தொடர்கள்
பொது
“ கலெக்டர் மற்றும் அதிகாரிகள் துவக்கி வைக்காத ஊட்டி 128 வது மலர் கண்காட்சி மர்மம் “ -ஸ்வேதா அப்புதாஸ்

வரலாற்று சிறப்புமிக்க மற்றும் உலக புகழ் பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வருடந்தோறும் மே மாதம் முன்றாவது வார வெள்ளிகிழமை துவங்கும்.

20260422104830307.jpeg

ஊட்டி பொட்டானிக்கல் கார்டனை உருவாக்கின பிரிட்டிஷ் தோட்டக்கலை அதிகாரி மெக் ஐவர் முதன் முதலில் காய் கறி கண்காட்சி நடத்தியுள்ளார்.
ஆரம்பத்தில் வெஜிடேபிள் கார்டனாக உருவாகி பின்னர் மலர்கள் பூங்காவாக உருவானது இந்த கார்டன்.

2026042210224311.jpeg
லண்டனில் இருந்து எடுத்து வரப்பட்ட மலர் விதைகள் மரங்கள் நடப்பட்டு பிரமாண்ட பூங்கா அமைக்கப்பட்டு ஆசியாவின் மிக பெரிய பூங்காவாகும்.
1896 ஆம் ஆண்டு முதல் மலர் கண்காட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பூங்கா உருவாகி 203 ஆண்டுகள் கடந்துள்ளது.
பிரிட்டிஷ் காலத்திலும் சரி தற்போது தோட்டக்கலை கைக்கு பூங்கா வந்த பின்னும் ஒரு காலத்தில் இந்த பூங்காவிலே பூத்து குலுங்கும் மலர்கள் தான் கோடை காலத்தில் மலர் காட்சியாக அமைந்து வந்தன.

20260422102724205.jpeg


பின்னர் மலர் கண்காட்சி ஸ்ட்ரக்ச்சர் அமைத்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வருவது ஒரு புதிய சகாப்தம் தொடர வருடந்தோறும் பராமரித்து விதைகள் நாற்று நடப்பட்டு பூத்து குலுங்கும் மலர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு பெங்களூர் கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரபட்ட கொய் மலர்களை கொண்டு அலங்காரங்கள் தொடர்கின்றன.

20260422105318824.jpeg
இதே பாணியில் இந்த ஆண்டு 128 வது மலர் கண்காட்சியை நடத்த முடிவு செய்தனர் தோட்டக்கலை துறையினர்.
தேர்தல் , ஆட்சி மாற்றத்தில் குழம்பிப்போன தோட்டக்கலை துறையும் மாவட்ட நிர்வாகமும் எப்பொழுது மலர் கண்காட்சி துவங்குவது என்று தெரியாமல் தவித்து வந்தனர்.
புதிய தா வே கா ஆட்சி பொறுப்பேற்றவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்வியா தண்ணீரு மற்றும் அதிகாரிகள் தடுமாறியுள்ளனர்.
மலர் கண்காட்சி துவக்கம் ஒரு கேள்விக்குறியாகி ஒரு வழியாக 18 ஆம் தேதி திங்கட்கிழமை துவக்கம் என்று அறிவித்து உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

20260422102829133.jpeg
17 ஆம் தேதி பலத்த மழை கொட்டி திர்க்க பூங்கா தண்ணீரில் மிதக்க அலங்கார பணிகள் தொய்வானது கோவை கண்ணன் மலர் அலங்கார குழு தவித்து விட்டார்கள்.
விடிய விடிய அலங்கார பணிகள் காலை 9 மணி வரை நடந்தது.
18 ஆம் தேதி காலை மலர் காட்சி துவக்கம் 10 மணி ஆகியும் எந்த அதிகாரியும் வரவில்லை.
மாவட்ட ஆட்சியர் தான் திறந்து வைப்பார் என்று கூறப்பட்டது ஆனால் அவர் வரவில்லை.
நீலகிரி எஸ் பி நிஷாவும் மிஸ்ஸிங்.
குன்னூரில் இருந்து ஓடோடி வந்த சங்கீதா.இ.ஆ.ப.
சார் ஆட்சியர் பூங்காவில் கலெக்டர்,எஸ் பி மற்ற அதிகாரிகள் வரவில்லை என்று ஷாக்கில் வந்த வேகத்தில் சென்று விட்டார்.
பின்னர் ஊட்டி எம் எல் ஏ போஜராஜன் கார்டனுக்கு வந்து சேர அவரை வரவேற்க யாரும் இல்லை ஒரு சாதாரண சுற்றுலா பயணி போன்று தன் சகாக்களுடன் மலர் கண்காட்சியை பார்வையிட்டு விடைபெற்றது மிகவும் நெருடலான நிகழ்வு.

