வருடந்தோறும் ஏப்ரல் மே மாதங்களில் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் ஏற்காடு சுற்றுலா பயணிகளால் திக்கு முக்காடி விடுகிறது என்பது சகஜமான ஒன்று.
மிக முக்கியமாக நீலகிரி மாவட்டம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

இ பாஸ் அறிமுகம் என்பது போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தியதா என்பது கேள்விக்குறி தான்.
கடந்த வருடத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது போல இருந்தது தற்போது வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இ பாஸ் ஒரு கண்துடைப்பா என்று எண்ன தோன்றுகிறது.

மாவட்ட நிர்வாகமும் காவல் துறை ஏதேதோ ஐடியா செய்து போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தும் நெரிசலை தவிர்க்கமுடியவில்லை என்பதே உண்மை.
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கடந்த மாதம் முதல் சர்கியூட் பஸ் நகர் முழுவதும் நகரத்துவங்கியது எந்த விதமான பெரிய வாகனங்களை நகருக்குள் அனுமதிப்பதில்லை என்று கூறி விட்டது காவல் துறையினர்.
குன்னூர் பகுதியில் இருந்து வரும் அனைத்து சுற்றுலா வேன்கள் பஸ்கள் ஊட்டி வாயிலான ஆவின் வளாகத்தில் நிறுத்த பட்டு சர்கியூட் பஸ்சில் ஏறி நகரினுள் வலம் வந்து சுற்றுலா ஸ்தலங்களை பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது அதே போல கூடலூர் வழியாக ஊட்டி நகருக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் கால்ப் லிங்க் சாலையில் நிறுத்தப்பட்டு சர்க்யூட் பஸ் மூலம் நகரினுள் அழைத்து வரபடுகின்றனர்.
இந்த ஐடியா ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசலை குறைத்திருந்தாலும் நகரினுள் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.
குன்னூர் முதல் ஊட்டி வரை போக்குவரத்து வெறிச்சோடி இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.
ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் பிரசித்திபெற்றது தற்போது சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருவது ஸ்ரீ கர்நாடகா கார்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கோவையில் இருந்து ஊட்டி வரும் வாகனங்கள் காட்டேரி பகுதியில் இருந்து சேலாஸ் வழியாக கர்நாடகா கார்டன் வழியாக வருவது இந்த கார்டனுக்கு ப்ளஸ் பாயிண்ட்.
இந்த கார்டன் ஒரு வித்தியாசமான ஒன்று சாம்பிராணி மரம் வளர்த்து மெய்ஸ் பசில் பெரிய தொங்கும் பாலம் பிரமாண்ட கண்ணாடி வீடு அதனுள் அருமையான விதவிதமான மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இசை மேடை, நீரூற்று மற்றும் தேயிலை எஸ்டேட்டும் இங்கு உள்ளது.
இந்த பூங்காவில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகளுடன் நாமும் வலம் வந்தோம்.
ஹைதிரபாதில் இருந்து வந்துள்ள சிராஜ் நம்மிடம் பேசினார்,

“ நான் முதல் முறையாக ஊட்டி வருகிறேன் இயற்கை சூழ்ந்து இருப்பது அழகாக இருக்கிறது. பொட்டானிக்கல் கார்டன் விசிட் செய்தோம் அங்கு மலர்களை பார்த்து பிரமித்து போனேன்.

இங்கு கர்நாடகா கார்டன் வந்தவுடன் ஆச்சரியமாகவே இருக்கிறது. மிகவும் வித்தியாசமான கார்டன்.
கிளாஸ் அவுசினுள் மலர்கள் அருமை. கிளாடியேட்டர்ஸ் சிலை அருமை.
இங்கு வந்தவுடன் மனம் இதமாக இருக்கிறது. இதை உருவாக்கி பராமரிக்கும் தோட்டக்கலை துறைக்கு எங்களின் வாழ்த்துக்கள்.
வாழ்கையில் ஒரு முறையாவது இங்கு வந்து செல்வது ஒரு வரபிரசாதம் என்கிறார்.
சிவகங்கையில் இருந்து வந்திருந்த சரவணன் வெற்றிச்செல்வி தம்பதியினர் உற்சாகமாக பேசினார்கள்,

“ இந்த கர்நாடகா கார்டன் அருமையாக இருக்கிறது இங்கு எல்லாம் ரசித்து உருவாக்கியுள்ளார்கள் எல்லாம் யுனிக்கா இருக்கிறது.
பிள்ளைகள் ரொம்பவே என்ஜாய் பண்ணறாங்க நம்ம பேரன்.பேத்தி களோடு வரும்பொழுது அவர்களின் என்ஜாய்மென்ட் நமக்கு சந்தோஷமாய் இருக்கிறது என்கிறார் வெற்றிச்செல்வி

