தொடர்கள்
விகடகவியார்
கனிமொழி ராகுல் காந்தி சந்திப்பு

20260031070018844.jpg

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சியில் பங்கு என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இதனை நேரடியாக ராகுல் காந்தியிடம் பேசி இந்த பஞ்சாயத்தை முடிக்க வேண்டும் என்று தீர்மானித்து கனிமொழியை அழைத்த முதல்வர் ஸ்டாலின்....

ஆட்சியில் பங்கு என்பது வாய்ப்பில்லை என்பது தெளிவு படுத்துங்கள்.

2029 தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதற்கு திமுக பெரும் உதவிகரமாக இருக்கும் இதை மனதில் வைத்துக் கொண்டு இப்போதைக்கு திமுக கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார். முதல்வரின் சார்பாக கனிமொழி ராகுலை சந்தித்தார்.

கனிமொழி ராகுல் காந்தி சந்திப்பு கிட்டத்தட்ட 40 நிமிடம் நடந்தது.

முதலமைச்சர் ஸ்டாலின் என்ன சொன்னாரோ அதை ராகுலிடம் விஷயத்தையும் கனிமொழி சொன்னார்.

1984 இல் காங்கிரஸ் 73 இடங்களில் போட்டியிட்டு 61 தொகுதிகளில் வென்றது.

திமுக காங்கிரஸ் தயவில் தான் ஆட்சி செய்தது அப்போதே ஆட்சியில் பங்கு தரவில்லை போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டி ஆட்சியில் பங்கு வாய்ப்பில்லை என்பதை தெளிவுபடுத்திருக்கிறார் கனிமொழி.

கூட்டணி ஆட்சி பற்றி பேச வேண்டாம்.

துணை சபாநாயகர், ராஜ்யசபா ,வாரியத் தலைவர் பதவி, உள்ளாட்சியில் அதிக இடங்கள் இதெல்லாம் தாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். கனிமொழி.

கட்சித் தலைவரிடம் நீங்கள் சொன்னதைசொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் .

எல்லாவற்றையும் உறுதி செய்ய மூத்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் வருவார் அவரை வைத்து எல்லா விஷயங்களையும் முடியுங்கள் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார் ராகுல் காந்தி.

கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாது என்று திமுக நிர்வாகிகளுக்கு தடை போட்டு இருக்கிறது திமுக தலைமை.

மொத்தத்தில் திமுக காங்கிரஸ் உறவு சுமூகமாக இல்லை.

நாங்கள் போய் அமித் ஷாவை பார்த்ததை கிண்டல் அடித்தார் ஸ்டாலின்.

இப்போது கனிமொழி போய் ராகுல் காந்தியை போய் பார்க்க வேண்டி இருக்கிறது என்று நக்கல் பண்ணுகிறார் எடப்பாடி.