20260422103205238.jpeg


இதுவரை ஊட்டி மலர் கண்காட்சி ஒரு முக்கிய வி வி ஐ பி கரத்தால் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்கள்.
ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கட்டாயம் துவக்கி வைத்த பாரம்பரியம் நிகழ்ந்துள்ளது.
இந்த வருடம் மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்வியா தண்ணீரு ஏன் மலர் கண்காட்சியை புறக்கணித்தார் உடன் அனைத்து அதிகாரிகளும் வராதது மிக பெரிய மர்மம்.

20260422103311635.jpeg
14 ஆம் தேதி 21 வது ரோஜா கண்காட்சியை அதிகாரிகள் புடைசூழ திறந்து வைத்த ஆட்சியர் மற்றும் எஸ் பி ஏன் பாரம்பரிய மிக்க மலர் கண்காட்சியை துவக்கி வைக்காதது வேதனை அளிக்கிறது என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.
அழைப்பிதழ் கூட இந்த மலர் கண்காட்சிக்கு பிரிண்ட் செய்யவில்லை என்பது வரலாற்று சிறப்பு.
கொரானா காலத்தில் கூட மலர் கண்காட்சி வைக்கப்பட்டு திறந்து வைத்தார் அப்போதய கலெக்டர் இன்னசென்ட் திவ்வியா.
மலர் கண்காட்சி அன்று காலை கார்டனுள் சென்றோம்

20260422103508529.jpeg

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் ,வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர், லைட் ஹவுஸ், மகாபலிபுரம் கடற்கரை கோயில் , நடன மங்கைகள்,குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை மலர் வடிவமைப்பு

20260422104924601.jpeg

ஓயிலாட்டம்,பொய்கால் குதிரை,தப்பாட்டம்,கரகாட்டம், நாதஸ்வரம்,தவில்,செஞ்சிகோட்டை படை வீரர்கள்,விவசாயி என்று 7 லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டன.

20260422103544958.jpeg
சென்ட்ரல் ஸ்டேஷன் அலங்காரம் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது தான்.!
கார்டன் ஊழியர்கள் இரவோடு இரவாக 50 ஆயிரம் மலர் செடிகளை மாடங்களில் அடுக்கி வைத்தனர்.
பாரம்பரிய மிக்க இத்தாலிய கார்டனில் பூக்கள் பூத்து குலுங்கின.

20260422103619490.jpeg

சுற்றுலா பயணிகள் மலர்களை கண்டு ரசித்தனர்.
தூத்துக்குடியில் இருந்து வந்திருந்த ராஜ்கபூர் காலை கார்டனில் ஆஜர்,

2026042210364596.jpeg
“ இந்த மலர் கண்காட்சியை பார்த்து பிரமித்து நிற்கிறேன் இப்படியெல்லாம் நடக்குமா? என்று ஆச்சர்யமாக இருக்கிறது இந்த வருடம் மலர் கண்காட்சி சூப்பர் “ என்கிறார்.


மேற்கு வங்கத்தில் இருந்து வந்திருந்த மனோஜ் ஷர்மா குடும்பத்தினர் மலர் கண்காட்சியை பார்த்து அசந்து விட்டனர்.

20260422103742119.jpeg
“ மலர்களின் அலங்காரம் ரொம்பவே அழகாக இருக்கிறது.
வெதர் குளிர்ச்சியாக உள்ளது.
எங்க வெஸ்ட் பெங்காலில் வின்டரில் மலர் கண்காட்சி நடக்கும் அதை விட இங்கு மலர் அலங்காரம் அருமை “ என்கின்றனர்.


பெங்களூரில் இருந்து வந்திருந்து பிரேமா ஹெக்டே கூறும்போது,

20260422105206650.jpeg

“ இந்த மலர் கண்காட்சி கண்ணுக்கு விருந்தாக உள்ளது எங்க ஊர் கபன் பார்க்கில் கூட இப்படிப்பட்ட மலர்களின் கண்காட்சி பார்க்க முடியாது அரேஞ் செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் “

கோவையை சேர்ந்த அணிநினியா,

20260422103903609.jpeg

“ நான் ஃபர்ஸ்ட் டைம் மலர் கண்காட்சிக்கு வருகிறேன். என் மகனுக்கு 12 வயது ஆகிறது அவன் இதை பார்த்து அசந்து போய் விட்டான்.
சென்ட்ரல் ஸ்டேஷன் மற்றும் அனைத்து மலர் அலங்காரம் சூப்பர்.


