமுதிகவின் உரிமை விஜய பிரபாகரன்.

அதே மாதிரி இல்லைன்னு சொல்றது அவங்க உரிமை !!

ஊழல் கறை என் நிழலிலும் படாது- விஜய்.

வருமான வரி துறையைக் கேட்டால் விஷயம் ஃபுல்லா சொல்வார்கள் !!

விஜய் கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொள்ளலாம் –எஸ்.ஏ.சந்திரசேகர்.

காங்கிரஸ் பாவம் அந்த அளவுக்கு பலகீனமா இருக்கு !!

பெண்களை மையப்படுத்தி உருவாகும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்.

ஆமா அவங்க கிட்ட தான் ஜாஸ்தி ஓட்டு இருக்கு !!

டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்த கனிமொழி.

அமித் ஷாவை எடப்பாடி சந்திச்சா மட்டும் அடிமை எடப்பாடி என்று ஒருத்தர் சொல்லுவாரு , அப்ப இதுக்கு பேர் என்ன அர்த்தம் ?