என்னை பொறுத்தவரை ஹன்ட்ரட் ரூபீஸ் அதிகம் நாற்பது ரூபாய் ஓகே என்று தோன்றியது.
உள்ளே வந்தவுடன் ஹன்ட்ரட் ரூபீஸ் பத்தாது அதிகமா கொடுக்கலாம் இங்கு வேரலெவெல்ல இருக்கு.
ஊட்டி டவுன் நல்லா இருக்கு பிளாஸ்டிக் தட பன்னியருகாங்க இத பண்ணிட்டா இயற்கையை பாதுகத்துக்கலாம் இத தமிழ் நாடு இந்தியா என்று தொடர்ந்தால் நம்மை மிஞ்ச ஆளே இல்ல சார்,
எங்க மாவட்டம் சிவகங்கை மழையே இல்லை எங்க பாரு பிளாஸ்டிகை எரிச்சிகிட்டு இருப்பாங்க அதில் ஊட்டி நல்லாயிருக்கு சார், அதே சமயம் இன்னும் இம்ப்ரூவ்மென்ட் வேணும் சீப் அண்ட் பெஸ்ட் வேணும் கொஞ்சம் கம்மியா இருந்தா நல்லது.
உதாரணத்திற்கு பிளாட்பார கடைகளில் பத்து ரூபாய் விற்கும் பொருள் 45 ரூபாய்க்கு விற்பது சரியா ,ஃபுட் நன்றாக இருக்கிறது விலை அதிகமென்பதால் நடுத்தர பேமிலிக்கு ஊட்டி ஒத்துவராதோ என்று தோன்றுகிறது.

அதை மாற்றினால் கூட்டம் வரும்.இது கடவுள் அருள் பெற்ற ஊர் ரிச்சா வரும் வருங்கால தலைமுறையினருக்கு நல்லா டெவலப் பண்ணனும் இந்த இடம் எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது எனக்கு 15 வயது குறைந்த ஃபீலிங்! ஒரு விஷயம் பொழைக்க தெரிந்தவர் இங்கு வந்தால் என்ன வேலை செய்தாலும் சக்சஸ் ஃபுல்லா இருக்கலாம்”.
ஆந்திரா விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த இளம் ஜோடி மணி அச்சுதா கூறும்போது,

“ எங்க ஊர் விசாகப்பட்டினம் கூட்ட நெரிசல் அதிகம் இங்கு வந்த பின் ஏதோ ஹெவனில் இருப்பது போல தோன்றுகிறது.
மனநிம்மதி வேண்டி வருபவர்களுக்கு இது ஒரு சொர்க்க பூமி. ஒரு விஷயம் போக்குவரத்து மிக குறைவு சர்க்யூட் பஸ் இருந்தாலும் அது எல்லா இடங்களுக்கும் செல்வதில்லை இந்த கர்நாடகா கார்டன் சூப்பர் “.
யு பி பரேலியில் இருந்து விசிட் செய்த சுமன் தீக்ஷித் இஷிகா தம்பதி திர்லிங்காக பேசினர்,

“ இந்த ஊர் கார்டன் மிக அருமையாக இருக்கிறது. மலர்கள் இயற்கை அழகை ரசித்து பிரமித்துள்ளோம் எங்க உறவு நண்பர்களை இங்கு வர சொல்வோம் “.
தற்போது நீலகிரிக்கு இந்தியா முழுவதுமிருந்து சுற்றுல்லா பயணிகள் வந்தவண்ணம் இருக்கிறார்கள் அதே நேரத்தில் ஊட்டி க்ளீனாக இல்லை என்பது தான் உண்மை!.

ஊட்டி பஸ் நிலையம் மிக மோசமாக உள்ளது ஒரு உலக சுற்றுலா தளத்தில் இப்படி ஒரு பஸ் நிலையமா என்று முகம் சுளிக்க வைக்கிறது டாய்லெட் இருக்கிறது ஆனால் மிக மோசம்.
சுற்றுலா பயணிகள் விரும்பி பயணிக்கும் மலை ரயில் ஒரு த்ரில்லிங்கான ஒன்று அதே சமயம் பழைய ரயில் நிலைய முகப்பு மிஸ்சிங் சிறிய ரயிலுக்கு பிரமாண்ட ரயில் நிலைய முகப்பு தேவையா என்று தோன்றுகிறது.

ரயில்வே துறை இங்குள்ள ரயில்வே ஏரியாவில் தேவையற்ற கட்டுமான வேலைகளை செய்த வண்ணம் கோடிகளை விரையம் செய்து கொண்டிருப்பது வருத்தமான ஒன்று.
மலைகளின் அரசியின் அழகு பறிபோய் கொண்டிருப்பது வேதனையான விஷயம்.

Leave a comment
Upload