தொடர்கள்
பொது
நிலவுக்கு சென்றுள்ள முதல் பெண் வீராங்கணை!- கண்ணாழ்வார்

20260309212459613.jpeg

அமெரிக்காவின் நாசா விண்வெளியில் இருந்து நிலவின் மறுபக்கத்திற்கு ஆர்டிமிஸ் 2 என்ற விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

20260309215448571.jpg

(ஒரு ஃபுட்பால் அளவிற்கு தெரிவது தான் நம் பூமி. அங்கிருந்து பார்த்தால் நாம் அடித்துக் கொள்ளும் போர்களும், அழிக்கும் வளங்களும், நம் மத மாச்சர்யங்களும், மாய்ந்து மாய்ந்து எழுதும் கதை கவிதை இலக்கியங்கள் எல்லாம் எத்தனை அனர்த்தம் என்று புரிய வரும். இதற்குத் தானா இத்தனை ஆர்ப்பாட்டங்களும் மனிதா.....)

நிலவின் சுற்றுவட்ட பாதையை இந்த விண்கலம் நெருங்கி உள்ளது.

நிலவின் சுற்றுவட்ட பாதையை நெருங்கியுள்ள விண்கலம் புவியின் தாழ் சுற்றுவட்ட பாதைக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளில் மனித உடல் எப்படி செயல்படுகிறது என்பதை குறித்த டேட்டாக்களை சேகரிக்கும் ஆய்வு செய்ய உள்ளனர்.

20260309215345536.jpg

நாசா விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் கனடா நாட்டின் விண்வெளி வீரரான ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கிறிஸ்டினா கோச், நிலவுக்குப் பயணம் செய்யும் முதல் பெண் விண்வெளி வீராங்கணை.

ஏப்ரல் 2 அன்று ஏவப்பட்ட ஆர்டிமிஸ் 2 ராக்கெட் சுமார் 4 நாட்களுக்குப் பிறகு நிலவை நெருங்கியுள்ளது.

50 ஆண்டுகளுக்குபின்பு நிலவிற்கு அமெரிக்காவின் நாசா 4 வீரர்களை அனுப்பி உள்ளது.

20260309215411758.jpg

நிலவு அருகே சென்றுள்ள இந்த நான்கு விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து சுமார் 4,00,171 கிலோமீட்டர் (248,655 மைல்கள்) என்ற முந்தைய சாதனையைத் முறியடித்து சாதனை படைத்துள்ளனர்.

20260309212656645.jpeg