
தமிழக அரசு சார்பில் 2016 முதல் 2022 வரையிலான ஆறு ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த நடிகர் நடிகை விருதுகள் தனுஷ், சூர்யா, விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா உள்ளிட்டேருக்கு வழங்கப்படுகிறது .

சிறந்த திரைப்படங்கள் நடிகர் நடிகைகள் விருதுகள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
விருதுகள் என்பது அல்லது பாராட்டு என்பது உடனுக்குடன் வழங்குவது பாராட்டுவது என்பதுதான் அந்தக் கலைஞருக்கு உண்மையான விருதாக கருதப்படும்.
2016 ஆம் ஆண்டு நடித்த நடிகருக்கான விருது அல்லது நடிகைக்கான விருது 2026 இல் வழங்குவது என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.
இப்போது கூட 2022 வரை தான் விருதுகள் வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

2023 முதல் 2025 வரை நடிகர் நடிகைக்கான விருது சிறந்த படத்துக்கான விருது இப்போது என்பது பற்றி அரசு எதுவும் சொல்லவில்லை.

விஜய் அரசியல் பிரவேசம் தேர்தல் காரணமாக இந்த விருது அறிவிப்பு வருகிறதோ என்று சந்தேகம் கூட ஏற்படுகிறது.

விருதுகளில் வேண்டாம் அரசியல். கலைஞர்களின் உரிய முறையில் உரிய நேரத்தில் கௌரவிப்பது என்பதுதான் உண்மையான பாராட்டும் விருதுமாகும்.

எனவே தான் நமது விகடகவி அட்டை படத்தில் எந்த தலைப்பும் இல்லாமல் விருது பெற்ற சினிமா நடிகைகளின் புகைப்படம் வைத்தோம்.

Leave a comment
Upload