தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260310210628101.jpg

உண்மையான காங்கிரஸ் தமிழக வெற்றி கழகம் பக்கமே உள்ளது - விஜய் பேச்சு.

உண்மையாவா சொல்றீங்க ?

டெல்லி எஜமானர்களை கண்டு எடப்பாடி அஞ்சி நடுங்குகிறார் கனிமொழி.

உங்கள பாத்து கூட்டணி கட்சி பயப்படுற மாதிரி அப்படித்தானே !!

ஒருவருக்கு சீட் கொடுத்தால் 10 பேர்கள் எதிரியாக மாறுகிறார்கள் திருமாவளவன்.

பேசாம தேர்தல் அரசியல் வேண்டாம் என்று இருந்து விடுங்க பிரச்சனையே இருக்காது முடியுமா ?

அனுமதி தராவிட்டாலும் மீறி வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் விஜய்க்கு சீமான் அறிவுரை.

இது அறிவுரை மாதிரி தெரியலையே !!

டாக்டர் ராமதாஸ் கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க மறுப்பு.

எதுக்கும் ஐநா சபையில் ஒரு முயற்சி பண்ணி பாருங்க ஐயா.

நடிகர்கள் பின்னால் சென்றால் உங்களுக்குத்தான் ஆபத்து, ரசிகர்களுக்கு ரஜினி திடீர் எச்சரிக்கை.

ஆதவ் அர்ஜுனா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் !!

அரசியல் மன அழுத்தம் நிறைந்த துறை ஆகும், நடிகை ரோஜா பேச்சு.

நீங்க என்ன மாத்திரை சாப்பிடுறீங்க சிஸ்டர்.

தீபம் ஏற்றுவதை தடுத்ததை சொல்லி ஓட்டு கேட்க தயாரா திமுகவுக்கு பாஜக கேள்வி.

நீங்க பாபர் மசூதி இடித்தது சொல்லி ஓட்டு கேப்பீங்களா !!

ஜெயலலிதா பாணியில் திமுக சாதனையை பற்றி கேள்வி எழுப்பிய டாக்டர் தமிழிசை !!

ஏன் இந்த மோடி பாணி அமித்ஷா பாணி எல்லாம் இங்க ஒர்க் அவுட் ஆகாதா ?

அதிமுகவின் செல்லாத ஓட்டுகள் தான் திமுகவின் 19 வேட்பாளர்கள் -எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

தலைவர் எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாரோ ?

தமிழக அணியா , டெல்லி அணியா என்று மோதிப் பார்த்து விடுவோம் -உதயநிதி ஸ்டாலின்.

தேர்தல தலைவர் ஐபிஎல் மேட்ச் லெவலுக்கு கொண்டு போயிட்டாரு !!

ஆட்சியை தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்.

அதனால் தான் பெண் வாக்காளர்களுக்கு வாக்குறுதிகளை தலைவர்கள் வாரி வழங்குகிறார்கள் !!

காங்கிரஸ் கட்சியில் 40 பேர் நட்சத்திர பேச்சாளர்கள்.

எல்லாம் ஸ்டாலின் வாழ்க ! உதயநிதி வாழ்க !! என்று பேசணும் அவ்வளவுதானே ?