
நன்றி: தினமணி
தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.
மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை என தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் பேசி வருகிறார்.

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய ரூ80 ஆயிரம் கோடி எங்கே போனது என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் கேள்வி எழப்பியுள்ளார்.
தேர்தலுக்கு முன்னரே ரூ5,000 தகுதியுள்ள பயனாளிகளுக்கு முன் பணமாக உதவி தொகைகள் உட்பட பல நல திட்டங்கள் செயல் படுத்த பயன்படுத்த பட்டது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு தன்னிடம் சிறப்பாக பணியாற்றி கொண்டிருந்த 500 ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்திற்கு இடமாற்றம் செய்து தன்னை வஞ்சித்து விட்டது. என்று தேர்தல் ஆணையத்தின் மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.
தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது பலருக்கு எப்படி தேர்தல் வேட்பு மனுவினை பூர்த்தி செய்வது கூட தெரியாமல் படிவத்தினை கொண்டு வந்து அரசு அதிகாரிகளிடம் கொடுத்து தொல்லை கொடுத்தனர்.

ஜோசப் விஜய் தன் கட்சியினரை வைத்து பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.

சென்ற வாரம் வரை திமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் முன்னணியில் இருந்தனர்.

தற்போது அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் அதிகமாக தெம்பாக பேசி வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் கையில் எடப்பாடி சசிகாலில் விழந்து பதவி பெற்றார் என்று ஒரு புகைப்படத்தை பிடித்து கொண்டு பேசி வருகிறார்.
எடப்பாடி ஒரு படி மேலே போய் பாலிடால் குடித்தவர்கள் எல்லாம் பேசி வருகிறார்கள் என்று உதயநிதிக்கு பதிலளித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் வரும்காலத்தில் மக்களுக்கு என்ன திட்டங்கள் முலம் சிறப்பாக செயல்படுத்துவேன் என்பதை பேசாமல் காலில் விழவது பற்றி பேசி வருவது திமுக தொண்டர்களையே முகம் சுளிக்க வைக்கிறது.

சீமான் வழக்கம் போல் எல்லாரையும் கலாய்த்து பேசி வருகிறார்.
தேர்தல் திருவிழா வரும் வாரம் இன்னும் சூடு பிடிக்கும் …
வெயிட் அண்ட் சீ.!

Leave a comment
Upload