தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260127220223193.jpg

விதவிதமாக வடை சுடுகிறார் எடப்பாடி, முதல்வர் ஸ்டாலின்.

நீங்க சுடாத வடையா ? இந்த விஷயத்தில் உங்களுக்கு தான் சர்வீஸ் ஜாஸ்தி !!

மேற்கு வங்க வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஒடிசா, ஜார்க்கண்ட் நீதிபதிகள், உச்சநீதிமன்றம் உத்தரவு.

இன்னும் கொஞ்ச நாள் போனா நீதிபதிகள் வீட்டு வரி வசூல் செய்ய வேண்டும் போல் தெரிகிறது !!

அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கும் நிலை உள்ளது மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் விமர்சனம்.

உங்க நிலைமை எப்படி?

சசிகலா தனிக்கட்சி தொடங்கினார்.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்?

எடப்பாடி பழனிச்சாமி பத்தாயிரம் அறிவிப்பு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது திருமாவளவன்.

அப்போ அந்த 5 ஆயிரத்துக்கும் அதே கதை தானா !!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கான தொகுதிகளை பாஜக மூலம் பெறுவோம் டிடிவி தினகரன்.

ஆமாம், அதுதானே முறை !!

நான் தவறு செய்திருந்தால் அரசியலில் இருந்து விலகுவேன் ஓபிஎஸ்.

என்னது நீங்க அரசியலில் இருக்கீங்களா ?

பாஜக சொல்லித்தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார் சசிகலா.

அக்கா இப்ப எல்லாம் புதுசா யோசிக்குது?

அமெரிக்காவுக்கு இந்தியாவை விற்று விட்டார் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

பத்தரத்தில் இவர் தான் சாட்சி கையெழுத்து போட்டு இருப்பாரோ !!

கட்டம், கிரகம் சரியில்லை என கூறி சிலர் திமுக ஆட்சிக்கு வராது என்கிறார்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

சரியா கேட்டுப்பாருங்க சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு சொல்லியிருப்பாங்க !!

இந்தத் தேர்தல் எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் போர் வேலூரில் விஜய் பேச்சு.

இது பெரிய அக்கப்போரா இருக்கும் போல இருக்கு !!

அறிவாலயம் பக்கம் மழைக்கு ஒதுங்கினால் கூட கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறார்கள் விஜய் விமர்சனம்.

ஆனா பனையூர் பக்கம் யாருமே வர மாட்டேங்குறாங்க !!

ஜனநாயகம் காக்க விஜய் குரல் கொடுப்பார் செங்கோட்டையன்.

ஆனால் ஜனநாயகம் படத்துக்கு குரல் கொடுக்க மாட்டார் .

234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்.

கூட்டணி கட்சி டார்ச்சர் இல்லாத ஒரே கட்சி நம் அண்ணன் கட்சி தான் !!