தொடர்கள்
பொது
பாசியும் மரம் போலே மனிதனுக்கு நண்பனடா - ஸ்ரீராம்

2026042022012274.jpeg

நமக்கு பாசியை சுத்தம் செய்துதான் (அகற்றி) பழக்கம்...

ஆனால் அதே பாசி நமக்கு அத்தியாவசியமான ஆக்ஸிஜனை தயாரித்து கொடுக்கும் என்றால் நம்ப முடியுமா உங்களால்?!?

முடியும் என்கிறது...

இந்தியாவின் முதல் "பாசி மரம்" மஷ்ரூம் வேர்ல்ட் குரூப் நிறுவனம்

இவர்களால் இரண்டு ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பாசி மரம், போபாலில் (மத்தியப் பிரதேசம்) உள்ள சுவாமி விவேகானந்தர் பூங்காவில் 1/மே/26 அன்று, மத்திய மந்திரி "விஸ்வாஸ் சாரங்க்" அவரால் திறக்கப்பட்டது ...

முக்கிய அம்சங்கள் மற்றும் திறன்கள்

செயல்திறன்: ஒரு தனி அலகு ஆண்டுக்குச் சுமார் 1.5 டன் காற்றை (CO2- கார்பன்-டை-ஆக்ஸைடு) உறிஞ்சி, 1 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதாகக் கூறப்படுகிறது .

25 மரங்கள் : இந்த நுண்பாசிகளின் கார்பன் சேமிப்புத் திறன் மிகவும் அதிகமாக இருப்பதால், படத்தில் உள்ள சிறிய யூனிட், 25 முதிர்ந்த மரங்களின் காற்றைச் சுத்தப்படுத்தும் திறனுக்குச் சமமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மாசு குறைப்பு :
இந்த அமைப்பு 15 மீட்டர் சுற்றளவிற்குள் மாசுகளை 45–55% வரை குறைக்க வல்லது.

தானியங்கி திறன்:
முற்றிலும் சூரிய மின் தகடுகளால் (Solar Panels) இயங்கும் இது, திரவம் மற்றும் பாசிகளைத் தொடர்ந்து சுழற்சி செய்து, ஒளி உயிரியல் வினைகலனை (Photo Bio-Reactor) பயன்படுத்தித் தானாகவே செயல்படுகிறது.

ஆகையால் நகர்ப்புறங்களில், இது ஒரு இயற்கையான காற்று சுத்திகரிப்பானாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

25 மரம் நட்டு வளர்த்து அதை பாதுகாப்பு செய்து அதனால் கிடைக்கும் சுத்தமான ஆக்ஸிஜனை இந்த திரவ மரம் தரும் என்றால் ஆச்சரியம் கலந்த ஆனந்தமே...

என்ன 25 மரம் தரும் நிழல் தான் கிடைக்காது...?!?

20260420220412623.jpeg