
கோடை விடுமுறை. அந்த புதிதாக வந்த மருமகள் பூரணி. மாமியார், மாமனார், கணவர்மூவருமே மிகவும் அன்புடனும் பாசத்துடனும் பழகினார்கள். ஆறு மாதத்திற்குள்ளாகவே பிறந்தவீட்டு ஞாபகம் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கத் தொடங்கியது. மிகவும் சந்தோஷமாகஇருந்தாள்.
விடுமுறைக்கு நாத்தனாரும், மூத்தாரும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வருவதாகஇருந்தது. மிகவும் ஆவலாக இருந்தாள்.
பூரிக்கு மாவு பிசைந்து வைத்துவிட்டு, மசாலுக்கு உருளைக்கிழங்குகளை வேகவைத்தாள். கொஞ்சம் வாசலுக்கு வந்து உட்கார்ந்தாள் பூரணி.
ஐசு, மாது, ரகு, கவி, அபி என மூன்று ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும்வந்தது முதல் ஒட்டிக் கொண்டனர். பூரணியிடம் நிறைய கொஞ்சல்தான்.
மீண்டும் கிச்சனுக்கு வந்தவள் அதிர்ந்தாள். குழந்தைகள் எல்லாம் பூரி மாவை அப்படியே பிச்சுபிச்சுத் தின்று கொண்டிருந்தார்கள். பாம்பு, பிள்ளையார், என்று வேறு செய்துகொண்டிருந்தார்கள். ஐசு மாவை கோணமானலாக சப்பாத்திக் கல்லில் தேய்த்துக்கொண்டிருந்தாள்.
பூரணிக்கு சமையற்கட்டே சுற்றியது. "ஹேய் என்ன பண்றீங்க எல்லாரும்" அலறினாள். எல்லா குழந்தைகளும் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியேறினர். அபிஷேக்தான்சின்னவன். ஒன்னாம் வகுப்பு போகப் போகிறான். கஷ்கு முஷ்கு என்று களையாக சமத்தாகஇருக்கும். அவனும் தத்தி தத்தி ஓடுகிறான்.
போகிற போக்கில் சப்பாத்தி மாவெல்லாம் சிந்தி கீழே 'ப்பசக்' 'ப்பசக்' காலெல்லாம் ஒட்டிக்கொண்டு! அம்மாடியோவ்வ்! பூரணி அழுதே விட்டாள். நாத்தனார், ஓரகத்தி, மாமியார் மூவரும்கோவிலுக்கு ஜூட். மாமனார், குழந்தைகளின் தந்தைகள், கணவர் அரசியல் பேச்சுசுவாரசியம். குழந்தைகள் கலாட்டாவை அதாவது சுருட்டிய 'வாலை' அவிழ்த்து விட்டன.
பூரணிக்கு படுப்பதற்கு இரவு பதினொன்றானது. மீண்டும் மாவு பிசைந்து பூரி செய்துகொடுத்தால் ஆகாதா பின்னே.
மறுநாள் வெஜ் புலாவ் செய்வதற்காக காய்கறிகளை கழுவி ஒரு பெரிய ட்ரேயில் போட்டுநறுக்குவதற்கு கத்தி எடுத்து வருவதற்குள் குழந்தைகள் கையில் கேரட்டுகள். குட்டிஉருளைக்கிழங்குகளால் போலிங் போட்டுக் கொண்டு சும்மா அதிரடியாக இருந்தது. என்னசொன்னால் என்ன நடக்குமோ என்ற பயம் வேறு. எவ்வளவு சிரமப்பட்டு புலாவ் செய்திருப்பாள்என்பது பூரணிக்கே வெளிச்சம்.
இதில் ஒன்றுக்கு கேபேஜ் பிடிக்காது. ஒன்றுக்கு முருங்கை பிடிக்காது. மற்றொன்றிற்கு வாழை, உருளை ரோஸ்ட்தான் பிடிக்கும். ஒன்றுக்கு சாம்பார் என்றால் மற்றொன்றிற்கு ரசம்பிடிக்கும்.
ஒருவாரத்தில் ஒருவழியாகி விழி பிதுங்கி விட்டாள். மிகவும் சோர்வானாள். எல்லோரும்உதவினாலும் லிட்டில்கள் அட்ராசிட்டி தாங்க முடியவில்லை.
இரவு கணவனிடம் மெதுவாக ஆரம்பித்தாள். "என்னங்க, எங்க வீட்டிலயும் எங்கக்கா, அண்ணன்லாம் கொழந்தங்கள அழச்சுக்கிட்டு வந்துருக்காங்களாம். ஒரு ஒருவாரம் போய்ட்டுவரவா?"
"போய்ட்டு வாயேன். நாளைக்கு அம்மாட்ட பேசறேன். நம்பக் கார்லயே கொண்டு விடச்சொல்றேன். அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினாள்.
காரிலிருந்து இறங்கிய பூரணி "ஹாய்ச் செல்லங்களா என்ன பண்றீங்க? நா ஒங்கள ரொம்பமிஸ் பண்ணேன். வாங்க நம்பல்லாம் சேர்ந்து எதாவது கேம் ஆடலாம்" என்றவளைஆச்சர்யமாக பார்த்தான் பாஸ்கரன். அவள் கணவன். எதுவும் கேட்கவில்லை. ஒரு வாரம்என்று போனவள் நான்கே நாட்களில் திரும்பியிருக்கிறாள்.
யாரும் கேட்காவிட்டாலும் பூரணிக்குத்தானே தெரியும். அப்பப்பா பிள்ளைகளா அதுங்க? ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதும், கையில் கிடைத்ததை தூக்கி எறிவதும், ஒவ்வொருவேளையும் தட்டுத்தட்டாய் சாப்பாட்டை வேஸ்டாய் தூக்கிப் போடுவதும், மொபைலில்கண்டதையும் பார்ப்பதும்! பூரணிக்கு விழி பிதுங்கியது. பெற்றோர்களும் கண்டுக்கவும்இல்லை. கண்டிக்கவும் இல்லை. விட்டால் போதும் என்று புறப்பட்டு வந்துவிட்டாள்.

Leave a comment
Upload