ஆறு படங்கள்

2026-இல் நயன்தாரா நடித்த ஆறு படங்கள் வெளியாக இருக்கிறது. டாக்ஸிக் ,பேட்டரியாட், அன்புள்ள மாணவர்களே, மூக்குத்தி அம்மன் 2, மண்ணாங்கட்டி, எல்லாமே கோடை விடுமுறைக்கு பிறகு ஒன்று ஒன்றாக வெளியாகும்.
ஹன்சிகா

"34 வயதிலும் நான் இளமையாக இருப்பதற்கு காரணம் பைலேட்ஸ் என்று ஒருவகை உடற்பயிற்சியை நான் தொடர்ந்து செய்து வருவதன் காரணம்" என்கிறார் நடிகை ஹன்சிகா.
சுருதிஹாசன்
தமிழ், தெலுங்கு , இந்தி, மலையாள மொழிகளில் வெளியாக இருக்கும் ஒரு படத்தில் சுருதிஹாசன் புகைப்பிடிக்கும் காட்சி தற்சமயம் வைரலாகிக் கொண்டு இருக்கிறது.
ராஷி கன்னா

சித்தார்த் ராஷிகன்னா நடிக்கும் ஒரு படத்திற்கு ' ரெளடி&கோ' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
திரிஷா

அஜித், மாதவன் ,நயன்தாரா ஆகியோர் மலேசியாவில் வீடு வாங்கி இருக்கிறார்கள். படப்பிடிப்பில்லாத நேரத்தில் அங்கு போய் தங்குவது வழக்கம். அதேபோல் திரிஷாவும் மலேசியாவில் வீடு வாங்க திட்டமிட்டு இருக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா

சென்ற ஆண்டு வருமான வரியாக 5 கோடி ரூபாய் செலுத்தி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதற்கு காரணம் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை கர்நாடக மாநிலத்தில் வீடு, பங்களா என வாங்கி வாடகைக்கு விடுகிறார். அதில் கிடைத்த பணத்துக்கு தான் இந்த வருமான வரி.
ஷில்பா ஷெட்டி

மும்பையில் ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமாக ஒரு உணவகம் உள்ளது. குடியரசு தினத்தன்று காலையில் முதலில் வருபவருக்கு இலவச உணவு திட்டம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தென்னிந்திய மற்றும் கர்நாடக உணவுகளை வழங்குவதில் இந்த உணவகம் பிரபலம் உணவகம் திறப்பதற்கு முன்பே ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி விட்டார்கள். இந்த இலவச உணவை சாப்பிட குவிந்தவர்கள் பெரும்பாலோர் வசதியானவர்கள் ஆனாலும் சொன்னபடி நடிகை ஒரு மணி வரை வந்தவர்களுக்கு இலவச உணவு வழங்கினார்.
மேக்னா நாயுடு
தீராப்பகை என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியிருக்கிறார் நடிகை மேக்னா நாயுடு.
மிருணாள்தாக்கூர்

சிம்பு ஜோடியாக மிருணாள் தாக்கூர் காட் ஆப் லவ் என்ற படத்தில் நடிக்கிறார்.
ருக்மணி வசந்த்

மணிரத்தினம் படத்தில் நடிக்க இருக்கிறார் ருக்மணி வசந்த். செம கவர்ச்சியான உடையில் இருக்கும் ருக்மணி வசந்த் போட்டோ ஷுட் படங்கள் தற்சமயம் வைரலாகி கொண்டு இருக்கிறது.
தமன்னா

தமன்னா ஃபைன் ஜுவல்லரி என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் நடிகை தமன்னா. அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு தற்சமயம் அது வைரலாகிக் கொண்டிருக்கிறது.
பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு 1250 கோடி
அமலா பால்

குட்டி டவுசர் குட்டி ஜாக்கெட் போட்டுக் கொண்டு அமலா பால் போட்டோ ஷூட் மூலம் எடுத்த படங்கள் தற்சமயம் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

Leave a comment
Upload