தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

மிருணாள் தாக்கூர்

20260422092052219.jpeg

இசையமைப்பாளர் தேவி பிரசாத் நடிகராக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க இருக்கிறார். காரணம் கதை தான் என்கிறார்.

வரலட்சுமி

20260422101124723.jpg

"யாருக்கும் வாழ்க்கை நிரந்தரம் இல்லை என்ற எண்ணம் எனக்கு சிறுவயதிலிருந்தே இருந்தது. அதான் நான் யாரிடமும் அதிக பாசம் வைத்ததில்லை. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று சொன்னால் வாழ்க்கையை வாழ முடியாது நம் வாழ்க்கை நாம் தான் வாழ வேண்டும் "என்கிறார் நடிகை வரலட்சுமி.

துஷாரா விஜயன்

20260422100432868.jpg

"எனக்கு சினிமாவை தவிர வேற எந்த திட்டமும் இருந்ததே இல்லை. எப்படியாவது நடிகையாக வேண்டும் என்று நினைத்தேன். அதனால் பிளான் பி என்பதே இல்லை "என்கிறார் நடிகை துஷாரா விஜயன்.

பூஜா ஹெக்டே

20260422101701782.jpgடூபிஸ் உடையில் தான் இருக்கும் புகைப்படத்தைப்பகிர்ந்து இன்ஸ்டாவையே அதிர வைத்து இருக்கிறார் பூஜா ஹெக்டே. எப்படி இவ்வளவு சின்ன ஆடைகள் தயாரிக்கிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

சமந்தா

20260422100958874.jpg

திருமணத்திற்கு பின் நடிப்பதில் அதிக கவனம் செலுத்த தொடங்கி விட்டார் நடிகை சமந்தா. சில திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடிக்க இருக்கிறாராம். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் தந்த போட்டோ ஷுட்டும் அப்ளாஸ் அள்ளுகிறது..

திரிஷா

20260422100537474.jpg

திரிஷாவின் பழைய பேட்டி ஒன்று இப்போது ட்ரெண்டாகி வருகிறது."கர்ப்பம் ஆனால் மட்டும்தான் நடிப்புக்கு பிரேக் எடுப்பேன். மற்றபடி விலக மாட்டேன். ஹீரோயின் கேரக்டர் கிடைக்கவில்லை என்றால் வயதுக்கு தகுந்த கதாபாத்திரத்தில் நடிப்பேன். கடைசி மூச்சு இருக்கும் வரை நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் " என்று சொல்லி இருக்கிறார் திரிஷா .

ஜான்வி கபூர்

20260422095440601.jpg

மெகா பவர் ஸ்டார் ராம்சரண் ஜான்வி கபூர் ஜோடி நடித்த படம் பெத்தி.பான் இந்தியா படமான இந்தப் படத்தில் ஜான்வி கபூர் தனது கதாபாத்திரத்தின் மூலம் அழகான நளினத்தையும் பாரம்பரிய கவர்ச்சியும் கொண்டுவந்துள்ளார் என்ற பாராட்டை பெறுகிறார்.

நிக்கிகல்ராணி

20260422100125500.jpg

"நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தால் பெரும்பாலான நடிகைகள் திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள் "என்கிறார் நடிகை நிக்கி கல்ராணி.

ராஷ்மிகா

20260422092956570.jpeg

இந்தியில் உருவாகும் காக்டெயில் 2 படத்தில் ராஷ்மிகா கீர்த்தி சனோன் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தியைப் பற்றி குறிப்பிடும் போது "இந்த உடையில் ...ஹாட்டாக இருக்கிறார் என்றவர் ஹாட்டக ஆங்கிலத்தில் என்பதற்கு முன்பு எஃப் ஆபாச வார்த்தையை பயன்படுத்தினார். ராஷ்மிகா பேசியது தவறு என்று அவரது காதில்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சொல்ல உடனே எழுந்து மைக்கை பிடித்து அந்த வார்த்தை நான் பேசியது தவறு அதை பத்திரிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டாம் மன்னிக்கவும் என்றார் ராஷ்மிகா.

ஸ்ரீ லீலா

20260422092600573.jpeg

நடிகை ஸ்ரீ லீலா கிரிக்கெட் வீரர் திலக் வர்மா காதல் என்ற பேச்சு சமீபத்தில் வரத் தொடங்கி இருக்கிறது.