தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

அனஸ்வரா

20260127215001621.jpg

மலையாள பட உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்த அனஸ்வரா ராஜன் சமீப காலமாக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்பு தேடி வரத் தொடங்கி இருக்கிறது.. சமீபத்தில் இவர்கள் நடிப்பில் வெளியான' வித் லவ்' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அபர்ணதி

20260127215428752.jpg

தேன், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்த அபர்ணதி 'வெஞ்ஜன்ஸ் ' என்ற படத்தில் வில்லியாக நடிக்கிறார்.

ராதிகா

20260127215836443.jpg

"நான் சினிமாவுக்கு வந்தபோது என் தந்தை எம் ஆர் ராதாவின் பெயரைக் கூட சொல்ல விடாமல் என்னை அவமானப்படுத்தினார்கள். அவ்வளவு விமர்சனங்களை எதிர்கொண்டேன். இன்றைக்கு நான் தெனாவட்டுடன் பெருமையாக சொல்வேன், நான் எம் ஆர் ராதாவின் பொண்ணு, ஏனெனில் நான் யார் என்பதை நிரூபித்து விட்டேன் "என்கிறார் ராதிகா சரத்குமார்.

ரம்யா நம்பீசன்

20260127214302688.jpg

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் படத்தில் ரம்யா நம்பீசன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

சமந்தா

2026012721270397.jpg

சமூக வலைதளத்தில் தன்னை யாராவது விமர்சனம் செய்தால் அவர்களை பிளாக் செய்து விடுவேன் என்கிறார் நடிகை சமந்தா.

ராஷ்மிகா மந்தனா

"விஜய் தேவரகொண்டா எனக்கு துணையாக இருந்து, மோசமான டாக்சிக்கான ரிலேஷன்ஷிப்பில் இருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்தார். .இது எனக்கு நம்பிக்கையே முன்னேறவும் உதவியது. கேர்ள் ஃப்ரெண்ட் படத்தில் பூமா கதாபாத்திரம் படம் கஷ்டம் போல் நானும் கஷ்டப்பட்டேன் "என்று சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா ந சொன்ன ஒரு வீடியோ தற்சமயம் பரபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.

ஸ்ரீ லீலா

20260127212958677.jpg

மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை ரோல் மாடலாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு கல்லூரி விழாவில் நடிகை ஸ்ரீலிலா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

பிரியங்கா சோப்ரா

2026012721333423.jpg

"ஹாலிவுட் சினிமா எது பெரியது என்ற எல்லைக்கு நான் செல்ல விரும்பவில்லை. இதுதான் உன் எல்லை என்று கூறி, என்னை யாரும் எந்த ஒரு வரையறைக்குள்ளும் அடக்கி வைக்க முடியாது. எனக்கு எல்லை என்பதே கிடையாது "என்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.

ஸ்ரீ லீலா

20260127213402379.jpg

ஸ்ரீ லீலா சென்னையில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்ள வசதியாக வளசரவாசத்தில் சொந்தமாக ஒரு வீடு வாங்க திட்டமிட்டு இருக்கிறார்.

அனுபமா பரமேஸ்வரன்

20260127213700316.jpg

ஒரு விழாவில் அதிகாலை இரண்டு மணிக்கு யாருக்காவது வீடியோ கால் செய்ய விரும்புவீர்களா என்ற கேள்விக்கு நடிகை அனுபமா பரமேஸ்வரன் துருவ் விக்ரமுக்கு போன் செய்வேன் என்று சொல்லி இருக்கிறார்.