தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

20260311091742205.jpeg

(தனி தனி படமா போட டைம் இல்லையாம்)

பிரதீப் ரங்கநாதன்

நயன்தாரா தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் "எல் ஐ கே என்ற லவ் இன்சூரன்ஸ் கம்பெனி "படம் நிதி பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறார். இதற்கு இன்னொரு காரணம் பிரதீப் ரங்கநாதனின் சம்பளத் தொகையில் பாக்கி வைத்திருக்கிறார்களாம். பாக்கித் தொகை தந்தால் தான் டப்பிங் பேசுவேன் என்று சொல்லிவிட்டாராம் பிரதீப் ரங்கநாதன் இதுவும் ஒரு காரணமாம்.

பூஜா ஹெக் டே

20260311065227180.jpg

காஞ்சனா 4 படத்தில் நடித்து வரும் பூஜாஹெக்டே ஒரு இந்தி படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் .

கென் கருணாஸ்

கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் படம் 50 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. இதில் நாயகிகளாக அனிஷ்மா, பிரியான்ஷி, மீனாட்சி தினேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ் இசையில் யூத் படத்தில் இடம் பெற்ற 'முட்ட கலக்கி ' பாடல் 70 மில்லியன்களை கடந்துள்ளது .

மிருணாள்தாக்கூர்

"ஒரு சிகை விளம்பரத்தில் ரன்வீர் சிங்குடன் பணியாற்றிய பின்னரே திரை உலகினர் என்னை கவனிக்க தொடங்கினர். ரன்வீர் சிங் எனது அதிர்ஷ்ட கடவுள் "என்கிறார் நடிகை மிருணாள் தாக்கூர்.

மமீதா பைஜு

இரண்டு வானம் படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக மமீதா பைஜு நடித்திருக்கிறார்.

மாளவிகா

20260311065909237.jpg

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எல் .ஐ .கே' படத்தில் வால மீனு கேரக்டரில் நடித்திருக்கிறார் மாளவிகா.

நஸ்ரியா

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் வெப் தொடரில் நஸ்ரியா நடிக்கிறார் .

20260311091820766.jpeg

(ஆனாலும் ஹாங்காங் என்பதால் பிரியா வாரியருக்கு ஒரு பெஷல் படம்)

பிரியா வாரியார்

சமீபத்தில் ஆங்காங் சென்ற நடிகை பிரியா வாரியர் அங்கு மெட்ரோ ரயில் ஜாலியாக பயணம் செய்யும் புகைப்படங்களை வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

ராக்கா

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுனா தீபிகா படுகோன் நடிக்கும் படத்திற்கு ' ராக்கா' என்று பெயர் வைத்திருக்கிறார்கள் .இது ஒரு சயின்ஸ் ஃபிக்சன் படம்.

நித்யா மேனன்

20260311070447196.jpg

"என் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் அனுபவித்து கொண்டாடிக் கழிக்கிறேன். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று என்னிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. நான் ஒரு புரியாத புதிர் "என்கிறார் நடிகை நித்யா மேனன்.

கவுதம் கார்த்திக்

'மிஸ்டர் எக்ஸ் 'என்ற படத்தில் ஆர்யாவுக்கு வில்லனாக நடிக்கிறார் கவுதம் கார்த்திக் .

சாய் பல்லவி

இந்தியில் ராமாயணா என்ற படத்தில் நடிக்கிறார் சாய் பல்லவி. இது இரண்டு பாகமாக வெளியாகிறது. சாய் பல்லவிக்கு சம்பளமாக 12 கோடி என்று பேசப்பட்டது. முதல் பாகத்துக்கு 12 கோடி இரண்டாவது பாகத்துக்கு 12 கோடி என்று நினைத்துக் கொண்டிருந்தார். சாய் பல்லவி ஆனால், இரண்டு பாகத்துக்கும் சேர்த்துதான் இந்த 12 கோடி என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இதனால் கொஞ்சம் அப்செட்டான சாய் பல்லவி படத்தில் வெற்றிக்கு பிறகு நான் யார் என்று காட்டுகிறேன் பார் என்று உறுதியுடன் அமைதியாக நடிக்க வருகிறார்.

விக்னேஷ் சிவன்

20260311070558316.jpg

"என் பெயரை மறந்து விட்டு நயன்தாராவின் கணவர் என பலரும் சொல்வதைப் பார்த்து நான் பெருமை தான் படுகிறேன். இதில் வருத்தமில்லை. என் காதலுக்கு கிடைத்த வெற்றியாக இதை பார்க்கிறேன்" என்கிறார் விக்னேஷ் சிவன்.