நான் போஷில் வேலை ஜெர்மனி சென்று அங்கும் மலர் கண்காட்சி பார்த்துள்ளேன் அதை விட இங்கு தான் சூப்பர் நிறைய படம் எடுத்துள்ளேன் அங்கு போகும் பொழுது அவர்களுக்கு இந்த மலர் கண்காட்சி அழகை காண்பிப்பேன்”.
வசந்த் பத்மஸ்வர்ணா அர்ஜுன் மற்றும் வருண் குடும்பத்தினர் மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்,

20260422104009176.jpeg
“ நாங்க கோவை சிங்காநல்லூரில் இருந்து வருகிறோம், பெங்களூர் சென்னையில் இருக்கும் போது இங்கு வரவேண்டும் என்று யோசிப்போம் முடியாது.இப்போ கோவை ஷிப்ட் ஆன பிறகு இங்கு வந்துள்ளோம், ஷோ நன்றாக இருக்கிறது மலர்கள் சற்று குறைவாக இருந்தாலும் ரொம்ப அழகாக அரேஞ் செய்துள்ளனர் தோட்டக்கலைக்கு வாழ்த்துகள்.
கூட்டமும் குறைவு கிளைமேட் அருமை “.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு பள்ளிகளின் மாணவிகளை நீலகிரி கோடை கொண்டாட்ட கல்வி அதிகாரிகளும் ஆசிரியர்களும் மலர் கண்காட்சியை காண அழைத்து வந்து மகிழ்வித்தனர்.

20260422104102280.jpeg
முதல் நாளை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாகியுள்ளது. இந்த வருடம் பத்து நாள் ஷோ.
நீலகிரியில் பல குடியிருப்பு வாசிகள் தங்களின் வீடுகளில் பூத்தோட்டம் அமைத்து பராமரிப்பது வழக்கம்.
தோட்டக்கலை துறை வருடந்தோறும் இந்த வீட்டு பூதோட்டங்களை போய் சந்தித்து அதில் சிறந்த முறையில் பராமரிக்கும் கார்டனுக்கு பரிசுகள் வழங்கிவருகின்றனர் .

20260422104207877.jpeg

இந்த வருடம் முதல் பரிசை பெற்ற லவ்டேல் பகுதியை சேர்ந்த “பிரேம் நிவாஸ் “ வீட்டு தலைவர் விக்டர் பிரபுராஜை சந்தித்து பேசினோம்,

20260422104240808.jpeg

“ நான் கடந்த 18 வருஷமாக மலர் கண்காட்சி வீட்டு கார்டன் பராமரிப்பு போட்டியில் கலந்து முதல் மற்றும் இரண்டாம் பரிசை பெற்று வருகிறேன்.
எனக்கு பூச்செடிகள் பராமரிப்பு ஒரு சிறந்த பொழுதுபோக்கு காலை எழுந்தவுடன் பூக்களை ரசிப்பது தண்ணீர் ஊற்றுவது களை எடுத்து பராமரிப்பது மிகவும் பிடித்த ஒன்று. டேலியா, மெரிகோல்ட், பிளாக்ஸ் மற்றும் ரோஜாக்கள் உள்ளன இந்த வருடம் முதல் பரிசு கிடைத்தது மகிழ்ச்சி”
என்கிறார்.


கார்டனில் இரவில் மின் விளக்குகள் அலங்காரம் அமைத்தது வீணாகியது காரணம் கார்டன் ஏழு மணிக்கே முடிவிடுகின்றனர்.

20260422104353682.jpeg
இந்த வருடம் ஊட்டி மாவட்ட நிர்வாகம் தோட்டக்கலை துறை உள்ள குழப்பத்தில் பரிசளிப்பு விழா நடக்குமா என்பது மிக பெரிய கேள்வி குறி?!.
ஒரு வேளை புதிய வேளாண்மை துறை அமைச்சர் வினோத் வந்தாலும் ஆச்சிரியபடுவதிற்கில்லை.
இப்படியொரு குழப்பமான மர்மம் நிறைந்த ஊட்டி மலர் கண்காட்சி நடந்ததே இல்லை.